தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1

தாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2

கேன்டினில் தேனீர் பருகிக் கொண்டிருந்தான்.

"ஹாய்" ஒரு பெண்ணின் குரல், திரும்பி பார்த்ததும், திவ்யா நின்று கொண்டிருந்தாள். தனது நிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ..." மீண்டும் அவள்.

ஒரு முறை சொர்க வாசலின் முகப்பை பார்த்து வந்ததுபோல் உணர்ந்தான்.
"என்னங்க நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பேசவே மாட்டிங்கறின்ங்க" என்றாள்.சில்லென்று வார்த்தைகள் அவனை சுயநினைவிற்க்கு அழைத்து வந்தது.

"ஒ!! சாரி" என்றான்.

"என்னோட பேரு திவ்யா, நீங்களும் உங்க நண்பரும் பேசியத கேட்டு இருந்தான், உங்களுக்கு பெண்களை கண்டாலே பிடிக்கது தான் கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இன்னைக்கு நீங்க பேசியத கேட்டதும் பெண்களின் மேல் நீங்க வெச்சு இருக்கற மரியாதை மாதிரி ஒருத்தர இதுவரை நான் பார்த்தது இல்ல, நைஸ் டு மீட் யூ" என கை குலுக்கினாள்.

சிறிய புன்னகை பூத்தவன்."மீ டூ" என்றான்.

முதன் முறையாக ஒரு பெண் அதுவும் தான் அன்று பட்டி மன்றத்தின் போது நினைத்ததை இயல்பாக நடத்தி காட்டினாள் என்பதை அவன் நினைக்கும் நிமிடங்களில் சிறிது சிறிதாக அவன் காதல் கொண்டான்.

தினமும் அவளை இவன் பார்த்து சிரிப்பதும், அவள் இவனை பார்த்து சிரிப்பதுமாக இருந்தன நாட்கள்.அவளின் முகபாவனைகள் ஒவ்வொன்றும் மனதில் கோர்வைகள் ஆகி தினமும் ஒரு காதல் படமாய் ஓடியது. இதனை அவன் நண்பர்கள் அறிந்த போது காதல் அவன் மீது வெட்கத்தை பொழிந்தது.

காதலர் தினத்தன்று காலையில் அவனது வகுப்பின் முன்"டேய் மச்சா, சொன்னது போல பேசுடா, லூசுத்தனமா பேசிடாத" என்றான் ஆன‌ந்த்."டேய் அது எல்லாம் நான் பாத்துக்கறேன் நீ கொஞ்ச‌ம் கெள‌ம்பு" என்றான் ச‌க்தி.
திவ்யா அவ்வ‌ழியாக் வ‌ருவ‌தை பார்த்த‌தும் அவ‌னது ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் ம‌றைந்த‌ன‌ர்.

அவ‌ன‌து ம‌ன‌ம் ம‌ட்டும் ர‌யில் க‌ட‌ந்த‌ த‌ண்ட‌வாள‌மாய் அதிர்ந்து கொண்டிருந்த‌து, அவ‌ள் நெருங்கி வ‌ர‌ வ‌ர‌ அவ‌ன் ம‌ன‌தில் ஆன‌ந்த‌த் தாண்ட‌வ‌ம்.அவ‌ளும் அருகில் வ‌ந்தாள்.

"ஹாய் திவ்யா"

"ஹாய்..."

புடிச்சு இருக்கா..?"

"என்ன‌?!!"

"புடிச்சு இருக்கா?"

"... ... ..."

"சொல்லு திவ்யா, புடிச்சு இருக்கா..?"

"எனக்கு கிளாஸ்கு நேரமாச்சு நா போகணூம்" என கூறி அவனது பதிலை எதிர்பாராமல் தனது வகுப்பிற்க்கு சென்றாள்.

இடி விழுந்த மரமாய் இவனது மனம் ரணமானது.அவனது நண்பன் ஆனந்த் அங்கு வந்தான்.

"என்ன‌டா என்ன‌ சொன்னா?"

