பெருங்கடலில் சிறுதுளியாய்க் "கலக்க" வந்துட்டோம்

தமிழ்மக்கள் எல்லாருக்கும் ஒரு வணக்கமுங்க.கொஞ்ச நாளா கவிதைய மட்டும் படிச்சுட்டு இருந்தனுங்க. அப்புறம் நம்ம பாசக்கார அண்ணன் பிரேம் உசுப்பிவிட்டதால இப்ப நானும் ஒரு பிளாக் எழுத ஆரம்பிக்கறனுங்க. ராக்கெட் விடுரத பத்தி எழுதலானு தோனிச்சுங்க. சரி இதப்பத்தி தெரிஞ்சுக்கலானா? ஒண்ணு அப்துல் கலாம் அடுத்த அறிவாளி நம்ம கைப்புள்ள, அப்துல் கலாம் எங்க நம்ம திறமையப் பாத்து இனிமே நீதான் எல்லா ராக்கெட்டை விடனும்னு சொல்லிட்ட மத்த விண்ஞானிகளுக்கு வேலை போயிடும்கற காரணத்தால என்னோட முடிவ கனத்த இதயத்தோடு விட்டுட்டனுங்க.(நீங்க எல்லாம் பீல் பண்றது புரியுது...) அப்புறம நம்ம கைப்புள்ள கிட்ட பல நாள் பெரும் முயற்ச்சி எடுத்து பல பேப்பர்கல வேஸ்ட் பண்ணி கத்துகிட்டு என்னோட ராக்கெட்ட ஏவுதளத்துக்கு(எங்க வீட்டு வாசல் தாங்க) கொண்டுவந்து வானத்துல அனுபறதுக்குள்ள‌ பாடு பெரும் பாடப்போச்சுங்க. ராக்கெட் மேல போகுதானு பாத்த அங்க நிலாவ காணங்க அடடா இன்னைக்கு அம்மாவாசையா போச்சே நம்ம ராக்கெட் எப்படி நிலாவ கண்டு பிடுச்சு போகுங்கற கவலையோட நின்னுட்டு இருக்கற‌ப்ப பக்கத்துவூட்டு ஜன்னலுக்குள்ள‌ ராக்கெட் போய்யுடுச்சுங்க. திடீர்னு ஒரு ஒளிவட்டம் என்னடானு பாத்தா ஜன்னல்ல ஒரு நிலா. அட நம்ம ராக்கெட் சரியாதான் வேலை செஞ்சு இருக்கு,இதத்த‌ நம்ம விண்ஞானிக நிலாவுக்கு ராக்கெட் அனுப்பறதுனு சொல்றாங்கனு முடிவு பண்ணி இதபத்தி எழுத ஆரம்பிக்கறனுங்க. நீங்க‌ளும் ப‌டிச்சுட்டு உங்க‌ பக்கத்துவூட்டு நிலாவுக்கு ராக்கெட் அனுப்புங்க‌, ஒரு ஒளிவ‌ட்ட‌ம் உங்க‌ளுக்கும் தெரியும்.அப்புற‌ம் த‌மிழ்ல‌ ஆரம்பிச்சு ஜாவா வ‌ரைக்கும் பிழை இல்லாம‌ எழுதி ப‌ழ‌க்க‌மில்லைங்க‌ அத‌னால‌ பிழை இருந்த‌ ம‌ன்னிக்க‌வும்.

காத‌ல் த‌த்துவும்:

இந்த‌ காதல் சின்னம் இருக்குது இல்லிங்கலா அதுல ஒரு இதயத்த அம்புதுளைக்கற மாதிரி இருக்குதுங்க. அதுல ஒரு சின்ன திருத்தமுங்க, ரெண்டுஇதயத்த ஒரு அம்பு துளைப்பது தான் காதல்னு ஒரு தத்துவத்த பொழிஞ்சு என்னோடபதிவ ஆரம்பிகரனுங்க.

0 விமர்சனங்கள்: