... இடுக்கண் களைவதாம் நட்பு

ஞாயிறு காலை, புல்லின் மீது பனித்துளி காதல் கொண்டிருந்த நேரம், ஜன்னலின் வழியே வந்த பனிக்காற்றை ரசித்துக் கொண்டே நித்யா விஸ்வாவை அழைத்தாள்.
" ஹலோ..."

"டேய் சோம்பேறிக்கழுதை இன்னும் என்னடா தூக்கம்?"
"ஹ்ம்ம்... உனக்கு வேற வேலையே இல்லையா? கோழி மாதிரி காலைலையே கூவி தூக்கத்த கொடுக்கற"

" என்னது நா கோழியா? , இதுவே வினிதா கூப்பிட்டு இருந்தா இப்படி சொல்லுவியா? பல்ல இளிச்சுகிட்டு பேசி இருப்ப‌"

"ஐயோ ஆத்தா காலைலையே வேண்டாம், என்னனு சொல்லு"

"இன்னைக்கு உனக்கு பிரேக்பாஸ்ட் எங்க வீட்டுலனு தெரியாதா? சீக்கரம் கிளம்பி வா"

"உங்க அம்மா சமையல் தான? என்ன கொல்ல நீ சதித்திட்டம் எதுவும் பண்ணலல"

"ச்சீச்சீ அந்த கெட்டப் பழக்கத்தை எல்லாம் நான் கத்துக்க மாட்டேன் நீ சீக்கரம் கிளம்பி வா"

ஒரே கல்லூரி ஒரே வகுப்பு. விஸ்வா கல்லூரியின் அருகில் அறை எடுத்துத் தங்கி இருந்தான், நித்யாவிற்க்கு அதுதான் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் விஸ்வாவிற்க்கு உணவு நித்யாவின் வீட்டில், இன்று சற்று நேரம் ஆனதால் இந்த அழைப்பு. அவர்கள் இருவரையும் காதலர்கள் என்றுதான் நம்பி இருந்தனர் மற்றவர்கள் விஸ்வா வினிதாவை காதலிக்கும் வரை.

நித்யாவின் வீட்டில் "இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா"

"ஓ..! இப்ப இந்த கூத்து வேற ஆரம்பிச்சுட்டிங்களா, ஆமாங்கமா இப்பவே ஒருத்தனோட வாழக்கைய கொடுமையாக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல இளிச்சவாயன பாத்து தள்ளிவிட்டுவிடலாம்."

"டேய் நீ அடிவாங்க போற இப்ப, உன்ன கட்டிக்கப் போறவளோட வாழ்க்கை தான் கொடுமையாகப் போகுது சரியா... எனக்கு சூரியா மாதிரி ஒருத்தன் கிடைப்பான். உனக்குத்தான் மோகினி பிசாசு கிடைச்சு இருக்கு. அம்மா நீ பிசாசுங்க குடும்பம் நடத்தறதப் பாக்கப்போற"

"ஏய் அவளைப்பத்தி பேசாதனு எத்தனதடவ உனக்கு சொல்றது. அம்மா நீங்க ரெண்டு ஜந்துக்கள் குடும்பம் நடத்தறதத்தான் பாக்கப்போறிங்க"

"நீதான்டா ஜந்து அம்மா இங்க பாருமா என்ன ஜந்துனு சொல்றான்"

"அடடா நீங்க ரெண்டு பேரு எப்படித்தான் பிரண்ட்ஸா இருக்கறீங்களோ. எப்பப்பாத்தாலும் சண்டை. அவன் சாப்பிடுற வரைக்கும் கொஞ்சம் அமைதியாத்தான் இரேன்டி"

அப்போது அவனது தொலைபேசி அழைக்க, அதில் வினிதா. பேசிய படியே வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"மெதுவா சப்பிடுடா, எதுக்கு இப்படி அவசரமா கொட்டிட்டு இருக்க?"

"இல்ல நித்தீ, ஏதோ அவசரமா வினிதா வரச்சொன்னா அதனால தான்"

"அதுதான பாத்தேன். டேய் கண்ணா கொஞ்சம் உன்னோடக் காதல சீக்கிரம் முடிச்சுட்டு வாடா. சாயங்காலம் எனக்கு துணி எடுக்கப் போகணும்"

"சரி சரி... சீக்கிரம் வர்றேன்"

மாலை நேரமாகியும் விஸ்வா வரவில்லை. அவனது தொலைபேசியை அழைத்தபோதும் அவன் கிடைக்கவில்லை. சில நாட்கள் கல்லூரிக்கும் அவன் வரவில்லை. என்னவென்று நித்யா அறியமுயன்றபோதுதான் அந்த செய்தி அவளுக்கு தெரியவந்தது. ஏதோ சிலக் காரணங்களால் வினிதா அவனை விட்டு விலகிவிட்டாள் என்பது. இதனைக் கேட்டதும் அவள் மனம் ரணமானது. தனது நண்பனுக்கு இப்படி ஒரு நிலைவருமென நினைத்துப்பார்க்கவில்லை அவள். விஸ்வாவிடம் பேசி காரணத்தை அறிய முயற்ச்சித்தாள். ஆனால் அவன் இப்போதெல்லாம் அதிகமாக யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவளிடமும் கூட சரியாக அவன் பேசவில்லை. இதனைப் பற்றி அவள் பேச முற்ப்படும் போதெல்லாம் அவன் தவிர்த்தான். பல நாட்கள் முயன்று வினிதாவிடம் பல முறை பேசியும் அவளால் வினிதாவின் மனதை மாற்ற முடியவில்லை. தங்களுக்குள் எந்த ஒரு உறவுமில்லை என முடிவாக வினிதா கூறிவிட்டாள். சில வாரங்கள் இப்படியே சென்றன.

விஸ்வா யாரிடமும் சரிவர பேசுவதில்லை. கல்லூரிக்கு சரிவர வருவதில்லை. இதனால் நித்யாவிற்க்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவனை எப்படி இந்தச் சூழலிருந்து மீட்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவனது நிலை இன்னமும் மோசமாகிக் கொண்டுதானிருந்தது. ஒரு வார இறுதியில் அவனது தொடர்பு கொண்டாள்.

"ஹலோ"

"ஹலோ, நித்யா நா சிவா பேசறேன், விஸ்வா தூங்கிட்டு இருக்கான்"

"சிவா, விஸ்வா கிட்ட பேசணும் கொஞ்சம் அவன எழுப்பி அவன்கிட்ட கொடு ப்ளீஸ்"

"இல்ல நித்யா அவ இப்ப பேசற மாதிரி இல்ல, நீ நாளைக்கு காலைல கூப்பிடு"

"இல்ல, இப்பவே பேசணும்"

"இல்ல நித்..யா, அவன் இப்ப பேச..."

"உண்மையச் சொல்லு சிவா, அங்க என்ன நடக்குது?"

"அவ கொஞ்ச நாளா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான். நா என்ன சொல்லியும் கேட்காம எனக்குத் தெரியாம போய் குடிச்சுட்டு வர்றான்."

"என்ன குடிக்கறானா? இதை ஏன் எங்கிட்ட நீ முன்னமே சொல்லல"

"அவன் தான் இதப்பத்தி உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னான்"

"அவன் சொன்னா? என்ன சிவா நீ?, சரி அவன நா நாளைக்கு பாக்க‌ வர்றேன்னு சொல்லு"

"ஹும்ம் சரி.."

விண்கல் மோதி கட்டுபாடு இழந்து திசை மாறிப் போய்விடும் விண்கலம் போல விஸ்வாவின் வாழ்க்கை எங்கோ திசை மாறிப் போவது அவள் கண்களில் தெரியத்துவங்கியது. என்னவிலை கொடுத்தேனும் அவனை நல்வழிப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தாள்.

அடுத்த நாள், அருகில் இருக்கும் கோவிலில் நித்யா மற்றும் விஸ்வா...
"என்னடா வர வர உன்னோட நடவடிக்கை எல்லாம் சரி இல்ல. ஒழுங்க கல்லூரிக்கும் வர்றது இல்ல என்கிட்டக் கூட சரியா பேசறது இல்ல... வீட்டுக்கும் வர்றது இல்ல...என்னடா ஆச்சு உனக்கு?"

"எனக்கு ஒண்ணும்மில்ல நித்யா. நா எப்பவும் போலத்தான் இருக்கேன். அப்புறம் வீட்ல அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க. மாப்பிள்ளைத் தேடுறது எல்லாம் எப்படிப் போகுது"

"டேய் என்ன நான் ஒண்ணு கேட்டா நீ ஏதோ பேசற... விடு விஸ்வா வினிதாக்கு கொடுத்துவெச்சது அவ்வளவுதான். உன்ன மாதிரி ஒருதன் கிடைக்க ஒரு பொண்ணு கொடுத்துவெச்சு இருக்கணும்"

"சீச்சீ அதுக்காக வினிதா மோசம்னு சொல்லாத நித்தீ, அவ ரொம்ப நல்லப் பொண்ணுனு உனக்கும் நல்லாத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னோட விதின்னு தான் சொல்லணும்"

"சரி இவ்வளவு பேசற நீ எதுக்காக வருத்தப்படணும். அவ போனா போயிட்டு போறான்னு விட வேண்டியதுதான. வீணா மனசையும் ஒடம்பையும் எதுக்கு கெடுத்துக்கற? நா ஒண்ணு கேட்ட‌ த‌ப்பா எடுத்துக்க‌மாட்டையே"

"என்ன‌ நித்தீ, வினிதா என்ன‌ விட்டு போன‌துக்கு அப்புற‌மும் கூட‌ பொண்ணுங்க‌ மேல‌ என‌க்கு இன்னும் ம‌ரியாதை இருக்குன‌ அதுக்கு முழுக் கார‌ண‌மும் நீதான். இதோ இப்பக் கூட‌ ஒரு பொண்ணா வினிதாவுக்கு பேச‌ம ஒரு ந‌ல்ல தோழியா என‌க்குத்தான் ச‌ப்போர்ட் ப‌ண்ற‌. என‌க்கு உன்ன‌ ரொம்ப‌ புடிக்கும் நித்தீ."

"என்ன‌ எந்த‌ள‌வுக்கு புடிக்கும், வினிதாவ‌ விட‌வா?"

"என்ன‌பாது சின்ன‌க் குழ‌ந்தை மாதிரி. இதோ இப்ப‌ என‌க்கு ஆறுத‌ல் சொல்ற‌து நீதான். த‌ன்னோட‌ சுய‌ந‌ல‌த்திற்க்காக‌ என்ன‌ விட்டுட்டுப் போன‌ வினிதாவ‌ விட‌ உன்ன‌ என‌க்குப் பிடிக்கும் போதுமா?"

"அப்ப‌ என்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்குவியா?"

"ஏய்... என்ன‌ இது...லூசா நீ... நாம‌ ரெண்டு பேரும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள். ம‌த்த‌ ந‌ண்ப‌ர்க‌ளும் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்காங்க‌, அப்ப‌டித்தான் உன் வீட்டுலையும் நினைச்சுட்டு இருக்காங்க‌."

