குடும்பமும் சில குளறுபாடுகளும்.

படிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்த வானொலியைக் கேட்டுக் கொண்டு தூங்குவதில் அப்படி ஒரு அலாதியப் பிரியம். அப்படி நான் ரசித்த சமயங்களில் எனக்குள் எழுந்த சில வினாக்கள்??????

வானொலியில் இந்த இல்லறத் தம்பதிகள் பேசும் நிகழ்ச்சிகள் நிறைய கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்வி, "குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகாமல் இருக்க‌ என்ன செய்ய வேண்டும்? " அதற்கு அனைத்து தம்பதிகளும் சொல்லும் ஒரே பதில் " எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்". இதனைக் கேட்கும் போது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மனிதனாகப் பிறந்து விட்டு எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதுதான்? இத்தகைய பதிலை புதுமணத் தம்பதிகள் கூறி இருந்தாலும், அனுபவம் பத்தவில்லை என நினைத்துக் கொள்ளலாம், ஆனால் முப்பது வருட இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இதனையேதான் சொல்கின்றனர்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் கடைசி மூச்சுள்ள வரை இந்த உலகில் ஏதோனும் ஒன்றை எதிர்பார்த்து தான் வாழ்கிறான். அப்படி இருக்க எப்படி தனது மனைவி/ கணவனிடம் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ்வது. திருமணம் என்பதே ஆண்/பெண் இருவரிடத்தும் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்குகின்றது அப்படி இருக்க திருமணம் முடிந்தது எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்?

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அதிக எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கை சுவாரிசயமாக செல்லும், இல்லையெனில் சலித்துப் போகும். சில சமயங்களில் எதிர்பார்ப்பவை அனைத்தும் நிறைவடைந்து விடுவதில்லை. அப்படி இருக்கும் போது ஏமாற்றமடையாமல் இருந்தால் பிரச்சனை எதுவும் உருவாகாது. ஆகையால் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், குறைந்த ஏமாற்றமும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.

அட என்னடா இவன் லூசுத்தனமா எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் ஏமாற்றம் இருக்க கூடாது, எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை என்றால் ஏமாற்றம் தானே மிஞ்சும்னு நினைக்கறது புரியுது.

உங்க வீட்டுக்காரி கிட்ட இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச வெரைட்டிய சமைக்க சொல்லிட்டு நீங்க உத்தியோகத்திற்க்கு போறிங்க, இரவு திரும்பி வந்து பாத்தா எப்பவும் சமைத்து வைப்ப‌தையே ச‌மைத்து வைத்துவிட்டு உங்க‌ ம‌னைவி உட‌ல்நிலை ச‌ரி இல்லைனு ப‌டுத்துவிட்டால், இவ‌ளுக்கு எப்ப‌ பாத்தாலும் நா என‌க்கு புடிச்சத‌‌ ச‌மைக்க‌ சொன்னா ம‌ட்டும் உட‌ம்பு ச‌ரி இல்லாம‌ போயிடுதுனு நினைத்து ஏமாற்றமடையாமல், அட‌ ந‌ம்ம‌ பொண்டாட்டி ந‌ம‌க்கு ச‌மைக்காம‌ வேற‌ யாருக்கு ச‌மைக்க‌ போறா? இன்னைக்கு இல்லைனா‌ நாளைக்கு ச‌மைத்து கொடுக்க‌ போறானு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.

அடுத்த‌து உங்க‌ வீட்டுக்காரர் கிட்ட‌ உங்க‌ள‌ இன்னைக்கு சாயங்காலம் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகச் சொல்றிங்க ஆனா அவர் கொஞ்சம் வேலை இருக்குமா, இந்த வாரம் வேண்டாம் அடுத்த வாரம் போக‌லாம்னு சொல்றார்னு வைங்க‌‌, இந்த‌ ம‌னுச‌னுக்கு எப்ப‌ நாம‌ ப‌ட‌த்துக்கு போக‌லாம்னு நினைக்க‌ற‌மோ அப்ப‌தான் வேலை அதிக‌மா இருக்கும்னு நினைக்காம‌, ந‌ம்ம‌ புருச‌ன் ந‌ம்ம‌ள‌ ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகாம‌ ப‌க்க‌த்து வீட்டுல‌ இருக்க‌றவ‌ளைய‌ கூட்டிட்டு போக‌ப்போறாரு, இந்த‌ வார‌ம் இல்ல‌ன என்ன அடுத்த‌ வார‌ம் கூட‌ போக‌லாமே, எப்ப‌டி இருந்தாலும் த‌சாவ‌தார‌ம் வ‌ருச‌க்க‌ண‌க்கில் ஓட‌த்தான‌ போகுதுனு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.

8 விமர்சனங்கள்:

துளசி கோபால் said...

உங்க பேரைப் பார்த்துட்டு உள்ளே வந்தேன்.

எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் நல்லது.

எல்லாம் ஒரு எதிர்பார்ப்புத்தான்.
உங்க பதிவுக்கு நீங்க செய்யலேன்னா பக்கத்து வீட்டுக்காரரா வந்து செய்வார்?

ச்சும்மா....:-)

தப்பா எடுத்துக்காதீங்க.

Thamizhmaangani said...

//த‌சாவ‌தார‌ம் வ‌ருச‌க்க‌ண‌க்கில் ஓட‌த்தான‌ போகுதுனு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.//

தசாவதாரம் திரைவிமர்சனம் சூப்பர்ர்ர்!!

மற்றபடி உங்க கட்டுரையும் அருமையா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து இன்னும் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கலாம்.

எதிர்பார்ப்பு என்பது அவங்கவங்க விருப்பத்தை பொருத்தது. எதிர்பார்ப்புகளை வைத்து கொண்டு அதை நிறைவேறாமல் போக, இருவருக்கும் சண்டை வர வாய்ப்பு உள்ளது. அதுக்கு எந்த ஒருவித எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிவிடலாமே என்று பலர் எண்ணுகிறார்கள்!!

கோபால் said...

இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்குங்க துளசி கோபால்
“ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்.
ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்”
வந்தமைக்கு நன்றி :)

கோபால் said...

/...த‌சாவ‌தார‌ம் வ‌ருச‌க்க‌ண‌க்கில் ஓட‌த்தான‌ போகுதுனு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.../

நிச்சயமாக எந்த ஒரு அழகியப் படைப்பும் வீண் போகாது...


/... எதிர்பார்ப்பு என்பது அவங்கவங்க விருப்பத்தை பொருத்தது. எதிர்பார்ப்புகளை வைத்து கொண்டு.../


எதையுமே எதிர்பார்ப்பதில்லை எனக் கூறி, அனைத்தையும் எதிர்பார்த்து தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர் என்பதே என் கருத்து :)

கருத்துக்கும் வந்தமைக்கும் நன்றி :)

SURYA said...

Nice joke about the run of dasavatharam..One yr..Haiyo Haiyo..Expectation, disappointment apparam Comedy...super appu

Anonymous said...

Annaae Surya yaaru nu taeriyudhanae...

கோபால் said...

Sorry Surya i was not able to find whom ur?

ethukku intha puthir... Nengalae sollidunga... :)

Thanks for visting :)

SaDhA said...

Intha orkut brother ai maranthutiya thambi...