"ஒண்ணு சொல்ல‌ல டா"

"என்ன‌து!!! நீ என்ன‌ கேட்ட‌"

"புடிச்சு இருக்கானு கேட்டேன்"

"டேய்!!! முத‌ல்ல‌ அவ‌ளுக்கு காத‌லர்தின‌ வாழ்த்துக்க‌ள் சொல்லு அப்ப‌டியே போக‌ போக‌ மொபைல் நெப்ப‌ர் கேளு, எதுக்கு கேட்பா, என‌க்கு கொடுக்க‌ மாட்டையானு கேட்டுட்டு பேச்சுவாக்குல‌ அப்புறம் உன்னோட காதல சொல்லுனு கொடுத்தா, நீ என்ன‌ பொண்ணா பாக்க‌ போயிருக்க‌ புடிச்சு இருக்க‌னு கேட்கா?"

"அவ‌ள‌ பாத்த‌தும் என‌க்கு எல்லாம் ம‌ற‌ந்து போச்சுடா"

"ச‌ரிவிடு சாய‌ங்கால‌ம் பாத்துக்க‌லாம், அப்ப‌வாவ‌து உருப்ப‌டியா பேசு"

அவ‌னது வ‌குப்பின் வ‌ழியாக எப்போது செல்லும் அவ‌ள் அன்று மாலை ம‌ட்டும் வ‌ர‌வே இல்லை, இவ‌னும் காத்திருந்து விட்டு சோக‌மாக‌ ரூமிற்க்கு சென்றான்.

"விடுடா ம‌ச்சா, எப்ப‌டியாவ‌து அவ‌ள‌ பாத்துக்க‌லாம், இல்ல‌ அவ‌ளுக்கு உன்ன‌ புடிக்க‌ கூட‌ போயிருக்க‌லாம், விடுடா இந்த பொண்ணுங்களே இப்படித்தான்" என்றான் ஆன‌ந்த்.

ச‌க்தியின் ம‌ன‌ம் அவ‌ன் சொன்ன‌தை ம‌றுத்த‌து, இருந்தும் எதுவும் பேசாம‌ல் தன‌து அறைக்கு சென்று தாழிட்டு ப‌டுத்தான்.அப்போது அவ‌னது பொபைல் சிணுங்கிய‌து. எடுத்துப் பார்த்தால் அதில் ப‌திவு செய்ய‌ப்ப‌டாத‌ எண் தோன்றிய‌து. பேச‌ ம‌ன‌மில்லாத‌ போதும் வேண்டா வெறுப்பாக‌ பேசினான்.

"ஹ‌லோ"

"... ... ..."

"ஹ‌லோ யாரு பேச‌றிங்க‌"

"நா திவ்யா பேச‌றேன்"

"யாரு??? எந்த‌ திவ்யா?"

"ஹும்ம்... உங்க‌ளுக்கு புடிச்ச‌, உங்க‌ள‌ புடிச்ச‌ திவ்யா"

அவ‌ன‌து ம‌ன‌ம், குடை இல்லாத‌ போது பொழியும் குளிர்ந்த‌ ம‌ழையில் ந‌னைந்த‌ குழ‌ந்தையான‌து.

"காலைல‌..."

"ஆமா... திடீர்னு கேட்டா என்ன‌ சொல்ற‌து, என‌க்கும் ப‌ய‌ம் இருக்காத‌???"

"பயமா? ஹ ஹ ஹ...அப்ப‌ சாய‌ங்க்கால‌ம்???"

"சும்மா தான், ஒரு சில‌ ம‌ணி நேர‌ம் கூட‌ வெயிட் ப‌ண்ண‌ மாட்டீங்க‌லா?என‌ சொல்லி சிரித்தாள். அப்படியே அவனது இரவுப் பொழுது "மலர்ந்தது".

காதல் அவ‌ன‌து வான‌ம் முழுவ‌து வ‌ண்ண‌த்துபூச்சிக‌ளை ப‌ற‌க்க‌ செய்த‌து.அவ‌ன‌து உட‌லில் இருக்கு ஒவ்வொரு அணுவும் சுவாசிப்ப‌தை அவ‌னுக்கு உண‌ர்த்திய‌து. பார்க்கும் இட‌ங்க‌ள் எல்லாம் அழ‌காய் செய்த‌து.வ‌ர‌ண்ட‌ பூமிக்குள் ஓடி ஒளியும் த‌ண்ணீர்த் துளியாக் அவ‌னது எண்ண‌ங்க‌ள் எல்லாம் அவ‌ளுக்குள் ம‌றைந்த‌து.

தொட‌ரும்..

2 விமர்சனங்கள்:

Anonymous said...

//தலைக்கோத‌ //
தலைக்கோத = தலைக்கு ஓத
தலைகோத = தலை கோத

கோபால் said...

@ anonymous
நன்றி...