" உன‌க்கு ஒண்ணு தெரியுமா எங்க‌ வீட்டுலக் கூட‌ எப்ப‌டிப‌ட்ட‌ மாப்பிள்ளை பாக்க‌ற‌துன்னு கேட்ட‌துக்கு உன்ன‌ மாதிரி வேணும் சொல்லி இருக்கேன். இதோ இப்பக் கூட‌ என்ன‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் கொடுத்துவெச்ச‌வ‌ன்னு நீ சொல்ற, உன்ன‌ க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ கொடுத்துவெச்ச‌வ‌ன்னு நான் சொல்றேன். புதுசா ஒருத்த‌ங்க‌ள‌ நாமா தேடுற‌துக்கு ஏன் ந‌ம்ம‌ ரெண்டு பேருமே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌க் கூடாது. என‌க்காக‌ நீ நிறைய உத‌வி ப‌ண்ணி இருக்க‌, உன‌க்கு நானும் உத‌வி ப‌ண்ணி இருக்கேன். இப்பா கூட‌ நீ ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நான் நினைக்க‌றேன் நான் ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நீ நினைக்க‌ற‌. உன்னோட‌ ச‌ந்தோசத்துக்கு நானும் என்னோட‌ ச‌ந்தோச‌த்துக்கு நீயும் கார‌ண‌ம‌ இருக்க‌ நினைக்க‌ற‌து என்ன‌ த‌ப்பு? இது நீ க‌ஷ்ட‌ப்ப‌டுற‌த பாத்து எடுத்த‌ முடிவு இல்ல‌ விஸ்வா. கொஞ்ச‌ நாளாவே என்னோட‌ ம‌ன‌சுக்கு இந்த‌ முடிவு ந‌ல்லா இருக்குனு தோனிச்சு அதுதான் என்னோட‌ விருப்ப‌த்த‌ சொன்னேன். இப்ப கூட‌ உன்ன‌ நான் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ல‌, என்ன‌ உன‌க்கு உண்மையாலுமே புடிச்சு இருந்தாச் சொல்லு. சரி, நான் கிள‌ப்ப‌றேன். நாளைக்கு காலைல‌ சாப்பிட‌ எங்க‌ வீட்டுக்கு வா இதுக்கு மேலையும் உன்ன‌ க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்காத‌ அப்புற‌ம் என்னையும் க‌ஷ்ட‌ப்ப‌டுத்தாத‌"
பேசிவிட்டு அவ‌ள் சென்றுவிட்டாள்.

இப்போது கூட‌ த‌னது க‌ஷ்ட‌த்தைப் ப‌கிர்ந்து கொள்ளும் ம‌னம், த‌ன்னைக் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ நினைக்காத‌ ஒரு ம‌ன‌ம்,எப்போதும் த‌ன‌க்கு ஆறுத‌லாய் ம‌ட்டும் இருக்க‌ ஆசைப்ப‌டும் ஒரு ம‌ன‌ம். என்றுமே தனக்கென்று எத‌னையும் கேட்காது அவ‌னுடைய‌ ந‌ல‌த்தினை ம‌ட்டும் கேட்கும் ஒரு ம‌ன‌ம். இப்ப‌டி ஒரு ம‌ன‌தை அருகில் இருந்தும் இந்நாள் வ‌ரை அறியாம‌ல் விட்டுவிட்டோமே என‌ அவ‌ன் நினைக்க‌த் துவ‌ங்கினான். கையில் இருந்த‌ பெட்ட‌க‌த்தில் மின்னிய‌ முத்தினை இன்று வ‌ரை அறியாம‌ல் எப்ப‌டி இருந்தோம் என‌ அவ‌ன் நினைத்தான். கோவிலில் மணி அடித்தது.

அடுத்த‌ நாள் காலை நித்தியாவின் வீட்டில்
"இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா" என‌ வ‌ழ‌க்க‌மாக‌ அவ‌ள‌து அம்மா விஸ்வாவிட‌ம் முறையிட்டாள்.

"மா உங்க‌ பொண்ணுக்கு ஒரு ந‌ல்ல‌ மாப்பிளைய‌ நானே பாத்துவெச்சு இருக்கேன். அவ‌ன் என்னை மாதிரியே இருப்பான். நீங்க‌ க‌வ‌லைப்ப‌டாதீங்க"
என அவளைப் பார்த்துச் சிரித்தவாறு கூறினான்.

"உன்ன‌ மாதிரியேவா, ஹும்ம் என‌க்கு தெரியாதுனு நினைச்ச‌ய‌, நித்யா எல்லாத்தையும் எங்க‌கிட்ட‌ சொல்லிட்டுதான் உன்கிட்டவே பேசினா, என‌க்கும் அது ச‌ரினுப‌‌ட்ட‌து அவ‌ளுட‌ அப்பாவுக்கும் இதுல‌ முழு ச‌ம்ம‌த‌ம்தான்பா ஆனா அவ‌ உன்னோட‌ ச‌ம்ம‌த‌ம் இல்லாம‌ இத‌ப‌த்தி நாங்க‌ யாரும் பேச‌க்கூடாதுனு சொல்லிட்ட. அவளே கேட்டு சொல்றனு சொல்லி இருந்தா. எங்க‌ நாங்க‌ இத‌ கேட்டு உன்னோட‌ ம‌ன‌சு வ‌ருத்த‌ப்ப‌டுமோனு நாங்க‌ளும் அவ‌ இஷ்ட‌த்திற்க்கே விட்டுடோம். இப்ப எங்க‌ளுக்கும் ம‌ன‌சு ச‌ந்தோச‌மா இருக்கு"

"த‌ன்னை, தனது நலத்தையும் நேசிக்கும் ஒரு பெண்ணை ம‌ட்டும்ம‌ல்ல‌ ஒரு குடும்ப‌த்தின‌ரையும் அவ‌ன் நேசிக்க‌த்துவ‌ங்கினான்"

"ந‌ட்பு அழ‌கு, அத‌னினும் காத‌லுக்குள் க‌ள‌வு போன‌ ந‌ப்பு பேர‌ழ‌கு"

குடும்பமும் சில குளறுபாடுகளும்.

படிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்த வானொலியைக் கேட்டுக் கொண்டு தூங்குவதில் அப்படி ஒரு அலாதியப் பிரியம். அப்படி நான் ரசித்த சமயங்களில் எனக்குள் எழுந்த சில வினாக்கள்??????

வானொலியில் இந்த இல்லறத் தம்பதிகள் பேசும் நிகழ்ச்சிகள் நிறைய கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்வி, "குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகாமல் இருக்க‌ என்ன செய்ய வேண்டும்? " அதற்கு அனைத்து தம்பதிகளும் சொல்லும் ஒரே பதில் " எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்". இதனைக் கேட்கும் போது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மனிதனாகப் பிறந்து விட்டு எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதுதான்? இத்தகைய பதிலை புதுமணத் தம்பதிகள் கூறி இருந்தாலும், அனுபவம் பத்தவில்லை என நினைத்துக் கொள்ளலாம், ஆனால் முப்பது வருட இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இதனையேதான் சொல்கின்றனர்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் கடைசி மூச்சுள்ள வரை இந்த உலகில் ஏதோனும் ஒன்றை எதிர்பார்த்து தான் வாழ்கிறான். அப்படி இருக்க எப்படி தனது மனைவி/ கணவனிடம் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ்வது. திருமணம் என்பதே ஆண்/பெண் இருவரிடத்தும் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்குகின்றது அப்படி இருக்க திருமணம் முடிந்தது எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்?

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அதிக எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கை சுவாரிசயமாக செல்லும், இல்லையெனில் சலித்துப் போகும். சில சமயங்களில் எதிர்பார்ப்பவை அனைத்தும் நிறைவடைந்து விடுவதில்லை. அப்படி இருக்கும் போது ஏமாற்றமடையாமல் இருந்தால் பிரச்சனை எதுவும் உருவாகாது. ஆகையால் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், குறைந்த ஏமாற்றமும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.

அட என்னடா இவன் லூசுத்தனமா எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் ஏமாற்றம் இருக்க கூடாது, எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை என்றால் ஏமாற்றம் தானே மிஞ்சும்னு நினைக்கறது புரியுது.

உங்க வீட்டுக்காரி கிட்ட இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச வெரைட்டிய சமைக்க சொல்லிட்டு நீங்க உத்தியோகத்திற்க்கு போறிங்க, இரவு திரும்பி வந்து பாத்தா எப்பவும் சமைத்து வைப்ப‌தையே ச‌மைத்து வைத்துவிட்டு உங்க‌ ம‌னைவி உட‌ல்நிலை ச‌ரி இல்லைனு ப‌டுத்துவிட்டால், இவ‌ளுக்கு எப்ப‌ பாத்தாலும் நா என‌க்கு புடிச்சத‌‌ ச‌மைக்க‌ சொன்னா ம‌ட்டும் உட‌ம்பு ச‌ரி இல்லாம‌ போயிடுதுனு நினைத்து ஏமாற்றமடையாமல், அட‌ ந‌ம்ம‌ பொண்டாட்டி ந‌ம‌க்கு ச‌மைக்காம‌ வேற‌ யாருக்கு ச‌மைக்க‌ போறா? இன்னைக்கு இல்லைனா‌ நாளைக்கு ச‌மைத்து கொடுக்க‌ போறானு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.

அடுத்த‌து உங்க‌ வீட்டுக்காரர் கிட்ட‌ உங்க‌ள‌ இன்னைக்கு சாயங்காலம் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகச் சொல்றிங்க ஆனா அவர் கொஞ்சம் வேலை இருக்குமா, இந்த வாரம் வேண்டாம் அடுத்த வாரம் போக‌லாம்னு சொல்றார்னு வைங்க‌‌, இந்த‌ ம‌னுச‌னுக்கு எப்ப‌ நாம‌ ப‌ட‌த்துக்கு போக‌லாம்னு நினைக்க‌ற‌மோ அப்ப‌தான் வேலை அதிக‌மா இருக்கும்னு நினைக்காம‌, ந‌ம்ம‌ புருச‌ன் ந‌ம்ம‌ள‌ ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகாம‌ ப‌க்க‌த்து வீட்டுல‌ இருக்க‌றவ‌ளைய‌ கூட்டிட்டு போக‌ப்போறாரு, இந்த‌ வார‌ம் இல்ல‌ன என்ன அடுத்த‌ வார‌ம் கூட‌ போக‌லாமே, எப்ப‌டி இருந்தாலும் த‌சாவ‌தார‌ம் வ‌ருச‌க்க‌ண‌க்கில் ஓட‌த்தான‌ போகுதுனு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.

