தாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்...பாக‌ம் - 4

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2
தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3

காதல் அவனை வேற்றுகிரகத்து வாசியாக்கியது. பார்ப்பவர்கள் எல்லோரும் அழகாய் தோன்றினர் அவனுக்கு, மற்றவருக்கோ அவன் வினோதமாகத் தெரிந்தான். இரவுகள் நீண்டன, பகல்கள் சுருங்கியது. தினம் தினம் காதலர்தினமாகியது. வீதியில் பறக்கும் பட்டாம் பூச்சியை துரத்திப் பிடித்து மீண்டும் பறக்க விட்டு ரசித்தான். அவனது நிழலும் அவனை பார்த்து கேலி செய்தது.நாட்களை காதல் கரைத்தது.

"ஆ..!!! அம்மா..!!!"

அவர்கள் சென்று கொண்டிருந்த பைக் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியில் மோதியது.ஆனந்த் மற்றும் சக்தி இருவரும் தூக்கியெறியப்பட்டனர்.
ம‌ருத்தும‌னை முழுவ‌தும் க‌ல்லூரி மாணவ‌ர்க‌ள். தீவிர‌ சிகிச்சை பிரிவில் இருவ‌ரும் அனும‌திக்க‌ப் ப‌ட்டிருந்த‌ன‌ர். ச‌க்தியின் த‌லையில் ப‌ல‌த்த‌ அடி ப‌ட்டு இருப்ப‌தாக‌வும், ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌வும், ஆன‌ந்திற்க்கு கால் எலும்பு முறிந்துபோன‌தாக‌வும் அவ‌னுக்கும் ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌ ம‌ருத்த்வ‌ர்க‌ள் கூறி இருந்த‌னர்.

ஜீவ‌ந‌தி வ‌ற்றிப்போன‌து போல் இருந்த‌து திவ்யாவிற்க்கு. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தை உண‌ர‌ முடியாம‌ல் த‌வித்துக் கொண்டிருந்தாள். புன்னகையில் பூத்த‌ பூக்க‌ளை எல்லாம் க‌ண்ணீர் க‌ருக்கிக் கொண்டிருந்த‌து. கான‌ல் நீராய் காத‌ல்.
சில‌ தின‌ங்க‌ளில் ஆன‌ந்த் மீண்டு வ‌ந்தான், ஆனால் நடக்க மட்டும் சில மாதங்கள் ஆகுமென மருத்துவர்கள் கூறி இருந்தனர். ஆனால் ச‌க்தி இன்ன‌மும் அதே நிலையில் தான் இருந்தான். ப‌ல‌ முய‌ற்ச்சிக‌ளுக்கு பிற‌கு அவ‌ன‌து உயிரை ம‌ட்டும் தான் ம‌ருத்துவ‌ர்க‌ள் காபாற்றின‌ர். ஆனால் அவ‌ன் எப்போதும் ம‌ய‌க்க‌ நிலையிலேயேதானிருந்தான்.மீண்டும் ஒரு மாதத்திற்க்கு பின்ன‌ர் ம‌ற்றுமொரு ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும், அத‌ன் பின்ன‌ர் தான் எதையும் உறுதியாக‌ சொல்ல‌ முடியும் என‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறின‌ர்.
ச‌க்தியின் க‌ண்க‌ள் எப்போதும் மூடியே இருந்த‌து. உள்ளுக்குள் திவ்யாவின் நிழ‌ல் ம‌ட்டும் ஓடிக் கொண்டிருந்த‌து. அது அவ‌னுக்கு கூட‌ தெரிய‌வில்லை.
திவ்யா ஏன் இதனைச் செய்கிறோமெனத் தெரியாமல் நாட்களைத் தொலைத்துக் கொண்டுருந்தாள். அவ‌ள‌து காத‌ல் அவ‌ர்க‌ளது வீட்டிற்க்கும் தெரிய‌ வ‌ந்த‌து, அவக‌ள‌து பெற்றோர் க‌ல‌ங்கிப் போனார்க‌ள். எங்கே அவ‌ள‌து வாழ்க்கை தொலைந்துவிடுமோ என‌ அச்ச‌த்தில் க‌ல்லூரி ப‌டிப்பை பாதியில் நிறுத்திவிட்ட‌ன‌ர். அவ‌ளை த‌ங்க‌ள‌து சொந்த‌ ஊருக்கு அனுப்பி வைத்த‌னர்.
ச‌ரியாக‌ ஒரு மாத‌த்திற்க்கு பின்ன‌ர் த‌ன‌து தாயையும் த‌ந்தையையும் காண‌ வ‌ந்தாள். அவ‌ள‌து முக‌ம் அப்போதும் மாறாம‌ல் உதிர்ந்த‌ பூவாக‌வே இருந்த‌து. இடையில் யாருக்கும் தெரியாம‌ல் த‌ன‌து ஊரில் இருந்து அவ்வ‌ப்போது ச‌க்தியை ம‌ருந்துவ‌ம‌னையில் சென்று க‌ண்டு வ‌ந்தாள்.நாளை ச‌க்திக்கு ஆப்ரேச‌ன்.
திவ்யாவின் வீட்டில்

