காதல் யாதெனில்...

"ஏன்டி நீ என்ன லூசா?"

"என்னடி இப்படி புதுசா! இத்தன வருசமா பழகியதுக்கு அப்புறமும் இப்படி ஒருகேள்வி கேட்கற. என்ன பாத்த உனக்கு லூசு மாதிரி தெரியுதா?"

"இல்ல உனக்கு அறிவே இல்லடி. நானா இருந்து இருந்தா இப்படி ஏமாந்துபோயிருக்க மாட்ட. சூப்பரான வாழ்க்கைய தொலச்சுட்டுட ஏ இப்படி பண்ணின‌? "

"என்ன‌டி சொல்ற‌ எதுவுமே புரியல‌"

"ஹ‌ரிய‌விட‌ குமார் எல்லா வித‌த்திலும் பெரிய‌ ஆளு, ஆனா நீ என்ன‌ன‌ஹ‌ரிய‌ தான் காத‌லிப்ப‌னு சொல்ற‌, இப்ப‌ குமார் சாப்டுவேர்ல‌ வேலை கைநிறைய ச‌ம்ப‌ள‌ம், இன்னும் ரெண்டு வ‌ருச‌த்துல‌ அமெரிக்க‌ போயிடுவான் சோலைப் ந‌ல்ல‌ இருக்கும். குமார் என்னதான் இஞ்சினியரா இருந்தாலும்ல‌ட்சிய‌ம் அது இது சொல்லிட்டு இப்ப மெக்கானிக்க கடை வெச்சு இருக்கான்எப்ப‌டிடி லைப் ந‌ல்ல‌ இருக்கும், நீ வேஸ்ட்டுடி பொழைக்க‌ தெரிய‌த‌வ‌ள‌இருக்க‌"

" காத‌ல் காச‌ பாத்தோ இல்ல‌ ஒருத்த‌ன் ஸ்டேட்ட‌ஸ் பாத்தோவ‌ராதுடி. நீ சொல்றத‌ எல்லாம் பாத்துவ‌ர்ர‌து காத‌ல் இல்ல‌. காத‌ல்ன‌அதுக்கு பேரு ஊக்க‌ம். இன்னைக்கு குமார் மெக்கானிக்க‌ இருந்தாலும்அவ‌னோட‌ ல‌ட்சிய‌ம் ஆட்டோ மொபைல‌ ஏதாவ‌து புதுசா சாதிக்க‌ணும்னு. அதுக்குசரியான பாதைய தான் தேர்ந்து எடுத்துதிருக்கான்.ஒரு வேக‌ம் இருக்கு,அதுக்கு நான் உறுதுணையா இருக்க‌ என‌க்கு ஆசை. அதுலையும் ஒரு சுய‌ந‌ல‌ம்தான்டி இருக்கு இப்ப‌ அவ‌னோட‌ முன்னேற்ற‌த்திற்க்கு முய‌ற்ச்சியா இருந்தாஎன்மேல‌ அவ‌னுக்கு எப்ப‌வும் காத‌ல் இருக்கு. என்ன‌ எப்ப‌வும் ந‌ல்ல‌வ‌ச்சிருப்பான். நீ சொல்ற‌ மாதிரி ச‌ம்ப‌ள‌ம், லைப் செட்டில் எல்லாம்பாத்து ஒருத்த‌ன‌ காத‌லிக்க‌ ஆயிர‌ம் பேரு இருப்பாங்க‌ ஆனா அதுகாத‌ல்இல்ல‌ அது முழுக்க‌ முழுக்க‌ சுய‌ந‌ல‌த்துக்காக‌ செய்ய‌ற‌து. அதுகொஞ்ச‌ம் நாள் தான் நிலைக்கும். அப்புறம், வேற‌ ஒருத்த‌ன் அவ‌ன‌விட‌பெரிய‌ ஆளா இருந்தா அவ‌ன் பின்னாடி போக‌ணுமா? இதுக்கு பேரு எல்லாம்காத‌ல்?. அப்ப‌டியே அந்த‌ உற‌வு நீடித்தாலும் நீ சாதார‌ண‌ உற‌வாதான் ஒட்டிட்டு இருப்ப‌. உன‌க்குனு ஒரு ம‌ரியாதை இருக்காது. அவ‌னோட‌ வாழ்க்கைமுன்னேற்றத்திற்க்கு உன்னோட‌ ப‌ங்கு எதுவுமே இருக்காது அப்ப‌டி இருக்க‌ உன‌க்கு த‌னி ம‌ரியாதை எப்ப‌டி கிடைக்கு? காத‌ல் ஒருத்த‌ன் வாழ்க்கைல‌ ஒட்டிக்க‌ற‌து இல்ல‌ அவ‌னோட‌ வாழ்க்கையா இருக்க‌ற‌து தான் காத‌ல்.க‌ண்டிப்பா ஹ‌ரி பெரிய ஆளா வருவான் அதுக்கு நான் முய‌ற்ச்சியா இருப்பேன்.ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னாடி ஒரு பொண்ணு இருக்கானு சொன்னாமட்டும் பத்தாது செயல்ல காட்டணும்"ஒரு அழ‌கிய காதலைத் தாங்கிய‌வ‌ளாக‌ கவித்தா தெரிய‌ ஆர‌ம்பித்தாள் அவ‌ள‌து தோழிக்கு.