அங்கமெல்லாம் அழகானவள்

காதல் கரையோரத்தில் கடலுக்குள் களவு போக கதிரவன் காத்திருந்த நேரம், கண்மணி உன் கயல்விழிக்குள் களவு போன என் காதலுடன் நான் காத்திருக்கிறேன்.கடற்க்காற்றில் கரைந்து கொண்டிருந்த மணலில், மலர் வாசம் வீச ஆரம்பித்ததும் அறிந்து கொண்டேன் அசைந்தாடும் தேராய் அருகில் நீ வந்துவிட்டாய் என்பதை.க‌ன‌வில் க‌ண்ட‌ தேவதையை க‌ண் எதிரே க‌ண்டதும் க‌ட‌ல் அலையென‌ துள்ளிக் குதித்த‌து. உன்னை காண‌ ஓடி வ‌ரும் ஒவ்வொரு அலையும் உன்னைக் க‌ண்ட‌ வெட்க‌த்தில் மீண்டும் க‌ட‌லிக்குள் ஓடி ஒளிந்து கொள்கிற‌து. உன்னைக் க‌ண்டதும் நிலவு உதித்துவிட்டதென நினைத்து க‌திர‌வ‌னும் க‌ட‌லுக்குள் ம‌றைய‌த் துவ‌ங்கினான்.உன‌து பாத‌ச்சுவ‌ட்டின் மீது கால் ப‌தித்து நான் நட‌ந்துவிடுவே‌ன் என்பதால் விரைந்து வந்து அலைகள் அதனை அழித்துக் கொண்டிருந்தது.உன் விரல் பட்டதும் கடல் நீர் தேனீராய். நீ கட்டிய மணல்வீட்டை ஆராய்ந்த தொல்பொருள் நிபுணர்கள், இது தேவதைகள் காலத்தை சார்ந்த ஒரு தேவதை கட்டியது என‌ அறிவித்தனர், பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க பரிந்துரையும் செய்தனர். உன்னைக் கடற்க்கன்னியென நினைத்து நண்டுகள் எல்லாம் தவறி வேறு எங்கோ சென்றுவிட்டோமென நினைத்து கடலை விட்டு வெளியே வ‌ருகின்றது.கலங்கரை விளக்காய் உன் காதோர கம்மல் மின்ன கப்பல்கள் எல்லாம் கரையோரம் ஒதுங்கத் துவங்கியது. உனது செயல்களை எல்லாம் எழுத்தில் வடித்தது, கிடைத்து விட்டதடா ஒரு அழகியக் கவிதை என சொல்லிச் சென்றான் எனதருகில் இருந்த கவிஞன் ஒருவன். மணல்களை அள்ளித் தூவுகிறாய், என்மேல் அவை மல்லிகைப்பூக்களாய். வலை வீசி மீன் பிடித்தான் மீனவன் நீயோ விழி வீசிப் பிடித்தாய் என்னை.நடை பழகிய குழந்தை ஓய்ந்து தாய் மடி தேடுவது போல் என் தோள் சாய்ந்தாய். முழுநிலவை சுமந்த சுகத்தை அனுபவித்தது தோள்.தேன் சிந்தும் பூவானாய்.

"டேய் லூசு"

"சொல்லுடி லூசு"

"நா கேள்வி கேட்பனாமா, நீ பதில் சொல்லுவியாமா"

"விழிகளில் மட்டும் கேட்டு விடாதே! இதயம் இயங்காத சமயங்களில் உதடுகள் அசையாதாம்"
"சரி சரி, ஆரப்பிச்சுடாத... எதுக்குடா லூசு மாதிரி என்னோட பொறந்த நாளா என்னமோ உன்னோட பொறந்த நாள் மாதிரி கொண்டாடுற?"

"நீ பிறந்தபோது தான் நானும் பிறந்தேன்"

"அது எப்படி, பொய் சொல்லாத"

"ஹ்ம்ம்ம்... நீ பிற‌ந்த‌ அன்றே என் காத‌லும் பிற‌ந்த‌து, என் காத‌ல் பிற‌ந்த‌ அன்று நான் மீண்டும் பிற‌ந்தேன், அப்ப உன்னோட பிறந்த நாள் என்னோட பிறந்த நாள்தான"

"சரி அத விடு, என்ன‌ ப‌த்தியே எப்ப‌வுமே நீ நினைச்சுகிட்டே இருக்கியே உன‌க்கு ச‌லித்துப் போகாதா?

"குழ‌ந்தையின் சிரிப்பை பார்த்து க‌ண்க‌ள் ஓய்ந்து போகாத‌டி க‌ண்ம‌ணி"

"ஹ்ம்ம்... ட‌க்குனு ஒரு க‌விதை சொல்லு"

"ட‌க்"

"நீ என்ன‌ லூசாடா, "டக்" எப்ப‌டி க‌விதையாகும்?"

"நீ போசும் அனைத்தும் க‌விதைக‌ள், க‌ட‌வுள் எழுத‌ நினைத்த‌ க‌விதைக‌ள் அனைத்தும் உன‌து உத‌டுக‌ளில்"

"நா என்ன‌ சொன்னாலும் அதை க‌வித‌னு சொல்லாத‌டா குட்டி"

"க‌விதையைக் க‌விதை என் சொல்லாம‌ல் வேறு எப்ப‌டி சொல்வ‌தாம்"

"பொய்தானா, வேற‌ ஒருத்த‌ன் எழுதிய‌ க‌விதைய‌த் தானா என்னோட‌ க‌விதைனு சொல்ற‌"

"ஆம்! க‌ள‌வாடிய‌க் க‌விதைக‌ள் தான் அனைத்தும் உன்னிட‌மிருந்து"

"ஓ!!!,உன்னோட‌ க‌விதை எல்லாம் என்னோட‌ புற‌ அழ‌க‌தான‌ வ‌ர்ணிக்குது, அப்ப‌ நீ என்னோட‌ ம‌ன‌ச‌ காத‌லிக்கிறேனு சொல்ற‌து பொய்தான?"

"அது எப்ப‌டி பொய்யாகும்?"

"ஆமா, முகம் அழ‌கா இருக்கு, க‌ண் அழ‌கா இருக்கு, கை அழ‌கா இருக்கு தான சொல்ற‌, ம‌ன‌சு அழ‌கா இருக்குனு சொல்றையா?"

"ஐயோ!!! நீ ச‌ரியான‌ லூசுடி, அக‌த்தின் அழ‌கு முக‌த்தில் தெரியும் அப்ப‌டினு ப‌டிச்ச‌தில்லையா?"

"அப்ப‌டினா நீ முக‌த்த‌ ம‌ட்டும்தான வ‌ர்ணிக்க‌னும்"

"உன் ம‌ன‌தின் அழ‌கை முக‌ம‌ட்டும் கொள்ள‌ முடியாமால் உட‌ல் முழுவ‌து வ‌ழிந்தோடுவ‌தால், உன‌து அங்க‌ங்க‌ள் முழுவது உன் அக‌த்தின் அழ‌கு தேங்கிக் கிட‌க்கின்ற‌து"

"எப்ப‌டிடா இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ற‌"

"ஹுக்கும், காண்ப‌தைச் சொல்ல‌ உத‌டுக‌ள் அசைந்தால் ம‌ட்டும் போதும‌டி என் பூனைக் குட்டி"

"இப்ப‌ நீ ப‌தில் சொல்ல‌ முடியாத‌ கேள்வி ஒன்னு நான் கேட்க‌ப் போறேன்"

"விடையையும் கொடுத்துவிடும் நீ இருக்க‌ நான் எப்போது தோற்க்க‌ மாட்டேன்"

"அப்ப‌ நாந்த‌ எப்ப‌வும் தோக்க‌ற‌னா?"

"என்னில் ச‌ரிபாதி நீ இருக்க‌ நீ எப்போதும் தோற்ப்ப‌தில்லை"

"இந்த‌ கேள்விக்கு ப‌தில் சொல்லு பாக்க‌லாம், நா முத‌ல்ல‌ இறக்க வேண்டுமா?? இல்ல‌ நீ இறக்க வேண்டுமா?"

"..."

"என்ன‌ இப்ப‌ மாட்டிகிட்டியா?"

"இல்ல‌டா செல்ல‌ம், நீ தான் முத‌லில் இற‌க்க‌ வேண்டும்"

"நானா? ஏ"

"என் காத‌ல் கூட‌ உன்னைக் காய‌ப்ப‌டுத்தாது க‌ண்ம‌ணியே"

"அப்ப நீ ம‌ட்டும் உயிரோட‌ இருப்பியா?"

"வேருக்கு தீ வைத்த‌ பின் விழுதுக‌ள் வாழ்வ‌தில்லை"

"அப்ப நம்ம காதல் செத்துடுமா?"

"கடவுள் காணாமல் போவதில்லை"

விழிக‌ளில் க‌ண்ணீருட‌ன் என்னை க‌ட்டிக் கொள்கிறாய்,தாய்க் க‌ருவ‌றையின் காரிருள் என‌து க‌ண்க‌ளில்...

முயற்சியாய் நீ, முன்னேற்றப் படிகளில் நான்.

"டேய் வெற்றி! மச்சா நீ மோசம் போயிட்ட டா!!! அந்த கயல்விழி உன்ன ஏமாத்திட்டடா. ரெண்டு மாப்பிள்ளைய‌ வேண்டானு சொன்னவ மூணாவது மாப்பிள்ளை நல்ல பணக்காரன கிடைச்சதும், சரினு ஒத்துகிட்ட டா மச்சா ஒத்துகிட்ட"

"என்னடா மகேஷ் சொல்ற, நிஜமாத்த சொல்றையா?"

"ஆமாடா. இப்பதான்டா நம்ம கார்த்தி சொன்னான், விடுடா வெற்றி இந்த பொண்ணுங்களே இப்படித்தான், பணக்கார மாப்பிள்ளை கிடைச்சா நம்மள எல்லாம் மறந்துடுவாங்க‌"

"டேய்!!! என்ன‌ங்க‌டா என்ன‌மோ அவ‌ இவ‌ன‌ ல‌வ் ப‌ண்ண‌ மாதிரி, இவ‌ரு அவ‌ள‌ உருகி உருகி காத‌லிச்ச‌ மாதிரியும் ஓவ‌ரா பேசிட்டு இருக்கிங்க‌, இந்த‌ குட்டிச்செவுரு மேல‌ உக்காந்துட்டு போற‌ வ‌ர‌ பொண்ணுங்க‌ள ரெண்டு வருசமா சைட் அடிச்சுட்டு இருக்கோம் அதுல‌ ஒருத்தி இந்த‌ க‌ய‌ல்விழி, இந்த‌ பீலிங் கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌"

"இல்ல‌டா ச‌ம்ப‌த், ந‌ம்ம‌ வெற்றித‌ அவ‌ளுக்காக‌வே காத்துட்டு இருப்பான் அதுத‌ ஒரு விள‌ம்ப‌ர‌ம், அப்புற‌ம் இந்த குட்டி சுவத்துல இருக்கற மக்களுக்கு நா தெரிவிச்சுக்கறது என்னன ஒரு சைட்டு கொற‌ஞ்சு போன‌ சோக‌த்துல‌ இருக்க‌ற‌ ந‌ம்ம‌ வெற்றி இன்னைக்கு ச‌ர‌க்கு வாங்கி கொடுத்து த‌ன்னோட‌ சோத்த‌ தீத்துக்குவான் அப்ப‌டினு பொதுக் குழு சார்பா தெரிவிச்சுக்க‌றனுங்கோ..."

"அட‌ப்பாவி ச‌ர‌க்க‌ ஓசில‌ குடிக்க‌ற‌துக்காக‌வாடா இந்த‌ அல‌ம்ப‌ல், ச‌ரிவிடு இன்னைக்கு எங்க‌ப்ப‌னுக்கு ச‌ப்ப‌ள‌ம் வ‌ந்திருக்கும் அத ஆட்டைய‌ போட்டு ஜ‌மாய்சுட‌லாம்"

வெற்றி, ம‌கேஷ், ச‌ம்ப‌த் மூவ‌ரும் ஊர் அறிந்த‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளுக்கு வேலையே அந்த குட்டிச் சுவரில் அமர்ந்து ஊர் பெண்களை கிண்ட‌ல் அடிப்ப‌தும், அதை யாராவ‌து கேட்டால் அவ‌ர்க‌ளை அடிப்ப‌துதான்.இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த‌து.

அப்போதுதான் க‌ண்ம‌ணி அந்த‌ ஊருக்கு குடிபெய‌ர்ந்தாள். அவ‌ள‌து அப்பா அந்த‌ ஊர் ப‌ள்ளிக் கூடத்திற்க்கு ஆசிரிய‌ராக‌ ப‌ணி மாற்ற‌ம் கிடைத்த‌து.

"டேய் வெற்றி,சம்பத் புதுசா ஒரு சிட்டு ப‌ற‌ந்து வ‌ந்திருக்குடா, ப‌ள்ளிக் கூட‌த்து ஆசிரிய‌ர் பொண்ணுடா, பாத்தா தேவ‌தை மாதிரி இருக்காடா, இனிமே அவ‌தான்டா என்னோட‌ சைட்டு, இதுல‌ நீங்க‌ யாரும் குறுக்க‌ வ‌ர‌க்கூடாது சொல்லிட்டேன்"

"ச‌ரிடா, நீ சொல்ற‌ப்ப‌வே ஒரு அட்டு பிக‌ராத்தான் இருக்கும் நீயே வெச்சுக்க‌"

முத‌ன் முத‌லாக‌ அந்த‌ குட்டிச்சுவ‌த்தின் வ‌ழியாக் க‌ண்ம‌ணி ந‌ட‌ந்து சொல்ல‌ நேர்ந்த‌து. முன்ன‌மே ப‌ல‌ர் அவ‌ளை அவ்வ‌ழியாக் செல்ல‌ வேண்டாம் என‌ அறிவுறித்து இருந்த‌ன‌ர்.

"டேய், அங்க‌ பாருடா என்னோட‌ ஆளு வ‌ர்ரா, இவ்தான்டா நான் சொல்ல‌ல‌ க‌ண்ம‌ணி, ஆசிரிய‌ர் பொண்ணு, தேவ‌தை.." மேலும் ம‌கேஷை பேச‌ விடாம‌ல் வெற்றி த‌னது கைக‌ளால் அவ‌னது வாய்யை மூடினான்.

வ‌ருவ‌து பெண்ணா, பெண் உருவில் இருக்கும் தேவ‌தையா?

( திருக்குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து)

"அந்த நிலவில் கூட வளர்ந்து தேயும் களங்கம் இருக்கிறது ஆனால் அதுவும் கூட இல்லாத இவளது முகம்" வெற்றியின் மனதில் கல்லில் பொறித்த சிற்ப்பம் போல் பதிந்தது.

"டேய் க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்க‌ற‌ன் டா"

"டேய் வெற்றி நா முத‌லே சொல்லி இருக்க‌ அவ‌ என்னோட‌ ஆளுனு, இப்ப‌ நீ இப்ப‌டி பேச‌ற‌து த‌ப்பு"

"இல்ல‌டா, இது வேற‌ காத‌ல், ம‌த்த‌ பொண்ணுங்க‌ மாதிரி இல்ல‌ இது, இவ‌ள‌ பாத்த‌துல‌ இருந்து என்னோட‌ ம‌ன‌சு என‌க்கு என்ன‌மோ சொல்லுதுடா, இவ்வ‌ள‌வு நாள் ஏதோ ஒரு த‌ப்பு ப‌ண்ணிட்டு இருந்த‌ மாதிரி ஒரு நினைப்பு. என்ன‌மோ செய்ய‌றாடா"

"ஆகா என்ன‌டா ச‌ம்ப‌த் த‌லைவ‌ரு புதுசா வேதாந்த‌ம் சித்தாந்த‌ம் எல்லாம் பேச‌த் தொட‌ங்கிட்டாரு"

"டேய் விடுடா இப்ப‌டித்தான் இவ‌ன் எல்லா பொண்ணுங்க‌ளையும் புதுசா பாத்த‌ப்ப‌ பேசினான், அப்புற‌ம் என்ன‌ ஆச்சு"

அவ‌ர்க‌ள் கூறிய‌து போல‌ இருந்தாலும் க‌ண்ம‌ணியின் வ‌ர‌வு அவ‌னை என்ன‌வோ செய்த‌து. த‌ன‌க்கென்று தோன்றிய‌வ‌ளாக அவ‌ள் தென்ப‌ட்டாள். குடித்து உள‌றும் அவ‌ன் ம‌ன‌ம் இப்போது த‌னாக‌ உள‌ற‌ ஆர‌ம்பித்து. அவ‌ன‌து ம‌ன‌ உளற‌ல்க‌ள் க‌விதையாக‌ உருவான‌து.

வெற்றியும், மகேஷும் அந்த‌ குட்டிச் சுவ‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

"குட்டிச் சுவ‌ராய் இருந்த‌ என் ம‌னம்
நீ குடியேறிய‌தும் இன்று கோவிலான‌து... இது எப்ப‌டிடா இருக்கு"

"எதுடா"

"நா இப்ப‌ சொன்ன‌ க‌விதை"

"என்ன‌ க‌விதை சொன்னையா? ஆகா க‌ழுதைக்கு க‌ற்ப்பூர‌ வாச‌னை தெரிய‌ ஆர‌ம்பிச்சுடுச்சு போல‌"

"டேய் உண்மையாலுமே க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்கிற‌ன்டா, இது வேற‌டா"

"ச‌ரி ச‌ரி விடு முத‌ல்ல‌ த‌ண்ணி போட்டுட்டு உள‌றுவ‌ இப்ப‌ தானாவே உள‌ற்ற‌"

"இல்லடா, எங்கப்ப மேல‌ ச‌த்துய‌மா சொல்ற‌ன்டா, உண்மையாலுமே அவ‌ள‌ நா காத‌லிக்க‌ற‌ன்டா"

"டேய், என்ன‌டா சொல்ற‌ அவ‌ ரேஞ்சு என்ன‌னு தெரியாம‌ பேச‌த, நீ சோத்துக்கே லாட்ட‌ரி அடிக்கிற‌ நிலைல‌ இருக்க,அவ‌ தேவ‌தை மாதிரி இருக்கா, நீ பிச்ச‌க்கார‌ மாதிரி இருக்க‌, வேண்டான்டா, அவ‌ ந‌ல்ல‌ பொண்ணுடா விட்டுட‌லாம்"

அப்போது அவ்வ‌ழியாக க‌ண்ம‌ணி கட‌க்க‌ நேர்ந்து. ம‌கேஷ் ஏதோ சொல்ல‌ முய‌ல‌, க‌ண்ம‌ணியின் பின்னால் செல்ல‌ ஆர‌ம்பித்தான் வெற்றி. சிறிது தூர‌ம் சென்றது அவ‌ளை அழைக்க‌. அவ‌ள் திரும்பினாள்.

"க‌ண்ம‌ணி"

"..."

"எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌ல‌, ஆனா... உன்ன‌ என‌க்கு புடிச்சு இருக்கு, நா உன்ன‌ காத‌லிக்கிற‌ன், உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆச‌ப்ப‌டுற‌, என்ன‌ ப‌த்தி ஊர்ல‌ போச‌மா நீ கேள்விப் ப‌ட்டு இருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து என‌க்கு என்ன‌மோ இதுவ‌ரைக்கும் நா த‌ப்பு ப‌ண்ணின‌து மாதிரி தோனுது. எங்க‌ப்ப‌ன் சொன்ன‌ கூட‌ நா கேக்க‌ மாட்ட‌ ஆனா நீ என்ன‌ சொன்னாலும் நா கேப்ப‌ க‌ண்ம‌ணி, உன்ன‌ க‌ண்டிப்பா ந‌ல்ல‌ வெச்சுப்பேன். இது நா கிண்ட‌ல் அடிக்க‌ற‌னு நெனைக்காத‌, இதுக்கு முன்னாடி நா ந‌ல்ல‌வ‌ன் இல்ல‌ ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து நா ந‌ல்ல‌வ‌னாக‌ நெனைக்க‌ற‌ க‌ண்ம‌ணி, முடிவ‌ நீ இப்ப‌வே சொல்ல‌ணும்னு இல்ல‌,யோசிட்டு சொல்லு"

"உன‌க்கு என்ன‌ த‌குதி இருக்குனு என‌க்கு பிர‌ப்போஸ் ப‌ண்ற‌?, இதுல‌ யோசிக்க‌ ஒன்னுமே இல்லை"

"இல்ல‌ க‌ண்ம‌ணி, இதுவ‌ரைக்கு நா எப்ப‌டி வேணாலும் இருந்திருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துக்க‌ப்புற‌ம் நான் திருந்திட்டேன், என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு நா திருந்திட்ட‌னு நிருபிக்க‌றேன்."

"இல்ல‌, என்ன‌ விட்டுடு, இது எல்லாம் என‌க்கு ஒத்துவ‌ராது"

"பிளிஸ் க‌ண்ம‌ணி, ஒரே ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு, வாழ்க்கைல‌ நா முன்னேறிக்காமிக்க‌ற‌ன் அப்புறமா நீ ச‌ரினு சொன்னா போது"

"ச‌ரி உன‌க்கு இன்னும் ஒரு வ‌ருச‌ம் டைம் த‌ர்ரேன், அதுக்குள்ள‌ மாச‌ம் ஒரு ப‌த்தாயிர‌ம் ரூபாய் ச‌ம்பாதிக்க‌ முடிஞ்சா என்ன‌ தேடி வா, என்ன‌டா இவ‌ ச‌ம்ப‌ள‌த்த‌ ப‌த்தி பேச‌றாளேனு நெனைக்காத‌, ஆம்ப‌ளைக்கு அழ‌கு ச‌ம்பாதிக்க‌ற‌துத, ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ தான் உன‌க்கு காசோட‌ அருமை தெரியும், அப்ப‌ நீயே தான‌ திருந்திருப்ப‌, அப்ப‌ வா, அதுக‌ப்புற‌ம் நா யோசிச்சு சொல்ற‌" என‌ கூறி விட்டு அவ‌ன‌து ப‌திலை கூட‌ எதிர்பார்க்காம‌ல் சென்று விட்டாள்.

அன்று முத‌ல் புதிய‌ ம‌னித‌னாக‌ மாறினான் வெற்றி, வேலை தேடி ப‌ல‌ரிட‌ம் அலைந்தான். அவ‌னை உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுத்த‌து. யாரும் அவ‌னை ம‌திக்க‌வில்லை. இருந்தும் ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் மீண்டும் மீண்டும் தேடினான். தேடிச் சோர்ந்த‌ அவ‌ன் தொழில் துவ‌ங்க‌ முடிவு செய்தான். முத‌லீடாய் த‌ன‌து வீட்டை அட‌மான‌ம் வைத்து மிக்க‌ க‌டுமையாக‌ உழைத்தான். உழைப்பு அவ‌னை ஏமாற்றிய‌து. தொட்ட‌ வேலை எல்லாம் அவ‌னுக்கு இழ‌ப்பையே கொடுத்த‌து. ச‌ரியாக‌ ஒரு வ‌ருட‌ம் முடிந்த‌து. இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் க‌ண்ம‌ணி அவ‌னை அந்த‌ குட்டிச் சுவ‌ரில் ஒரு சில‌ நாட்க‌ள் தான் க‌ண்டாள். அவ‌ளை பார்த்த‌து அவ‌ன் அங்கிருந்து சென்று விடுவான்.இருந்த‌ வீட்டையும் அட‌மான‌த்தில் வைத்து த‌ற்ப்போது எதுவுமே இல்லாம‌ல் இருந்தான். எந்த‌ முக‌த்தை வைத்து க‌ண்ம‌ணியை காண‌ச் செல்வ‌து என‌ த‌ய‌ங்கினான்.இருந்தும் ஒரு நாள் அவ‌ளை பூங்காவிற்க்கு வரச் சொல்லி அங்கு காண‌ச் சென்றான். அங்கு ஒரு ம‌ர‌த்த‌டியில் அவ‌ள் அம‌ர்ந்திருந்தாள்.

"க‌ண்ம‌ணி"

"எதுக்கு இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌, சொல்லு"

"க‌ண்ம‌ணி, ஒரு வ‌ருச‌ம் முடிஞ்சு போச்சு, இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நா நெறைய‌ அனுப‌விச்சுட்டேன், இது இந்த‌ ச‌முத‌ய‌த்த‌ ப‌த்தி, உழைப்போட‌ அருமைய‌ ப‌த்தி, காசு கிடைக்க‌ ஒருத்த‌ன் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ட‌னும் அப்ப‌டிங்க‌ற‌து. ஆனா இப்ப‌ நா வீட‌ கூட‌ அட‌மான‌த்துல‌ வெச்சுட்ட‌ன், திரும்ப‌வும் நீ என்ன‌ காத‌லிக்க‌ணும்னு சொல்ல‌ வ‌ர்ல‌, நா இப்ப உன்ன‌ காத‌லிக்க‌றனு சொல்ற‌ த‌குதி கூட‌ என‌க்கில்ல‌,அதுனால் இது நாள் வ‌ரை த‌ண்ட‌மா சுத்திட்டு இருந்த‌ என்ன‌ ஒரு ம‌னுச‌னாக்கின‌ அதுக்கு ரொம்ப‌ ந‌ன்றி, இப்ப‌ கூட‌ இத‌ சொல்ல‌த்த‌ உன்ன‌ கூப்பிட‌ வேற‌ எதுவுமில்ல‌, நீ என்கிருந்தாலும் ந‌ல்ல‌ இருக்க‌ணும் அதுத‌ என்னோட‌ ஆசை, நா வர்ர‌ க‌ண்ம‌ணி" என‌ கூறி ந‌க‌ர‌ முய‌ன்றான்.

"ஒரு நிமிஷம் வெற்றி, நா உன்ன‌ காத‌லிக்க‌றேன்"

"என்ன‌ க‌ண்ம‌ணி பேச‌ற‌, இப்ப‌ நா ஒன்னுமே இல்லாத‌வ‌ன்"

"அதுக்கு என்ன‌, வெற்றி, நா உங்கிட்ட‌ முத‌ல் முத‌ல் சொன்ன‌ப்ப‌ கூட‌ நீ சும்மா ஒரு மாச‌த்துக்கு ஏதாவ‌து அல‌ஞ்சு அப்புற‌ம் ப‌ழைய‌ மாதிரி ஆயிடுவ‌னு நென‌ச்சுதான் அத‌ சொன்னேன். ஆனா நீ இந்த‌ ஒரு வ‌ருச‌ம் முழுசா க‌ஷ்ட‌ப்ப‌ட்டு இருக்க‌, எல்லா வ‌கையான‌ முய‌ற்ச்சியும் செஞ்சு இருக்க‌, அதையும் தாண்டி இப்ப‌ நா ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நினைச்சு நீயே வில‌கிப்போற‌து உன்னோட‌ அனுப‌வ‌ முதுர்ச்சிய‌ காட்டுது. நீ இப்ப‌வும் என்ன‌ உன்ன‌ காத‌லிக்க‌ சொல்லி இருந்த‌, அது உன்னோட‌ இய‌லாமைய‌ காட்டி இருக்கும். ஆனா இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நீ நிறைய‌ க‌த்துகிட்ட‌, உன‌க்கு எல்லாத்தையும் க‌த்து கொடுத்தது உன்னோட‌ காத‌ல், ஒருத‌லைய‌ காத‌லிச்ச‌துக்கே இவ்வ‌ள‌வு முய‌ற்ச்சி ப‌ண்ணி இருக்க‌, இதோ இப்ப‌ நானும் உன்ன‌ காத‌லிக்க‌ற‌, போ உன‌க்காக‌ எத்த‌ன‌ வ‌ருட‌ம் வேணாலும் காத்துட்டு இருக்க‌, ம‌றுப‌டியும் முழு முய‌ற்ச்சி செஞ்சு முன்னெற‌ப்பாரு, இந்த‌ என்னோட‌ வ‌ளைய‌ல்க‌ள் இது அடமான‌மா வெச்சு ம‌றுப‌டியும் ஏதாவ‌து ஒரு தொழில‌ தொட‌ங்கு, இந்த‌ த‌ட‌வ‌ நிச்ச‌ய‌ம் நீ வெற்றி பெறுவ‌"என‌ கூறி த‌ன‌து வ‌ளைய‌லை கொடுத்து அவ‌னது தோள்க‌ளைத் த‌ட்டிக் கொடுத்தாள்.

தன்னை மனிதனாக்கிய காதல் நிச்ச‌ய‌ம் இந்த‌ முறை தன்னை ஒரு ந‌ல்ல‌ காத‌ல‌னாக‌வும் மாற்றும் என‌ நினைத்து, அவளது காத‌லை முய‌ற்சியாக‌ வைத்து முன்னேற‌த் துவ‌ங்கினான்.

தாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 5

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3
தாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 4


கதவு அவர்கள் தட்டியதும் தானாக திறந்தது. உள்ளே அவள் இல்லை. எல்லா இடங்களிலும் தேடியும் அவள் இல்லாததால் கவலையில் ஆழ்ந்தனர். திடீர்ரென வெளிகதவு திறக்கும் சத்தம் கேட்க, கையில் விபூதியுடன் திவ்யா நின்று கொண்டிருந்தாள்.காலை நேரமே எழுந்து கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு வந்துஇருந்தாள்.

"என்னமா, பொண்ண காணம்னு பயந்துட்டிய... அப்படி எல்லாம் நா உங்கிட்ட சொல்லிக்காம எதுவும் பண்ணிட மாட்டேமா"

வாரி அணைத்துக் கொண்டாள் அவளது தாய்.
"சரிமா, நான் இன்னைக்கு ஆஸ்பத்திரி போயிட்டு ஆப்ரேசன் முடிஞ்சதும் வந்துடறேன். எப்படி இருந்தாலும் இன்னைக்கு நடக்கற ஆப்ரேசன்ல சக்தி நல்லா ஆயிடுவான். அதுகப்புறமாவது என்னோட காதல சேத்துவைங்கபப்பா" என புன்னகை சிந்தியவாறு சொல்லிச் சென்றாள்.

மருத்துவமனையில் சக்தியின் பொற்றோர் மற்றும் சில நண்பர்களும் கூடவே திவ்யாவும் இருந்தனர். அனைவரது முகத்திலும் இன்று நடைபொறும் ஆப்ரேசன் நிச்சயம் வெற்றி பெறும், சக்தி மீண்டும் அவர்களுக்கு கிடைக்கப் போகிறான் என்ற ரேகைகள் படர்ந்திருந்தது. அவர்களுது எண்ணம் போலவே நடந்தேறியது. ஆப்ரேசன் வெற்றிகரமாக நடந்தது. இரண்டு மணி நேரத்திற்க்கு பின்னர் முடிவு தெரியப்படுத்தப்ப‌டும் என டாக்டர்கள் கூறினர்.

இரண்டு மணி நேரம் கழித்து...

சக்கர நாற்க்காலியில் சக்தியை டாக்டர்கள் அழைத்து வந்தனர். அனைவரது முகத்திலும் ஆனந்தம், டாக்டரின் முகத்தை தவிற... எப்போதும் போல் தான் இப்போதும் சுய‌நினைவில்லாம‌ல் இருந்தான் ச‌க்தி.வ‌ற்றிபோன‌ க‌ண்ணீர் வ‌ர‌ண்ட‌ துளியாக‌ வெளிவ‌ர‌த்துடித்த‌து அனைவ‌ருக்கும்.

டாக்ட‌ரிட‌ம் இருந்து ச‌க்தியை பொற்றுக் கொண்டாள் திவ்யா.

" இனிமே ச‌க்திய‌ நா பாத்துக்க‌றேன், நீங்க‌ யாரும் ச‌க்திய‌ ப‌த்தி க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம். க‌ண்டீப்பா என்னோட‌ ச‌க்தி என‌க்கு கிடைப்பான். நா ப‌த்துகிட்டா க‌ண்டீப்பா அவ‌ன் குண‌மடைஞ்சுடுவான்" என‌ யாருடைய‌ ப‌திலையும் எதிர்பார்க்காம‌ல் அவ‌னை ச‌க்க‌ர‌ நாற்க்காலியில் வைத்து அழைத்துச் சென்றாள். ம‌ன‌தில் த‌ன‌து பொற்றோரிட‌ன் ம‌ன்னிப்பு கேட்டுக் கொண்டு, எதிரே இருந்த‌ வ‌ழிப்பிள்ளையார் கோவிலில் இருந்த‌ ஒரு ம‌ஞ்ச‌ள் க‌யிற்றை எடுத்து த‌ன‌து க‌ழுத்தில் க‌ட்டிக் கொண்டாள்.காத‌ல் என்றுமே தோற்ற‌தில்லை, மீண்டும் அவன் அவ‌ளுக்கு நிச்சய‌ம் கிடைப்பான்.

" நீ போகும் பாதை எதுவென்று சொல்லு, நானும் அங்கே வ‌ர‌..."

முற்றும்.

சீரழிந்து போனதடா சமுதாயம்..!

என்னடா இவன் திடீர்னு சமுதாயத்து மேல பழி போடுறானே அப்படி சமுதாயம் என்ன கெட்டுப் போச்சுனு நினைக்கறீங்களா? பொருங்க சொல்றேன்...

காதலிக்க வயசு வேணும், பதினெட்டு வயசுல காதல் வந்தா அது வயசு கோளாறுனு சொல்றீங்க. ஆனா அந்த வயசுல நம்ம நாட்டோட பிரதமர்ல இருந்து முதல்வர் வரைக்கும் தேர்ந்தெடுக்கர‌ உரிமை இருக்கு. உங்க தலையெழுத்து, இந்த நாட்டோட தலையெழுத்த மாத்தப் போற ஓட்டு உரிமைய அரசாங்கம் அவனுக்கு கொடுத்து இருக்கு. ஒரு நாட்டோட தலையெழுத்த தீர்மானிக்கர ஒருத்தன் தன்னோட தலையெழுத்த சரியா தீர்மானிக்க மாட்டானா? அப்ப இது அரசாங்க தவறா இல்ல இந்த சமுதாயம் காதலை தடுக்கிறதா? சொல்லுங்க... பெருசுங்களா வயசு கோளாறுனா பல பொண்ணுங்க பின்னாடி சுத்தறதுதான், ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறது இல்ல, ஒரு பொண்ணு பின்னாடி சுத்தின அதுக்கு பேரு "காதல்".அதுக்கப்பறம் நல்ல சம்பளம் கிடைச்சு(20 ஆயிரம்னு வெச்சுக்குவோம்) சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம்தான் காதலிக்கனுமாமா!!!! யோவ்!!! அப்ப 2ஆயிரம் சம்பளம் வாங்கறவன் எல்லாம் எங்கையா போறது??? இது எல்லாம் உங்களுக்கு அடுக்குமா? இதுதான் சமுதாய ஏற்றதாழ்வா? ஒரு பிரிவினரை காதலிக்க அனுமதிப்பதும் மற்றவரை தடுப்பதும். என்ன கொடுமை சார் இது??? இத எல்லாம் பாக்கறப்ப என்னோட ரத்தம் கொதிக்கிறது. இப்படி ஒரு ஏற்றதாழ்வு உள்ள ஒரு சமுதாயத்தில் வாழ்வது நமக்கு அவமானம் அல்லவா அதனால் காதல தடுக்க்காதிங்க. காதல் அப்படிங்கறது மனசு சமந்தப்பட்ட ஒன்னு அத போய் வயசு அனுபவம்னு கொச்ச படுத்தாதிங்க. நம்ம முன்னோர்களே என்ன சொல்லி இருக்காங்க கொஞ்சம் யோசிங்க, மனசுக்கு தோற்றமும் இல்ல அழிவும் இல்லனு சொல்லி இருக்காங்க அப்படி பட்ட மனசுல வர்ர காதல நீஙக மறுக்கலாமா?