"அப்பா, நா உங்க‌ளுக்கு ஏதாவ‌து க‌ஷ்ட‌த்த‌ கொடுத்து இருக்கேனா?"

"என்ன‌ம்மா, எங்க‌ளுக்கு நீ ஒரே செல்ல‌ப்பொண்ணு, உம்மேல‌ எங்க‌ளுக்கு பாச‌ம் அதிக‌ம், இப்ப‌டி எல்லாம் பேசாதமா"

"அப்பா, அப்ப‌ நான் சொன்ன‌ நீங்க‌ கேட்பீங்க‌தானே"

"சொல்லுமா என்ன‌ விச‌ய‌ம்"

"நா ச‌க்திய‌ பாக்க‌ணும் பா, அவ‌ங் கூட‌வே நா வாழ‌ணும் பா, இந்த‌ ஒரு ஆசைய‌ ம‌ட்டும் நிறைவேத்து வைங்க‌ப்பா, பிளீஸ்..!!!! "

" என்ன‌ திவ்யா!!! தெரிஞ்சுத பேச‌றையா?, நீ சின்ன‌ப் பொண்ணு உன‌க்கு ஒண்ணும் தெரியாது, போ போய் க‌ம்முனு தூங்கு"

"பா இந்த‌ ஜென்ம‌த்துல‌ என்னால‌ ச‌க்தி இல்லாம‌ இருக்க‌ முடியாது பா பிளீஸ்"

"திவ்யா, உன‌க்கு என்ன‌டி ஆச்சு திடீர்னு என்ன‌ என்ன‌போ போச‌ற‌?" அவ‌ள‌து தாய் அழுது கொண்டே கேட்டாள்

"அம்மா, நீ என‌க்கு எப்ப‌டி முக்கிய‌மோ, அதே மாதிரிதான் நான் ச‌க்திக்கு, என‌க்கு இந்த‌ மாதிரி ஒரு நிலை வந்திருந்த‌ ச‌க்தி க‌ண்டிப்பா என்ன‌ விட்டுட்டு போக‌ மாட்டான், அப்ப‌டிப‌ட்ட‌வ‌னுக்கு நான் எப்ப‌டிமா துரோக‌ம் செய்ய‌ முடியும்..."

"அவ‌ன் ந‌ல்ல‌ இருந்தாக் கூட‌ ப‌ர‌வால‌ , இப்ப‌ இருக்கிற‌ நில‌மைல‌ ..."

அத‌ற்க்கு மேலும் த‌ன‌து தாய் அழுவ‌தை அவ‌ளால் தாங்கிக் கொள்ள‌ முடியாத‌தால் அந்த‌ இட‌த்தில் இருந்து ந‌க‌ர்ந்தாள். நாளை ந‌ட‌க்க‌ இருக்கு ஆப்பேச‌ன் த‌னது காத‌ல் காப்பாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும் என இர‌வு முழுவ‌து க‌ண்ணீரை காணிக்கையாக்கினாள் க‌ட‌வுளுக்கும்.
ம‌றுநாள் காலை,கதவு நீண்ட நேரமாக‌ திறக்காத்தால் அவளது பெற்றோர் பயத்தில் கதவை தட்டினர்

"திவ்யா..!!"

"திவ்யா... க‌த‌வ‌த்தொற‌மா...திவ்யா"

தொட‌ரும்...

0 விமர்சனங்கள்: