தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 2

தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 1

தங்களது கருத்துக்களை ஒவ்வொருவராக கூறி அமர்ந்தனர். பெண்கள் தான் காரணம் என்ற அணியில் இருந்து திவ்யா பேச ஆரம்பித்தாள்.

" நா இங்க ஈவ் டீசிங்கிற்க்கு முழுக்காரணம் பெண்கள்தான்னு சொல்ல வர்ல, ஆனா பெண்களும் அதற்க்கு காரணம்னு தான் சொல்ல வர்றேன். இது யாருக்குமே தெரியரதில்ல. நா தாவணி அணிந்திருந்த காலத்துல தாய்மாமன் மட்டும் தான் கிண்டல் அடிச்சான், எப்போ சுடிதாருக்கு மாறினேனோ அப்ப சுத்தி இருக்கறவன் எல்லாம் கிண்டல் அடிக்கிறான். எதிர்தரப்புல ஒருத்தங்க சொன்னாங்க தாவணில இடுப்பு தெரியுது அதுனால தான் சுடிதாருக்கு மாறினேன்னு, சரியாத்தான் சொன்னாங்க, ஆனா இடுப்பு தெரியரதுக்கே இம்புட்டு ரோசம்ன, சுடிதார்ல லோநெக் போட்டுட்டு அலையரத என்னனு சொல்ல? அதப்பாத்தா பசங்க கிண்டல் அடிக்காம என்ன ஆராத்தியா எடுப்பாங்க? இதக்கேட்ட பெண்கள் சுதந்திரம்னு சொல்றாங்க, அப்ப ஆண்களுக்கு அவங்க நினைக்கறத சொல்றதுக்கு சுதந்திரம் இல்லையா? மேற்க்கத்திய கலாச்சாரத்த கடைபிடிக்க ஆரம்பிச்சா பசங்க கிண்டல் பண்ற‌தையும் மேற்க்கத்திய பெண்கள் மாதிரி சகஜமா எடுத்துக்கணும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன பிரச்சனை பெண்களுக்குத்தான். அப்புறம் இந்த நைட்டி, அது நைட்டியா இல்ல "டே"டியானு தெரியல, எப்பப்பாத்தாலும் அதையே போட்டுட்டு அலையறது. நைட்டிய போட்டுட்டு இவங்க வாசல பெருக்கினா பசங்க ஜொள்ளுவிடறாங்களாம். அதுவே சேலைய ஒழுங்க கட்டிட்டு பெருக்கினா யாரு ஜொள்ளுவிடுவாங்க?. இந்த டீ‍சர்ட்டையும் ஜின்ஸ்சையும் போட்டுட்டு பாவம் இந்த பொண்ணுங்களே படாதபாடு படுறாங்க. நிக்கறப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, டீசர்ட்டு சரியா ஜின்ஸ முட்டிட்டு இருக்கும், உட்காரும் போது அவங்க முதுகு தெரிய கூடாதுனு அந்த டீசர்ட்ட போட்டு இழு இழுனு இழுக்கறத பாத்தா சிரிப்புதான் வரும், இத பாத்தா பசங்களுக்கு கிண்டல் அடிக்காம வேற என்ன தோணும்.ஆடையோட நம்மளையும் அழகா தோற்றமளிக்கச் செய்வது தான் கலாச்சார மாற்றம் ஆபாசமா இல்ல .இத எல்லாம் பொண்களுக்கு சொன்னா அது அவங்க சுதந்திரத்த மறுக்கறதா நினைக்கறாங்க. இப்படிதாங்க ஒரு நாள் காந்திபுரம் பஸ்டேண்டுடல நின்னுட்டு இருந்தேன், எம்பக்கத்துல ரெண்டு பசங்க கேம்பஸ் இண்டர்வியுவ பத்தி பேசிட்டு இருந்தாங்க, அட பரவாலையா பசங்களும் முன்னேற இந்த வயசுலையே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு சந்தோசப் பட்டேன், திடீர்னு சத்தம் பத்தா ரெண்டு பொண்ணுங்க கட்டி புடிச்சுட்டு முத்தங்கொடுத்துட்டு இருந்தாங்க, பாத்து ரொம்ப நாளாச்சு போல, இத பாத்த அந்த பசங்க கருமம்டா, இங்கையே இப்படினா? என சொல்றத கேட்டேன். அதுவரைக்கு ஒழுங்க இருந்த பசங்கள இப்படி பேச வெச்சது அந்த பொண்ணுங்களோட செயல் தான். கை கொடுக்கலாம், கட்டிப்புடிக்கலாம் ஆனா முத்தம் அதுவும் பொது இடத்துல அவசியமா? கொஞ்சம் கூட இங்கீதம் தெரிய வேண்டாம்? ஈவ் டீசிங்கிற்க்கு ஆண்கள் 70% காரணம்ன‌ மீதி 30% பெண்களும் காரணம், அந்த 30% பெண்ணுங்க ஒழுங்க இருந்தா ஆண்கள ஒரு 20% கண்டிப்பா குறைவாங்க.தயவு செஞ்சு இத எல்லா பொண்ணுங்களும் புரிஞ்சுக்கணும். வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என கூறி இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் கைதட்டல்கள் ஓய சிறிது நேரம் ஆனது. இதை பார்த்த சக்திக்கு அந்த பெண்ணின் கையைப் பிடித்து குலுக்க‌ வேண்டும் போலிருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒரு பெண்ணே த‌ன‌து இன‌த்தின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டிய‌து அவ‌னுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. இதுவே அவ‌னுக்கு அந்த‌ பெண்ணின் மீது ஒருவித‌ ம‌திப்பை அவ‌ன‌து ம‌ன‌தில் ஏற்ப்ப‌டுத்திய‌து. இத‌னை வெளிக்காட்டிக் கொடுக்காம‌ல் அந்த‌ பெண்ணை ம‌ன‌திற்க்குள் வாழ்த்தினான். அவ‌ள‌து முக‌மோ அவ‌ன‌து ம‌ன‌திற்க்குள் வாழ‌ ஆர‌ம்பித்த‌து.