ச‌ரி பெரிய‌வ‌ங்க‌ சொல்றாங்க‌ளேனு ஒரு ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ந்த‌துக்கு அப்புற‌ம் வீதிய‌ பாத்தா ஒரு பொண்ணு கூட‌ த‌னிய‌ போக‌ மாட்டிங்குது. எல்லாமே ஜோடி ஜோடியா போகுது. (ஒரு பொண்ணு பதினோறாவது பன்னன்டாவது வரக்கூடாதே அதுக்காகவே காத்துட்டு இருந்த மாதிரி ஓடி போய் பிக்கப் பண்ணிக்கறது. அப்புறம் எங்க போய் இருபத்தைந்து வயதுல பொண்ண தேடுறது. இந்த விசயத்துல ஆண் இனமே தனது இனத்துக்கு துரோகம் பண்றது தாங்கிக்க முடியல. ஒரே பொண்ணுக்கு நாலு பேரு ரூட்டு போடுறது, அடுத்தவன் காதலிக்கறானு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவளுக்கும் இன்னொருத்தன் ரூட்டு போடுறது ஆண்டவா கொஞ்சம் பொண்ணுங்கள அதிக உருவாக்குனு தான் வேண்டத்தோனுது.)இதுல‌ எங்க‌போய் ந‌ம‌க்கு பொண்ணு தேடுற‌துனு ம‌ன‌சு நொந்துபோய் வ‌ர்ற‌த‌ க‌ட்டிகிட்டு வாழ‌ வ‌ழிய‌ தேட‌ வேண்டிய‌துதான். பாருங்க பெரிய‌வ‌ங்க‌ பேச்ச‌ கேட்ட கிடைக்க‌ற‌ பொண்ணு கூட‌ கிடைக்காம‌ போயிடும்...

அடுத்தது என்னோடது தெய்வீகமான காதல்.. அதுல காமமே இல்ல... அப்படி இப்படினு பீலா விடுறவங்களே, உங்க காதலியோட மனசு மட்டும் தான் வேணுனா ஏயா அவ அடுத்தவன கல்யாணம் பண்ணினது நீங்க கோட்ட‌ர் அடிச்சுட்டு குப்புறகவுந்தறீங்க? உங்களுக்கு தான் மனசு மட்டும் இருந்த போதுமே, அதுக்கு மேல காதலி நல்லா மட்டும் இருந்த போதும், அவள நல்லா வெச்சுக்கதான் அவள நா காதலிக்கறனு சொல்றவங்க, அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி நல்லா இருந்தாக்கூட அவ மோசமானவ, அவளோட நடத்தைய பத்தி ஏப்பா தப்பா பேசறிங்க. அப்ப நீங்க உடலையும் சேத்திதான காதலிக்கறீங்க. அப்பா மகராசனுகளா ஒத்துக்கறேன் காதல் உண்மைதானு ஆனா அதுல காமம் இல்லனு காமடி பண்ணக் கூடாது. காமம் மட்டும் இருந்த அதுக்கு பேர் காதல் இல்ல, காமம் இல்லாம போனாலும் அதுக்கு பேரு காத‌ல் இல்ல‌, ஒரு பெண்ணுடைய‌ எல்லாவித‌மான‌ சுக‌த்திலும், துக்க‌த்திலும் ச‌ரிச‌ம‌மாக‌ க‌ல‌ந்துக்க‌ற‌துதான் காத‌ல். அது உள்ள‌த்தில் இருந்து உட‌ல்வ‌ரை பொருந்தும்.

அடுத்த‌து த‌ன்னோட‌ காத‌ல‌ சொல்லி ஏத்துக்காத‌ பொண்ணுங்க‌ள‌ பிர‌ண்டு, த‌ங்கச்சினு டீ.ஆர் கனக்கா சொல்லி க‌ட‌லை போடுறீங்க. எப்ப‌டீங்க‌ ஒரு பொண்ண‌ ம‌னைவியா க‌ன‌வு க‌ண்டுட்டு, அவ "முடியாது பேசினா த‌ங்க‌ச்சினு நின‌ச்சுச்சு பேசு" சொன்ன‌ உடனே, சரினு த‌லையாட்டிடுட்டு ந‌ல்ல‌ கட‌லை போடுறீங்க‌. ந‌ல்ல‌வேள இதுவ‌ரைக்கும் எந்த‌ த‌ங்கச்சிக்கும் சீத‌ன‌ம் கொடுத்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைக்காம‌ இருக்க‌றீங்க‌ளே அதுவ‌ரைக்கு ச‌ந்தோச‌ம். கொஞ்ச‌ம் யோசிங்க‌ ம‌னைவியா க‌ன‌வு க‌ண்ட‌ ஒருத்திய‌ த‌ங்க‌ச்சினு சொன்ன காம‌டியா இருக்காதா? அதுவ‌ரைக்கும் உங்க கனவுல ரெண்டு பேரும் ஒன்னா டூய‌ட்டு பாடி இருப்பீங்க‌, முடிய‌ல‌...இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.

அடுத்த‌து காத‌ல்ல‌ தோல்வி அட‌ஞ்சா என்ன‌மோ வாழ்க்கையே போன‌ மாதிரி... யோவ் அவ‌ளே உங்க‌ள‌ ப‌த்தி க‌ண்டுக்காத‌ போது நீங்க‌ ஏயா அவ‌ள‌ நென‌ச்சுட்டு இருக்கீங்க? அட அவ நல்ல பொண்ணுத இல்லனு சொல்லுல, அவ முடியாதுனு சொன்னதுக்கு அப்புறம் எந்த ஆணிய நீங்க புடுங்க போறீங்க? உங்க நலன நினைக்கற நண்பர்கள், பெற்றோர்கள் இருக்கறப்ப உங்கள மதிக்காத ஒரு நல்ல பொண்ணுக்காக சும்மா வெட்டியா இருந்து என்னத்த சாதிக்கப் போறிங்க? போங்கையா போய் பொழைக்கற வழியா தேடுங்க. இந்த‌ உல‌க‌த்துல‌ எத்த‌னையோ ந‌ல்ல‌ பொண்ணுங்க‌ இருக்காங்க‌ சாமிக‌ளா, ஒரு சூப்ப‌ர் பொண்ணா பாத்து க‌ல்யாண‌ம் க‌ட்டிகிட்டு ஒண்ணே ஒன்ன‌ பெத்துகிட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் ச‌ந்தோச‌த்த‌ த‌ருவீங்க‌ளா? அத‌ விட்டுட்டு...

அட வீரன்னு இருந்த போர்களத்துல சில தழும்புகள் ஏற்ப்படத்தான் செய்யும், அதுக்காக அடுத்த போர்களத்துக்கு போகாம இருக்கமுடியுமா? வீரனாக வாழகத்துகங்க எனிளம் சிங்ககங்களே..!

வாழ்க காதல்...
வளர்க காதல்...

தாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்...பாக‌ம் - 4

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3

காதல் அவனை வேற்றுகிரகத்து வாசியாக்கியது. பார்ப்பவர்கள் எல்லோரும் அழகாய் தோன்றினர் அவனுக்கு, மற்றவருக்கோ அவன் வினோதமாகத் தெரிந்தான். இரவுகள் நீண்டன, பகல்கள் சுருங்கியது. தினம் தினம் காதலர்தினமாகியது. வீதியில் பறக்கும் பட்டாம் பூச்சியை துரத்திப் பிடித்து மீண்டும் பறக்க விட்டு ரசித்தான். அவனது நிழலும் அவனை பார்த்து கேலி செய்தது.நாட்களை காதல் கரைத்தது.

"ஆ..!!! அம்மா..!!!"

அவர்கள் சென்று கொண்டிருந்த பைக் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியில் மோதியது.ஆனந்த் மற்றும் சக்தி இருவரும் தூக்கியெறியப்பட்டனர்.
ம‌ருத்தும‌னை முழுவ‌தும் க‌ல்லூரி மாணவ‌ர்க‌ள். தீவிர‌ சிகிச்சை பிரிவில் இருவ‌ரும் அனும‌திக்க‌ப் ப‌ட்டிருந்த‌ன‌ர். ச‌க்தியின் த‌லையில் ப‌ல‌த்த‌ அடி ப‌ட்டு இருப்ப‌தாக‌வும், ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌வும், ஆன‌ந்திற்க்கு கால் எலும்பு முறிந்துபோன‌தாக‌வும் அவ‌னுக்கும் ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌ ம‌ருத்த்வ‌ர்க‌ள் கூறி இருந்த‌னர்.

ஜீவ‌ந‌தி வ‌ற்றிப்போன‌து போல் இருந்த‌து திவ்யாவிற்க்கு. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தை உண‌ர‌ முடியாம‌ல் த‌வித்துக் கொண்டிருந்தாள். புன்னகையில் பூத்த‌ பூக்க‌ளை எல்லாம் க‌ண்ணீர் க‌ருக்கிக் கொண்டிருந்த‌து. கான‌ல் நீராய் காத‌ல்.
சில‌ தின‌ங்க‌ளில் ஆன‌ந்த் மீண்டு வ‌ந்தான், ஆனால் நடக்க மட்டும் சில மாதங்கள் ஆகுமென மருத்துவர்கள் கூறி இருந்தனர். ஆனால் ச‌க்தி இன்ன‌மும் அதே நிலையில் தான் இருந்தான். ப‌ல‌ முய‌ற்ச்சிக‌ளுக்கு பிற‌கு அவ‌ன‌து உயிரை ம‌ட்டும் தான் ம‌ருத்துவ‌ர்க‌ள் காபாற்றின‌ர். ஆனால் அவ‌ன் எப்போதும் ம‌ய‌க்க‌ நிலையிலேயேதானிருந்தான்.மீண்டும் ஒரு மாதத்திற்க்கு பின்ன‌ர் ம‌ற்றுமொரு ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும், அத‌ன் பின்ன‌ர் தான் எதையும் உறுதியாக‌ சொல்ல‌ முடியும் என‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறின‌ர்.
ச‌க்தியின் க‌ண்க‌ள் எப்போதும் மூடியே இருந்த‌து. உள்ளுக்குள் திவ்யாவின் நிழ‌ல் ம‌ட்டும் ஓடிக் கொண்டிருந்த‌து. அது அவ‌னுக்கு கூட‌ தெரிய‌வில்லை.
திவ்யா ஏன் இதனைச் செய்கிறோமெனத் தெரியாமல் நாட்களைத் தொலைத்துக் கொண்டுருந்தாள். அவ‌ள‌து காத‌ல் அவ‌ர்க‌ளது வீட்டிற்க்கும் தெரிய‌ வ‌ந்த‌து, அவக‌ள‌து பெற்றோர் க‌ல‌ங்கிப் போனார்க‌ள். எங்கே அவ‌ள‌து வாழ்க்கை தொலைந்துவிடுமோ என‌ அச்ச‌த்தில் க‌ல்லூரி ப‌டிப்பை பாதியில் நிறுத்திவிட்ட‌ன‌ர். அவ‌ளை த‌ங்க‌ள‌து சொந்த‌ ஊருக்கு அனுப்பி வைத்த‌னர்.
ச‌ரியாக‌ ஒரு மாத‌த்திற்க்கு பின்ன‌ர் த‌ன‌து தாயையும் த‌ந்தையையும் காண‌ வ‌ந்தாள். அவ‌ள‌து முக‌ம் அப்போதும் மாறாம‌ல் உதிர்ந்த‌ பூவாக‌வே இருந்த‌து. இடையில் யாருக்கும் தெரியாம‌ல் த‌ன‌து ஊரில் இருந்து அவ்வ‌ப்போது ச‌க்தியை ம‌ருந்துவ‌ம‌னையில் சென்று க‌ண்டு வ‌ந்தாள்.நாளை ச‌க்திக்கு ஆப்ரேச‌ன்.
திவ்யாவின் வீட்டில்

"அப்பா, நா உங்க‌ளுக்கு ஏதாவ‌து க‌ஷ்ட‌த்த‌ கொடுத்து இருக்கேனா?"

