பாட்டுப் பாட வா!!!

பள்ளி காலத்தில் நான் பாடிய பாடல்களை இங்கு வெளியிடுமாறு அன்புத் தோழன் ஸ்ரீ கேட்டு இருக்கிறார். "மொளச்சு மூணு எல விடுல" என எங்கய்யன் திட்டிய போது நான் பாடிய பாடல்கள்(சென்சார்) தான் நினைவுக்கு வந்தது. அதையும் தாண்டி கபடமில்லாத இதயத்துடன் சுற்றிச் திரிந்த காலத்திற்க்கு எனது மனம் என்னை அழைத்துச் சென்றது.

முதல் முதலாக நான் பாடிய பாடல்.இதுவரை இதில் இருந்த இனிமை நான் எந்தப் பாடலிலும் கேட்டதில்லை.

அ...ம்...மா...

க‌‌டைசி வ‌குப்புகளின் போது நான் பாடிய‌ பாடல். என‌க்கு மிக‌வும் பிடித்த‌ பாட‌ல்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வ‌த‌ன‌மென‌த் திக‌ழ்ப‌ர‌த‌க் க‌ண்ட‌மிதில்
தெக்க‌ண‌மும் அதிற்சிறந்த‌ திராவிட‌ந‌ல் திருநாடும்
த‌க்க‌சிறு பிறைநுத‌லும் த‌ரித்த‌ந‌றுந் திலக‌முமே!
அத்தில‌க‌ வாச‌னைபோல் அனைத்துல‌கும் இன்ப‌முற‌
எத்திசையும் புக‌ழ்ம‌ண‌க்க‌ இருந்த‌பெருந் த‌மிழ‌ணங்கே!
த‌மிழ‌ணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

எப்போதோ நான் என‌து பாட‌ புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. இன்றுவ‌ரை ம‌ற‌வாம‌ல் என் ம‌ன‌தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாட‌ல்.வ‌ரிக‌ள் கூட‌ ச‌ரியாக‌ தெரிய‌வில்லை, ஆனால் இன்றுவ‌ரை என் ம‌ன‌தை விட்டு ம‌றைய‌வில்லை.

ஆராரோ ஆரிராரோ
ஆறு லட்சம் வண்ணக்கிளி
செம்பவளத் தொட்டிலிலே
சீரார கண்ணுறங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ கண்ணுறங்கு...

இந்த பாடல்களை யாரு வெளியிட்டு இருக்க மாட்டார்கள் அல்லவா ஸ்ரீ? :)

தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 2

தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 1

தங்களது கருத்துக்களை ஒவ்வொருவராக கூறி அமர்ந்தனர். பெண்கள் தான் காரணம் என்ற அணியில் இருந்து திவ்யா பேச ஆரம்பித்தாள்.