சில‌ தின‌ங்க‌ளுக்கு பிறகு க‌ல்லூரி பூங்காவில் திவ்யா தனியாக அம‌ர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது இர‌ண்டு ஆண்க‌ள் பேசும் குர‌ல் கேட்ட‌து.

"டேய் ம‌ச்சா ந‌ம்ம‌ தேடுஇய‌ர் மாத‌வி இருக்காள‌ அவ‌ள‌ பிக்கப் ப‌ண்ணீட்டேன்டா, செம‌ க‌ம்ப‌னி கொடுக்க‌றாடா, பைக்குல‌ கூப்பிட்ட‌ வ‌ர்றா, சினிமாக்கு கூப்பிட்டா வ‌ர்றா செம‌ ஜாலியா என்ஜாய்மெண்டு தான்டா, நீயும் டிரை ப‌ண்ணிப்பாருடா சிட்டு சிக்கிச்சுனா ஜ‌மாய்க்கலாம்டா" என‌ க‌ண்ண‌டித்த‌வாரு சொன்னான்.

"தூ நாயே இத‌ சொல்ல‌ உன‌க்கு வெட்க‌மா இல்ல‌"

"டேய் என்ன‌டா ந‌ல்ல‌வ‌ன் மாதிரி பேச‌ற‌, உன‌க்கு பொண்ணுங்க‌ளையே புடிக்காதேனுதான் இத‌ சொன்னேன்"

"டேய்!!! பொண்ணுங்க‌ளோட‌ கேர‌க்ட‌ர் தான் புடிக்காது, அதுக்காக‌ இது நாள் வ‌ரைக்கு ஒரு பொண்ண‌ த‌ப்பா பாத்த‌தும் இல்ல‌ நினைச்ச‌தும் இல்ல‌, பொண்ணுங்க‌ என்ன‌ ஊறுகாய் பொருளா? உங்க‌ போதைக்கு தொட்டுக்க‌? ஒரு த‌ங்க‌ச்சி இருக்க‌ற‌ நீயே இப்ப‌டி பேச உன‌க்கு வெக்க‌மா இல்லை? இதுக்கு மேல‌ என்ன‌ பேச‌ வெச்சுடாத‌" என‌ கூறி கோப‌த்தில் ச‌க்தி ந‌ட‌ந்து கேன்டினுக்கு சென்றான்.

தொடரும்...

0 விமர்சனங்கள்: