பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும்

நா அப்புறம் என்னோட அம்மணிக‌, ஆத்தா, அப்பாரு, பெரியப்பன், பெரியம்மா, அண்ணன் இப்படி எல்லாரு எங்க பெரியப்பா வூட்டுத் திண்ணைல உக்காந்து ஊரு கதை பேசிட்டு இருந்தங்க. திடீர்னு என்னோட செல்போன் சிணுங்குச்சுங்க. அட நமக்கு கூட "ஒருத்தன்" கால் பண்றான்டோய்னு சந்தோசத்துல எடுத்து பேச ஆரம்பிச்சா!!! அட எதிர்தரப்புல ஒரு பொண்ணு!!! காதுல தேன்பாயும் அப்படினு பல பேர் சொல்ல கேள்வி பட்ட நா அன்னைக்குத்தாங்க உண்மையாலுமே அத அனுபவிச்சேன்(ஏன்னா இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுகூட எங்கூட செல்போன்ல பேசினது இல்லங்க :( )ஆனா பேசி முடிச்சதும் இன்னும் நம்ம நாட்டு பொண்ணுங்க ரொம்ப ரொம்ப முன்னேறனும்னு எனக்கு தோணிச்சுங்க. நீங்களும் இத படிச்சு பாத்துட்டு சொல்லுங்க.

சீன்:
நா செல்போன்ல‌ பேச‌ ஆர‌ம்பிக்க‌...

"ஹ‌லோ..!"

"ஹ‌லோ..!" (பொண்ணு..! டேய் ம‌ச்சா..! இது க‌ன‌வா??? நிஜ‌மா???)

"யாரு பேச‌றிங்க‌"

"நாந்தா பேச‌றேன்." ( என்ன‌டா இது பார்த்திப‌ன் கேசு மாதரி தெரியுது... ப‌ர‌வால‌ ஒரு பொண்ணு உங்கிட‌ பேச‌ற‌தே பெரிய‌விசய‌ம் பேசு பேசு...)

"நாந்தானா??? என‌க்கு யாருனு தெரிய‌லிங்க"

"ஹ்ம்ம் என்ன‌த்தெரியாதா உங்க‌ளுக்கு" ( இது என்ன‌டா வில்ல‌ங்க‌மா போச்சு)

" உண்மையாலுமே நீங்க‌ யாருனு தெரியல... உங்க பேரு என்ன?"

"ஹ்ம்ம் நா சங்கீதா பேசறன்" (நம்ம அம்மணிங்க‌ யாராவ‌து இந்த‌ பேர்ல‌ இருப்ப‌ங்க‌ளா? இல்லையே???)

"சங்கீதாவா? அப்படியாரும் எனக்குத் தெரியாதுங்கலே"

"இப்ப‌டி எல்லாம் பேசினா நா போன‌ க‌ட் ப‌ண்ணிடுவேன்" (என்ன‌ கொடுமை சார் இது)

"ஐயோ..! ச‌த்திய‌மா நீங்க‌ யாருனு என‌க்கு தெரிய‌ல‌... க‌ட் ப‌ண்ணுங்க‌...

"இங்க‌ பாருங்க‌ காசு (டெலிபோன் பூத்) வீணா போகுது உங்க‌ கிண்டல் போதும்" ( கிண்ட‌லா??? )

(இப்பத்தான் எனக்கே புரியது செல்போன் அம்மணிக்கு ஒரு ஆள் இருக்கறான் என்பது)

"அத‌த்தாங்க‌ நானும் சொல்றேன் காசு வீணாத்தான் போகுது க‌ட் ப‌ண்ணுங்க‌... நீங்க நெனைக்கற ஆள் நானில்லை"

"ஒழுங்கா பேசுங்க‌ இல்லாட்டி இதுக்கு அப்புற‌ம் பேச‌வே மாட்டேன்" (இது என்ன‌டா வ‌ம்பா போச்சு)

"உங்க‌ளுக்கு எந்த‌ நெம்ப‌ர் வேணும்"

"9942....." (ஆளோட‌ நெப்ப‌ர‌கூட‌ ச‌ரியா ட‌ய‌ல் ப‌ண்ண‌த் தெரிய‌ல‌ ஆண்ட‌வா..!)