" நா இங்க ஈவ் டீசிங்கிற்க்கு முழுக்காரணம் பெண்கள்தான்னு சொல்ல வர்ல, ஆனா பெண்களும் அதற்க்கு காரணம்னு தான் சொல்ல வர்றேன். இது யாருக்குமே தெரியரதில்ல. நா தாவணி அணிந்திருந்த காலத்துல தாய்மாமன் மட்டும் தான் கிண்டல் அடிச்சான், எப்போ சுடிதாருக்கு மாறினேனோ அப்ப சுத்தி இருக்கறவன் எல்லாம் கிண்டல் அடிக்கிறான். எதிர்தரப்புல ஒருத்தங்க சொன்னாங்க தாவணில இடுப்பு தெரியுது அதுனால தான் சுடிதாருக்கு மாறினேன்னு, சரியாத்தான் சொன்னாங்க, ஆனா இடுப்பு தெரியரதுக்கே இம்புட்டு ரோசம்ன, சுடிதார்ல லோநெக் போட்டுட்டு அலையரத என்னனு சொல்ல? அதப்பாத்தா பசங்க கிண்டல் அடிக்காம என்ன ஆராத்தியா எடுப்பாங்க? இதக்கேட்ட பெண்கள் சுதந்திரம்னு சொல்றாங்க, அப்ப ஆண்களுக்கு அவங்க நினைக்கறத சொல்றதுக்கு சுதந்திரம் இல்லையா? மேற்க்கத்திய கலாச்சாரத்த கடைபிடிக்க ஆரம்பிச்சா பசங்க கிண்டல் பண்ற‌தையும் மேற்க்கத்திய பெண்கள் மாதிரி சகஜமா எடுத்துக்கணும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன பிரச்சனை பெண்களுக்குத்தான். அப்புறம் இந்த நைட்டி, அது நைட்டியா இல்ல "டே"டியானு தெரியல, எப்பப்பாத்தாலும் அதையே போட்டுட்டு அலையறது. நைட்டிய போட்டுட்டு இவங்க வாசல பெருக்கினா பசங்க ஜொள்ளுவிடறாங்களாம். அதுவே சேலைய ஒழுங்க கட்டிட்டு பெருக்கினா யாரு ஜொள்ளுவிடுவாங்க?. இந்த டீ‍சர்ட்டையும் ஜின்ஸ்சையும் போட்டுட்டு பாவம் இந்த பொண்ணுங்களே படாதபாடு படுறாங்க. நிக்கறப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, டீசர்ட்டு சரியா ஜின்ஸ முட்டிட்டு இருக்கும், உட்காரும் போது அவங்க முதுகு தெரிய கூடாதுனு அந்த டீசர்ட்ட போட்டு இழு இழுனு இழுக்கறத பாத்தா சிரிப்புதான் வரும், இத பாத்தா பசங்களுக்கு கிண்டல் அடிக்காம வேற என்ன தோணும்.ஆடையோட நம்மளையும் அழகா தோற்றமளிக்கச் செய்வது தான் கலாச்சார மாற்றம் ஆபாசமா இல்ல .இத எல்லாம் பொண்களுக்கு சொன்னா அது அவங்க சுதந்திரத்த மறுக்கறதா நினைக்கறாங்க. இப்படிதாங்க ஒரு நாள் காந்திபுரம் பஸ்டேண்டுடல நின்னுட்டு இருந்தேன், எம்பக்கத்துல ரெண்டு பசங்க கேம்பஸ் இண்டர்வியுவ பத்தி பேசிட்டு இருந்தாங்க, அட பரவாலையா பசங்களும் முன்னேற இந்த வயசுலையே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு சந்தோசப் பட்டேன், திடீர்னு சத்தம் பத்தா ரெண்டு பொண்ணுங்க கட்டி புடிச்சுட்டு முத்தங்கொடுத்துட்டு இருந்தாங்க, பாத்து ரொம்ப நாளாச்சு போல, இத பாத்த அந்த பசங்க கருமம்டா, இங்கையே இப்படினா? என சொல்றத கேட்டேன். அதுவரைக்கு ஒழுங்க இருந்த பசங்கள இப்படி பேச வெச்சது அந்த பொண்ணுங்களோட செயல் தான். கை கொடுக்கலாம், கட்டிப்புடிக்கலாம் ஆனா முத்தம் அதுவும் பொது இடத்துல அவசியமா? கொஞ்சம் கூட இங்கீதம் தெரிய வேண்டாம்? ஈவ் டீசிங்கிற்க்கு ஆண்கள் 70% காரணம்ன‌ மீதி 30% பெண்களும் காரணம், அந்த 30% பெண்ணுங்க ஒழுங்க இருந்தா ஆண்கள ஒரு 20% கண்டிப்பா குறைவாங்க.தயவு செஞ்சு இத எல்லா பொண்ணுங்களும் புரிஞ்சுக்கணும். வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என கூறி இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் கைதட்டல்கள் ஓய சிறிது நேரம் ஆனது. இதை பார்த்த சக்திக்கு அந்த பெண்ணின் கையைப் பிடித்து குலுக்க‌ வேண்டும் போலிருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒரு பெண்ணே த‌ன‌து இன‌த்தின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டிய‌து அவ‌னுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. இதுவே அவ‌னுக்கு அந்த‌ பெண்ணின் மீது ஒருவித‌ ம‌திப்பை அவ‌ன‌து ம‌ன‌தில் ஏற்ப்ப‌டுத்திய‌து. இத‌னை வெளிக்காட்டிக் கொடுக்காம‌ல் அந்த‌ பெண்ணை ம‌ன‌திற்க்குள் வாழ்த்தினான். அவ‌ள‌து முக‌மோ அவ‌ன‌து ம‌ன‌திற்க்குள் வாழ‌ ஆர‌ம்பித்த‌து.

சில‌ தின‌ங்க‌ளுக்கு பிறகு க‌ல்லூரி பூங்காவில் திவ்யா தனியாக அம‌ர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது இர‌ண்டு ஆண்க‌ள் பேசும் குர‌ல் கேட்ட‌து.