"ஆல‌ ம‌ர‌த்து விழுதுக‌ளில் ஒன்ற‌ல்ல‌ காத‌ல் துளிர்விடும் விதையின் ஆணிவேர்தான் காத‌ல்"

-------------------------------------------------------------------------------------------------இந்த தடவ சொல்லாமலே ஊருக்கு போய்ட்டா, இந்த கொரங்கு இப்படி ஒரு தடவ கூடஇந்த மாதிரி சொல்லாம போனது இல்லையே சரி ஏதாவது அவசர வேலை ஏதாவதுஇருக்குமோ என‌ நினைத்துக் கொண்டே தனது வகுப்பிற்க்கும் சென்றுகொண்டிருந்தான் சிவா. க‌வித்தாவின் தோழிகளிடமும் விசாரித்துப்பார்த்ததிலும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஏதோ உடம்பு சரில்லை எனகூறினார்கள். க‌விதாவின் மொபைலுக்கு தொடர்பு கொள்ள முயன்றபோதும் அதுவும்சுவிச்சாப் செய்யப்பட்டு இருப்பதை அறிந்ததும் அவனது மனம் வேதனையில்மூழ்கியது. ப‌லவாராக‌ அவ‌ளை தொட‌ர்பு கொள்ள‌ முய‌ற்ச்சித்தும்முடிய‌வில்லை. வாழ்வே ந‌ர‌க‌மாய் இருந்த‌து. சில காலம் க‌ழித்து எப்போதும் போல் அலுவலகம் வ‌ந்தாள்க‌வித்தா. அவ‌ள் வ‌ந்த‌தில் இருந்து யாரிட‌மும் ச‌ரிவ‌ரப் பேச‌வில்லை.அவ‌ளிட‌ம் சிவா பேச‌ முற்ப்ப‌ட்ட‌போதும் அவ‌ள் அவ‌னை த‌விர்த்துசென்றாள். அவ‌ன் தென்ப‌டும் திசையில் இருந்து அவ‌ள் வில‌கிச் சென்றாள்.இத‌னைப் பார்த்து சிவாவிற்க்கு கோப‌மாக‌ இருந்த‌து. கோப‌த்தைவிட அவ‌னதும‌னம் சோக‌த்தில் த‌த்த‌ளித்த‌து. என்ன‌ கார‌ண‌ம் ஏன் வில‌கிப்போகிறாய்என‌ ப‌ல‌த‌ட‌வை அவ‌ன் கேட்டும் அவ‌ள் அத‌ற்க்கு மௌனத்தை ம‌ட்டுமேப‌திலாய் கொடுத்தாள்.முடிந்த அளவிற்க்கு அவனைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.