"என்ன‌ம்மா, எங்க‌ளுக்கு நீ ஒரே செல்ல‌ப்பொண்ணு, உம்மேல‌ எங்க‌ளுக்கு பாச‌ம் அதிக‌ம், இப்ப‌டி எல்லாம் பேசாதமா"

"அப்பா, அப்ப‌ நான் சொன்ன‌ நீங்க‌ கேட்பீங்க‌தானே"

"சொல்லுமா என்ன‌ விச‌ய‌ம்"

"நா ச‌க்திய‌ பாக்க‌ணும் பா, அவ‌ங் கூட‌வே நா வாழ‌ணும் பா, இந்த‌ ஒரு ஆசைய‌ ம‌ட்டும் நிறைவேத்து வைங்க‌ப்பா, பிளீஸ்..!!!! "

" என்ன‌ திவ்யா!!! தெரிஞ்சுத பேச‌றையா?, நீ சின்ன‌ப் பொண்ணு உன‌க்கு ஒண்ணும் தெரியாது, போ போய் க‌ம்முனு தூங்கு"

"பா இந்த‌ ஜென்ம‌த்துல‌ என்னால‌ ச‌க்தி இல்லாம‌ இருக்க‌ முடியாது பா பிளீஸ்"

"திவ்யா, உன‌க்கு என்ன‌டி ஆச்சு திடீர்னு என்ன‌ என்ன‌போ போச‌ற‌?" அவ‌ள‌து தாய் அழுது கொண்டே கேட்டாள்

"அம்மா, நீ என‌க்கு எப்ப‌டி முக்கிய‌மோ, அதே மாதிரிதான் நான் ச‌க்திக்கு, என‌க்கு இந்த‌ மாதிரி ஒரு நிலை வந்திருந்த‌ ச‌க்தி க‌ண்டிப்பா என்ன‌ விட்டுட்டு போக‌ மாட்டான், அப்ப‌டிப‌ட்ட‌வ‌னுக்கு நான் எப்ப‌டிமா துரோக‌ம் செய்ய‌ முடியும்..."

"அவ‌ன் ந‌ல்ல‌ இருந்தாக் கூட‌ ப‌ர‌வால‌ , இப்ப‌ இருக்கிற‌ நில‌மைல‌ ..."

அத‌ற்க்கு மேலும் த‌ன‌து தாய் அழுவ‌தை அவ‌ளால் தாங்கிக் கொள்ள‌ முடியாத‌தால் அந்த‌ இட‌த்தில் இருந்து ந‌க‌ர்ந்தாள். நாளை ந‌ட‌க்க‌ இருக்கு ஆப்பேச‌ன் த‌னது காத‌ல் காப்பாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும் என இர‌வு முழுவ‌து க‌ண்ணீரை காணிக்கையாக்கினாள் க‌ட‌வுளுக்கும்.
ம‌றுநாள் காலை,கதவு நீண்ட நேரமாக‌ திறக்காத்தால் அவளது பெற்றோர் பயத்தில் கதவை தட்டினர்

"திவ்யா..!!"

"திவ்யா... க‌த‌வ‌த்தொற‌மா...திவ்யா"

தொட‌ரும்...

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2

கேன்டினில் தேனீர் பருகிக் கொண்டிருந்தான்.

"ஹாய்" ஒரு பெண்ணின் குரல், திரும்பி பார்த்ததும், திவ்யா நின்று கொண்டிருந்தாள். தனது நிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ..." மீண்டும் அவள்.

ஒரு முறை சொர்க வாசலின் முகப்பை பார்த்து வந்ததுபோல் உணர்ந்தான்.
"என்னங்க நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பேசவே மாட்டிங்கறின்ங்க" என்றாள்.சில்லென்று வார்த்தைகள் அவனை சுயநினைவிற்க்கு அழைத்து வந்தது.

"ஒ!! சாரி" என்றான்.

"என்னோட பேரு திவ்யா, நீங்களும் உங்க நண்பரும் பேசியத கேட்டு இருந்தான், உங்களுக்கு பெண்களை கண்டாலே பிடிக்கது தான் கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இன்னைக்கு நீங்க பேசியத கேட்டதும் பெண்களின் மேல் நீங்க வெச்சு இருக்கற மரியாதை மாதிரி ஒருத்தர இதுவரை நான் பார்த்தது இல்ல, நைஸ் டு மீட் யூ" என கை குலுக்கினாள்.

சிறிய புன்னகை பூத்தவன்."மீ டூ" என்றான்.

முதன் முறையாக ஒரு பெண் அதுவும் தான் அன்று பட்டி மன்றத்தின் போது நினைத்ததை இயல்பாக நடத்தி காட்டினாள் என்பதை அவன் நினைக்கும் நிமிடங்களில் சிறிது சிறிதாக அவன் காதல் கொண்டான்.

தினமும் அவளை இவன் பார்த்து சிரிப்பதும், அவள் இவனை பார்த்து சிரிப்பதுமாக இருந்தன நாட்கள்.அவளின் முகபாவனைகள் ஒவ்வொன்றும் மனதில் கோர்வைகள் ஆகி தினமும் ஒரு காதல் படமாய் ஓடியது. இதனை அவன் நண்பர்கள் அறிந்த போது காதல் அவன் மீது வெட்கத்தை பொழிந்தது.

காதலர் தினத்தன்று காலையில் அவனது வகுப்பின் முன்"டேய் மச்சா, சொன்னது போல பேசுடா, லூசுத்தனமா பேசிடாத" என்றான் ஆன‌ந்த்."டேய் அது எல்லாம் நான் பாத்துக்கறேன் நீ கொஞ்ச‌ம் கெள‌ம்பு" என்றான் ச‌க்தி.
திவ்யா அவ்வ‌ழியாக் வ‌ருவ‌தை பார்த்த‌தும் அவ‌னது ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் ம‌றைந்த‌ன‌ர்.

அவ‌ன‌து ம‌ன‌ம் ம‌ட்டும் ர‌யில் க‌ட‌ந்த‌ த‌ண்ட‌வாள‌மாய் அதிர்ந்து கொண்டிருந்த‌து, அவ‌ள் நெருங்கி வ‌ர‌ வ‌ர‌ அவ‌ன் ம‌ன‌தில் ஆன‌ந்த‌த் தாண்ட‌வ‌ம்.அவ‌ளும் அருகில் வ‌ந்தாள்.

"ஹாய் திவ்யா"

"ஹாய்..."

புடிச்சு இருக்கா..?"

"என்ன‌?!!"

"புடிச்சு இருக்கா?"

"... ... ..."

"சொல்லு திவ்யா, புடிச்சு இருக்கா..?"

"எனக்கு கிளாஸ்கு நேரமாச்சு நா போகணூம்" என கூறி அவனது பதிலை எதிர்பாராமல் தனது வகுப்பிற்க்கு சென்றாள்.

இடி விழுந்த மரமாய் இவனது மனம் ரணமானது.அவனது நண்பன் ஆனந்த் அங்கு வந்தான்.

"என்ன‌டா என்ன‌ சொன்னா?"

"ஒண்ணு சொல்ல‌ல டா"

"என்ன‌து!!! நீ என்ன‌ கேட்ட‌"

"புடிச்சு இருக்கானு கேட்டேன்"

"டேய்!!! முத‌ல்ல‌ அவ‌ளுக்கு காத‌லர்தின‌ வாழ்த்துக்க‌ள் சொல்லு அப்ப‌டியே போக‌ போக‌ மொபைல் நெப்ப‌ர் கேளு, எதுக்கு கேட்பா, என‌க்கு கொடுக்க‌ மாட்டையானு கேட்டுட்டு பேச்சுவாக்குல‌ அப்புறம் உன்னோட காதல சொல்லுனு கொடுத்தா, நீ என்ன‌ பொண்ணா பாக்க‌ போயிருக்க‌ புடிச்சு இருக்க‌னு கேட்கா?"

"அவ‌ள‌ பாத்த‌தும் என‌க்கு எல்லாம் ம‌ற‌ந்து போச்சுடா"

"ச‌ரிவிடு சாய‌ங்கால‌ம் பாத்துக்க‌லாம், அப்ப‌வாவ‌து உருப்ப‌டியா பேசு"

அவ‌னது வ‌குப்பின் வ‌ழியாக எப்போது செல்லும் அவ‌ள் அன்று மாலை ம‌ட்டும் வ‌ர‌வே இல்லை, இவ‌னும் காத்திருந்து விட்டு சோக‌மாக‌ ரூமிற்க்கு சென்றான்.

"விடுடா ம‌ச்சா, எப்ப‌டியாவ‌து அவ‌ள‌ பாத்துக்க‌லாம், இல்ல‌ அவ‌ளுக்கு உன்ன‌ புடிக்க‌ கூட‌ போயிருக்க‌லாம், விடுடா இந்த பொண்ணுங்களே இப்படித்தான்" என்றான் ஆன‌ந்த்.

ச‌க்தியின் ம‌ன‌ம் அவ‌ன் சொன்ன‌தை ம‌றுத்த‌து, இருந்தும் எதுவும் பேசாம‌ல் தன‌து அறைக்கு சென்று தாழிட்டு ப‌டுத்தான்.அப்போது அவ‌னது பொபைல் சிணுங்கிய‌து. எடுத்துப் பார்த்தால் அதில் ப‌திவு செய்ய‌ப்ப‌டாத‌ எண் தோன்றிய‌து. பேச‌ ம‌ன‌மில்லாத‌ போதும் வேண்டா வெறுப்பாக‌ பேசினான்.

"ஹ‌லோ"

"... ... ..."

"ஹ‌லோ யாரு பேச‌றிங்க‌"

"நா திவ்யா பேச‌றேன்"

"யாரு??? எந்த‌ திவ்யா?"

"ஹும்ம்... உங்க‌ளுக்கு புடிச்ச‌, உங்க‌ள‌ புடிச்ச‌ திவ்யா"

அவ‌ன‌து ம‌ன‌ம், குடை இல்லாத‌ போது பொழியும் குளிர்ந்த‌ ம‌ழையில் ந‌னைந்த‌ குழ‌ந்தையான‌து.

"காலைல‌..."

"ஆமா... திடீர்னு கேட்டா என்ன‌ சொல்ற‌து, என‌க்கும் ப‌ய‌ம் இருக்காத‌???"

"பயமா? ஹ ஹ ஹ...அப்ப‌ சாய‌ங்க்கால‌ம்???"

"சும்மா தான், ஒரு சில‌ ம‌ணி நேர‌ம் கூட‌ வெயிட் ப‌ண்ண‌ மாட்டீங்க‌லா?என‌ சொல்லி சிரித்தாள். அப்படியே அவனது இரவுப் பொழுது "மலர்ந்தது".