"டேய் ம‌ச்சா ந‌ம்ம‌ தேடுஇய‌ர் மாத‌வி இருக்காள‌ அவ‌ள‌ பிக்கப் ப‌ண்ணீட்டேன்டா, செம‌ க‌ம்ப‌னி கொடுக்க‌றாடா, பைக்குல‌ கூப்பிட்ட‌ வ‌ர்றா, சினிமாக்கு கூப்பிட்டா வ‌ர்றா செம‌ ஜாலியா என்ஜாய்மெண்டு தான்டா, நீயும் டிரை ப‌ண்ணிப்பாருடா சிட்டு சிக்கிச்சுனா ஜ‌மாய்க்கலாம்டா" என‌ க‌ண்ண‌டித்த‌வாரு சொன்னான்.

"தூ நாயே இத‌ சொல்ல‌ உன‌க்கு வெட்க‌மா இல்ல‌"

"டேய் என்ன‌டா ந‌ல்ல‌வ‌ன் மாதிரி பேச‌ற‌, உன‌க்கு பொண்ணுங்க‌ளையே புடிக்காதேனுதான் இத‌ சொன்னேன்"

"டேய்!!! பொண்ணுங்க‌ளோட‌ கேர‌க்ட‌ர் தான் புடிக்காது, அதுக்காக‌ இது நாள் வ‌ரைக்கு ஒரு பொண்ண‌ த‌ப்பா பாத்த‌தும் இல்ல‌ நினைச்ச‌தும் இல்ல‌, பொண்ணுங்க‌ என்ன‌ ஊறுகாய் பொருளா? உங்க‌ போதைக்கு தொட்டுக்க‌? ஒரு த‌ங்க‌ச்சி இருக்க‌ற‌ நீயே இப்ப‌டி பேச உன‌க்கு வெக்க‌மா இல்லை? இதுக்கு மேல‌ என்ன‌ பேச‌ வெச்சுடாத‌" என‌ கூறி கோப‌த்தில் ச‌க்தி ந‌ட‌ந்து கேன்டினுக்கு சென்றான்.

தொடரும்...

என்ன ஒரு வில்லத்தனம்?


மின்னஞ்சல்ல வந்தது...
இஞ்சி இடுப்பழகி...

பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும்

நா அப்புறம் என்னோட அம்மணிக‌, ஆத்தா, அப்பாரு, பெரியப்பன், பெரியம்மா, அண்ணன் இப்படி எல்லாரு எங்க பெரியப்பா வூட்டுத் திண்ணைல உக்காந்து ஊரு கதை பேசிட்டு இருந்தங்க. திடீர்னு என்னோட செல்போன் சிணுங்குச்சுங்க. அட நமக்கு கூட "ஒருத்தன்" கால் பண்றான்டோய்னு சந்தோசத்துல எடுத்து பேச ஆரம்பிச்சா!!! அட எதிர்தரப்புல ஒரு பொண்ணு!!! காதுல தேன்பாயும் அப்படினு பல பேர் சொல்ல கேள்வி பட்ட நா அன்னைக்குத்தாங்க உண்மையாலுமே அத அனுபவிச்சேன்(ஏன்னா இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுகூட எங்கூட செல்போன்ல பேசினது இல்லங்க :( )ஆனா பேசி முடிச்சதும் இன்னும் நம்ம நாட்டு பொண்ணுங்க ரொம்ப ரொம்ப முன்னேறனும்னு எனக்கு தோணிச்சுங்க. நீங்களும் இத படிச்சு பாத்துட்டு சொல்லுங்க.

சீன்:
நா செல்போன்ல‌ பேச‌ ஆர‌ம்பிக்க‌...

"ஹ‌லோ..!"

"ஹ‌லோ..!" (பொண்ணு..! டேய் ம‌ச்சா..! இது க‌ன‌வா??? நிஜ‌மா???)

"யாரு பேச‌றிங்க‌"

"நாந்தா பேச‌றேன்." ( என்ன‌டா இது பார்த்திப‌ன் கேசு மாதரி தெரியுது... ப‌ர‌வால‌ ஒரு பொண்ணு உங்கிட‌ பேச‌ற‌தே பெரிய‌விசய‌ம் பேசு பேசு...)

"நாந்தானா??? என‌க்கு யாருனு தெரிய‌லிங்க"

"ஹ்ம்ம் என்ன‌த்தெரியாதா உங்க‌ளுக்கு" ( இது என்ன‌டா வில்ல‌ங்க‌மா போச்சு)

" உண்மையாலுமே நீங்க‌ யாருனு தெரியல... உங்க பேரு என்ன?"