"இது 99942... நீங்க‌ த‌ப்பா ட‌ய‌ல் ப‌ண்ணி இருக்கீங்க‌"

"நெப்ப‌ர் தெரிய‌ மாட்டிங்குதே" ( காயின்பூத்துல‌ நெம்ப‌ர‌ தேடுற‌ மொத‌ப் பொண்ணு நீ யாத்தான‌ம்மா இருக்கும்)

"ஹ‌லோ..! அது காயிபூத்துனு நெனைக்க‌றேன் அதுல‌ அட்ட‌ன் ப‌ண்ணிய‌துக்கு அப்புற‌ம் நெம்ப‌ர் தெரியாது"

"ஐயோ..! ஆமாங்க‌ இது காயின்பூத்துதான் சாரி சாரி தெரியாம‌ கால் ப‌ண்ணிட்டேன்" (எங்க‌ போய் முட்டிக்க‌ற‌துனே தெரியல‌, ச‌ரி ப‌ர‌வால‌ பேசு பேசு)

"ச‌ரி அத‌விடுங்க‌ என்ன‌ ப‌டிக்கறீங்க‌?"

"நா B. Com ப‌டிக்க‌றேன்" ( இப்படி இருந்தா B. Com ப‌டிச்சு கிழிச்ச‌ மாதிரி தான்)

"எந்த‌ காலேஜ்"

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்....
கால் க‌ட்டாயிடுச்சு...

ச‌ரியா என‌க்கு மூணு நிமிஷமாச்சுங்க‌ அந்த‌ பொண்ணுக்கு நான் அவ‌ளோட‌ ஆளு இல்ல‌னு புரிய‌ வைக்க‌. த‌ன்னோட‌ காத‌ல‌னோட‌ குர‌ல‌ க‌ண்டு பிடிக்க‌ முடியாத‌ காத‌லிய‌ அப்ப‌த்தான் நா ச‌ந்திக்கறேன். என்ன‌தா இருந்தாலும் இந்த‌ ப‌ச‌ங்க‌ ப‌ச‌ங்க‌ தான் ஐம்ப‌து பொண்ணுங்க‌ கூட‌ பேசினாலும் ஹ‌லோனு ஒரு பொண்ணு சொன்னா "சொல்லுடா (அந்த‌ பொண்ணூட‌ பேரு)" ந‌ச்சுனு சொல்லுவாங்க.என்னத்த சொல்றது??? இத நெனச்சு சிரிக்கறதா அழுகறதானே தெரியல!!!! ஹ்ம்ம் இருப‌த்துத்தியொன்றாம் நூற்றாண்டுல‌ இன்னும் பொண்ணுங்க‌ நிறையா முன்னேற‌னும் போல‌.

4 விமர்சனங்கள்:

ச.பிரேம்குமார் said...

அடப்பாவீகளா? நான் ஏதோ சமூக கருத்தாக்கும் அப்படின்னு வந்து பாத்தா.... ஸ்ஸ்ஸ் முடியல‌

கோபால் said...

வாங்க பிரேம்...
சரியா போச்சு...கருத்தா???
வாலிப வயசுல கருத்து எல்லாம் எங்க வரும்?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வாயில தேன் பாஞ்சா நல்லாருக்கும். காதுல தேன் பாஞ்சா காது கெட்டுப்போய்டும் சார்.

பிரேம்குமார், நான்கூட இந்தாளு என்னதான அப்படி புதுசா கருத்து சொல்லப்போறார்னு வந்தா..எனக்கும் முடியல..

இன்னா சார், வாலிப வயசுங்கறீங்க..ஜஸட் மூணு நிமிடம்தான் பேசியிருக்கிறீங்க. பொண்ணுதான..காலாய்க்க வேண்டியதுதான சார்.

கோபால் said...

நா கால் பண்ணலைங்க கௌபாய்மது வந்த கால அட்டன் பண்ணினேன், அதுனால தான் மூணு நிமிஷம் :( நா பண்ணி இருந்தா சர்வீஸ் ப்ரொவைடரா பாத்து நெட்வொர்க்க நிறுத்தின தான் உண்டு

ஹி ஹி ஹி...

வந்தமைக்கு நன்றிங்க‌