காதல் அவ‌ன‌து வான‌ம் முழுவ‌து வ‌ண்ண‌த்துபூச்சிக‌ளை ப‌ற‌க்க‌ செய்த‌து.அவ‌ன‌து உட‌லில் இருக்கு ஒவ்வொரு அணுவும் சுவாசிப்ப‌தை அவ‌னுக்கு உண‌ர்த்திய‌து. பார்க்கும் இட‌ங்க‌ள் எல்லாம் அழ‌காய் செய்த‌து.வ‌ர‌ண்ட‌ பூமிக்குள் ஓடி ஒளியும் த‌ண்ணீர்த் துளியாக் அவ‌னது எண்ண‌ங்க‌ள் எல்லாம் அவ‌ளுக்குள் ம‌றைந்த‌து.

தொட‌ரும்..

பாட்டுப் பாட வா!!!

பள்ளி காலத்தில் நான் பாடிய பாடல்களை இங்கு வெளியிடுமாறு அன்புத் தோழன் ஸ்ரீ கேட்டு இருக்கிறார். "மொளச்சு மூணு எல விடுல" என எங்கய்யன் திட்டிய போது நான் பாடிய பாடல்கள்(சென்சார்) தான் நினைவுக்கு வந்தது. அதையும் தாண்டி கபடமில்லாத இதயத்துடன் சுற்றிச் திரிந்த காலத்திற்க்கு எனது மனம் என்னை அழைத்துச் சென்றது.

முதல் முதலாக நான் பாடிய பாடல்.இதுவரை இதில் இருந்த இனிமை நான் எந்தப் பாடலிலும் கேட்டதில்லை.

அ...ம்...மா...

க‌‌டைசி வ‌குப்புகளின் போது நான் பாடிய‌ பாடல். என‌க்கு மிக‌வும் பிடித்த‌ பாட‌ல்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வ‌த‌ன‌மென‌த் திக‌ழ்ப‌ர‌த‌க் க‌ண்ட‌மிதில்
தெக்க‌ண‌மும் அதிற்சிறந்த‌ திராவிட‌ந‌ல் திருநாடும்
த‌க்க‌சிறு பிறைநுத‌லும் த‌ரித்த‌ந‌றுந் திலக‌முமே!
அத்தில‌க‌ வாச‌னைபோல் அனைத்துல‌கும் இன்ப‌முற‌
எத்திசையும் புக‌ழ்ம‌ண‌க்க‌ இருந்த‌பெருந் த‌மிழ‌ணங்கே!
த‌மிழ‌ணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

எப்போதோ நான் என‌து பாட‌ புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. இன்றுவ‌ரை ம‌ற‌வாம‌ல் என் ம‌ன‌தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாட‌ல்.வ‌ரிக‌ள் கூட‌ ச‌ரியாக‌ தெரிய‌வில்லை, ஆனால் இன்றுவ‌ரை என் ம‌ன‌தை விட்டு ம‌றைய‌வில்லை.

ஆராரோ ஆரிராரோ
ஆறு லட்சம் வண்ணக்கிளி
செம்பவளத் தொட்டிலிலே
சீரார கண்ணுறங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ கண்ணுறங்கு...

இந்த பாடல்களை யாரு வெளியிட்டு இருக்க மாட்டார்கள் அல்லவா ஸ்ரீ? :)

தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 2

தாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 1

தங்களது கருத்துக்களை ஒவ்வொருவராக கூறி அமர்ந்தனர். பெண்கள் தான் காரணம் என்ற அணியில் இருந்து திவ்யா பேச ஆரம்பித்தாள்.

" நா இங்க ஈவ் டீசிங்கிற்க்கு முழுக்காரணம் பெண்கள்தான்னு சொல்ல வர்ல, ஆனா பெண்களும் அதற்க்கு காரணம்னு தான் சொல்ல வர்றேன். இது யாருக்குமே தெரியரதில்ல. நா தாவணி அணிந்திருந்த காலத்துல தாய்மாமன் மட்டும் தான் கிண்டல் அடிச்சான், எப்போ சுடிதாருக்கு மாறினேனோ அப்ப சுத்தி இருக்கறவன் எல்லாம் கிண்டல் அடிக்கிறான். எதிர்தரப்புல ஒருத்தங்க சொன்னாங்க தாவணில இடுப்பு தெரியுது அதுனால தான் சுடிதாருக்கு மாறினேன்னு, சரியாத்தான் சொன்னாங்க, ஆனா இடுப்பு தெரியரதுக்கே இம்புட்டு ரோசம்ன, சுடிதார்ல லோநெக் போட்டுட்டு அலையரத என்னனு சொல்ல? அதப்பாத்தா பசங்க கிண்டல் அடிக்காம என்ன ஆராத்தியா எடுப்பாங்க? இதக்கேட்ட பெண்கள் சுதந்திரம்னு சொல்றாங்க, அப்ப ஆண்களுக்கு அவங்க நினைக்கறத சொல்றதுக்கு சுதந்திரம் இல்லையா? மேற்க்கத்திய கலாச்சாரத்த கடைபிடிக்க ஆரம்பிச்சா பசங்க கிண்டல் பண்ற‌தையும் மேற்க்கத்திய பெண்கள் மாதிரி சகஜமா எடுத்துக்கணும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன பிரச்சனை பெண்களுக்குத்தான். அப்புறம் இந்த நைட்டி, அது நைட்டியா இல்ல "டே"டியானு தெரியல, எப்பப்பாத்தாலும் அதையே போட்டுட்டு அலையறது. நைட்டிய போட்டுட்டு இவங்க வாசல பெருக்கினா பசங்க ஜொள்ளுவிடறாங்களாம். அதுவே சேலைய ஒழுங்க கட்டிட்டு பெருக்கினா யாரு ஜொள்ளுவிடுவாங்க?. இந்த டீ‍சர்ட்டையும் ஜின்ஸ்சையும் போட்டுட்டு பாவம் இந்த பொண்ணுங்களே படாதபாடு படுறாங்க. நிக்கறப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, டீசர்ட்டு சரியா ஜின்ஸ முட்டிட்டு இருக்கும், உட்காரும் போது அவங்க முதுகு தெரிய கூடாதுனு அந்த டீசர்ட்ட போட்டு இழு இழுனு இழுக்கறத பாத்தா சிரிப்புதான் வரும், இத பாத்தா பசங்களுக்கு கிண்டல் அடிக்காம வேற என்ன தோணும்.ஆடையோட நம்மளையும் அழகா தோற்றமளிக்கச் செய்வது தான் கலாச்சார மாற்றம் ஆபாசமா இல்ல .இத எல்லாம் பொண்களுக்கு சொன்னா அது அவங்க சுதந்திரத்த மறுக்கறதா நினைக்கறாங்க. இப்படிதாங்க ஒரு நாள் காந்திபுரம் பஸ்டேண்டுடல நின்னுட்டு இருந்தேன், எம்பக்கத்துல ரெண்டு பசங்க கேம்பஸ் இண்டர்வியுவ பத்தி பேசிட்டு இருந்தாங்க, அட பரவாலையா பசங்களும் முன்னேற இந்த வயசுலையே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு சந்தோசப் பட்டேன், திடீர்னு சத்தம் பத்தா ரெண்டு பொண்ணுங்க கட்டி புடிச்சுட்டு முத்தங்கொடுத்துட்டு இருந்தாங்க, பாத்து ரொம்ப நாளாச்சு போல, இத பாத்த அந்த பசங்க கருமம்டா, இங்கையே இப்படினா? என சொல்றத கேட்டேன். அதுவரைக்கு ஒழுங்க இருந்த பசங்கள இப்படி பேச வெச்சது அந்த பொண்ணுங்களோட செயல் தான். கை கொடுக்கலாம், கட்டிப்புடிக்கலாம் ஆனா முத்தம் அதுவும் பொது இடத்துல அவசியமா? கொஞ்சம் கூட இங்கீதம் தெரிய வேண்டாம்? ஈவ் டீசிங்கிற்க்கு ஆண்கள் 70% காரணம்ன‌ மீதி 30% பெண்களும் காரணம், அந்த 30% பெண்ணுங்க ஒழுங்க இருந்தா ஆண்கள ஒரு 20% கண்டிப்பா குறைவாங்க.தயவு செஞ்சு இத எல்லா பொண்ணுங்களும் புரிஞ்சுக்கணும். வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என கூறி இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும் கைதட்டல்கள் ஓய சிறிது நேரம் ஆனது. இதை பார்த்த சக்திக்கு அந்த பெண்ணின் கையைப் பிடித்து குலுக்க‌ வேண்டும் போலிருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒரு பெண்ணே த‌ன‌து இன‌த்தின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டிய‌து அவ‌னுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. இதுவே அவ‌னுக்கு அந்த‌ பெண்ணின் மீது ஒருவித‌ ம‌திப்பை அவ‌ன‌து ம‌ன‌தில் ஏற்ப்ப‌டுத்திய‌து. இத‌னை வெளிக்காட்டிக் கொடுக்காம‌ல் அந்த‌ பெண்ணை ம‌ன‌திற்க்குள் வாழ்த்தினான். அவ‌ள‌து முக‌மோ அவ‌ன‌து ம‌ன‌திற்க்குள் வாழ‌ ஆர‌ம்பித்த‌து.

சில‌ தின‌ங்க‌ளுக்கு பிறகு க‌ல்லூரி பூங்காவில் திவ்யா தனியாக அம‌ர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது இர‌ண்டு ஆண்க‌ள் பேசும் குர‌ல் கேட்ட‌து.

"டேய் ம‌ச்சா ந‌ம்ம‌ தேடுஇய‌ர் மாத‌வி இருக்காள‌ அவ‌ள‌ பிக்கப் ப‌ண்ணீட்டேன்டா, செம‌ க‌ம்ப‌னி கொடுக்க‌றாடா, பைக்குல‌ கூப்பிட்ட‌ வ‌ர்றா, சினிமாக்கு கூப்பிட்டா வ‌ர்றா செம‌ ஜாலியா என்ஜாய்மெண்டு தான்டா, நீயும் டிரை ப‌ண்ணிப்பாருடா சிட்டு சிக்கிச்சுனா ஜ‌மாய்க்கலாம்டா" என‌ க‌ண்ண‌டித்த‌வாரு சொன்னான்.

"தூ நாயே இத‌ சொல்ல‌ உன‌க்கு வெட்க‌மா இல்ல‌"

"டேய் என்ன‌டா ந‌ல்ல‌வ‌ன் மாதிரி பேச‌ற‌, உன‌க்கு பொண்ணுங்க‌ளையே புடிக்காதேனுதான் இத‌ சொன்னேன்"

"டேய்!!! பொண்ணுங்க‌ளோட‌ கேர‌க்ட‌ர் தான் புடிக்காது, அதுக்காக‌ இது நாள் வ‌ரைக்கு ஒரு பொண்ண‌ த‌ப்பா பாத்த‌தும் இல்ல‌ நினைச்ச‌தும் இல்ல‌, பொண்ணுங்க‌ என்ன‌ ஊறுகாய் பொருளா? உங்க‌ போதைக்கு தொட்டுக்க‌? ஒரு த‌ங்க‌ச்சி இருக்க‌ற‌ நீயே இப்ப‌டி பேச உன‌க்கு வெக்க‌மா இல்லை? இதுக்கு மேல‌ என்ன‌ பேச‌ வெச்சுடாத‌" என‌ கூறி கோப‌த்தில் ச‌க்தி ந‌ட‌ந்து கேன்டினுக்கு சென்றான்.

தொடரும்...