"ஹ்ம்ம் நா சங்கீதா பேசறன்" (நம்ம அம்மணிங்க‌ யாராவ‌து இந்த‌ பேர்ல‌ இருப்ப‌ங்க‌ளா? இல்லையே???)

"சங்கீதாவா? அப்படியாரும் எனக்குத் தெரியாதுங்கலே"

"இப்ப‌டி எல்லாம் பேசினா நா போன‌ க‌ட் ப‌ண்ணிடுவேன்" (என்ன‌ கொடுமை சார் இது)

"ஐயோ..! ச‌த்திய‌மா நீங்க‌ யாருனு என‌க்கு தெரிய‌ல‌... க‌ட் ப‌ண்ணுங்க‌...

"இங்க‌ பாருங்க‌ காசு (டெலிபோன் பூத்) வீணா போகுது உங்க‌ கிண்டல் போதும்" ( கிண்ட‌லா??? )

(இப்பத்தான் எனக்கே புரியது செல்போன் அம்மணிக்கு ஒரு ஆள் இருக்கறான் என்பது)

"அத‌த்தாங்க‌ நானும் சொல்றேன் காசு வீணாத்தான் போகுது க‌ட் ப‌ண்ணுங்க‌... நீங்க நெனைக்கற ஆள் நானில்லை"

"ஒழுங்கா பேசுங்க‌ இல்லாட்டி இதுக்கு அப்புற‌ம் பேச‌வே மாட்டேன்" (இது என்ன‌டா வ‌ம்பா போச்சு)

"உங்க‌ளுக்கு எந்த‌ நெம்ப‌ர் வேணும்"

"9942....." (ஆளோட‌ நெப்ப‌ர‌கூட‌ ச‌ரியா ட‌ய‌ல் ப‌ண்ண‌த் தெரிய‌ல‌ ஆண்ட‌வா..!)

"இது 99942... நீங்க‌ த‌ப்பா ட‌ய‌ல் ப‌ண்ணி இருக்கீங்க‌"

"நெப்ப‌ர் தெரிய‌ மாட்டிங்குதே" ( காயின்பூத்துல‌ நெம்ப‌ர‌ தேடுற‌ மொத‌ப் பொண்ணு நீ யாத்தான‌ம்மா இருக்கும்)

"ஹ‌லோ..! அது காயிபூத்துனு நெனைக்க‌றேன் அதுல‌ அட்ட‌ன் ப‌ண்ணிய‌துக்கு அப்புற‌ம் நெம்ப‌ர் தெரியாது"

"ஐயோ..! ஆமாங்க‌ இது காயின்பூத்துதான் சாரி சாரி தெரியாம‌ கால் ப‌ண்ணிட்டேன்" (எங்க‌ போய் முட்டிக்க‌ற‌துனே தெரியல‌, ச‌ரி ப‌ர‌வால‌ பேசு பேசு)

"ச‌ரி அத‌விடுங்க‌ என்ன‌ ப‌டிக்கறீங்க‌?"

"நா B. Com ப‌டிக்க‌றேன்" ( இப்படி இருந்தா B. Com ப‌டிச்சு கிழிச்ச‌ மாதிரி தான்)

"எந்த‌ காலேஜ்"

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்....
கால் க‌ட்டாயிடுச்சு...

ச‌ரியா என‌க்கு மூணு நிமிஷமாச்சுங்க‌ அந்த‌ பொண்ணுக்கு நான் அவ‌ளோட‌ ஆளு இல்ல‌னு புரிய‌ வைக்க‌. த‌ன்னோட‌ காத‌ல‌னோட‌ குர‌ல‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ காத‌லிய‌ அப்ப‌த்தான் நா ச‌ந்திக்கறேன். என்ன‌தா இருந்தாலும் இந்த‌ ப‌ச‌ங்க‌ ப‌ச‌ங்க‌ தான் ஐம்ப‌து பொண்ணுங்க‌ கூட‌ பேசினாலும் ஹ‌லோனு ஒரு பொண்ணு சொன்னா "சொல்லுடா (அந்த‌ பொண்ணூட‌ பேரு)" ந‌ச்சுனு சொல்லுவாங்க.என்னத்த சொல்றது??? இத நெனச்சு சிரிக்கறதா அழுகறதானே தெரியல!!!! ஹ்ம்ம் இருப‌த்துத்தியொன்றாம் நூற்றாண்டுல‌ இன்னும் பொண்ணுங்க‌ நிறையா முன்னேற‌னும் போல‌.