க‌வித்தா அலுவலகம் முடிந்ததும் பேருந்துநிறுத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தாள். இத‌னை பார்த்த‌ சிவா இன்று
எப்ப‌டியாவ‌து இன்று அவ‌ளிட‌ம் பேசிவிட‌ வேண்டும் என‌ எண்ணிக் கொண்டுஅவ‌ளை பின் தொட‌ர்ந்து வேக‌மாக‌ சென்றான். அவ‌ன் வ‌ருவ‌தை பார்த்த‌துஅவ‌ளின் வேக‌ம் கூடிய‌து.ஓடிச் சென்று அவ‌ள் முன் நின்றான். எத்த‌னையோமுறை காத‌லைக் க‌ற்றுக் கொடுத்த‌ அவ‌ள‌து விழிக‌ள் இன்றும் ஏதோ‌ பேச‌துடிக்கின்ற‌ன‌ என்ப‌தை அவ‌னால் அறிந்து கொள்ள‌ முடியாம‌ல் இல்லை. ஆனால்அவ‌ள‌து உத‌டுக‌ள் அத‌னைத் த‌விர்க்க‌ பார்க்கின்ற‌து என்ப‌தை அவ‌ன்அறிந்திருந்தான்.ஒரு சில நொடிகள் அவ‌னைப் பார்த்துவிட்டு மீண்டும்பார்க்க‌ இய‌லாத‌வ‌ளாய் அவ‌னைத் த‌விர்த்து முன்செல்ல‌ முய‌ன்றாள்.

"க‌வித்தா ஒரு நிமிஷம், உங்கிட்ட நா பேசணும் கொஞ்சம் வா."

"என‌க்கு நேர‌மாச்சு நா போக‌ணும் உன் கூட‌ என‌க்கு பேச‌ இப்ப‌நேர‌மில்ல‌ கொஞ்ச‌ம் என்ன‌ போக‌விடு சிவா"

" உங்கூட‌ பேசாம‌ இருக்க‌ முடிய‌ல‌ "

"வேண்டா சிவா இதோட‌ விட்டுட‌லாம் ப்ளிஸ்.உன‌க்கும் என‌க்கும் ஒத்துவ‌ராது"

" என்ன‌து ஒத்துவ‌ராதா !? இப்ப‌ ஏ இப்ப‌டி பேச‌ற‌... நீ எதையோம‌றைக்க‌ற..."

" அப்படி எல்லாம் எதுவும் இல்ல‌ நான் எப்ப‌வும் போல‌ தான்இருக்கேன் நான் எதையும் ம‌றைக்க‌ல‌"

அங்கே சிலர் நடந்து கொண்டிருந்ததால் அவள் மறுத்தும் அவளைவலுக்கட்டாயமாக‌ அழைத்துக்கு கொண்டு அருகில் இருக்கும் புல்வெளிக்குசென்றான். அங்கே அவர்கள் இருவரும் அமர்ந்து பேசும் அதே இருக்கையில்அம‌ர்ந்த‌ன‌ர்.சில‌ நொடிக‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் அமைதியே உரைய‌டிய‌து.

"எதுக்காக ஊருக்கு போன..? நீ என்கிட்ட‌ சொல்லாம‌ இதுவ‌ரைக்கும் ஒருத‌ட‌வ‌ கூட‌ போன‌து இல்ல‌... அப்புறம் வந்ததுல இருந்தும் சரிய பேசல ஏ"நில‌விய‌ அமைதியை உடைத்தான்.

"சும்மாதா போன...உனக்கும் எனக்கும் என்ன இருக்குது உங்கிட்ட நான்எப்பவும் சொல்லிட்டு தான் போகணுமா?"

"என்ன இப்படி பேசற? என்ன நடந்தது வீட்டுல யாராவது ஏதாவது சொன்னாங்கல"

" வேற எப்படி பேசறது? இங்க பாரு சிவா என்ன விட்டுடு இது வரைக்கு நாமபழகியது எல்லாம் கனவுனு நின‌ச்சு மறந்துடு...வேற ஒரு ந‌ல்ல பொண்ண பாத்துலைப்ப செட்டில் ஆயிக்க‌"

"கனவா..? "

"சிவா சொன்ன‌ கேளு எங்கூட‌ நீ வாழ்ந்த உன்னால‌ ச‌ந்தோச‌ம‌ இருக்க முடியாது"

" உன்ன‌ விட்டுடு போன‌ ம‌ட்டும் நான் ச‌ந்தோச‌ம‌ இருப்பேனா?"

" சிவா சொன்ன‌ கேளுடா... ப்ளிஸ்... உன்னோட‌ லைப் ச‌ந்தோச‌மா இருக்கணும்என்னால‌ அந்த‌ ச‌ந்தோச‌த்த‌ கொடுக்க‌ முடியாது"

"நீ என்ன‌ விட்டுட்டு போன‌ தான் என்னால‌ ச‌ந்தோச‌மா வாழ‌ முடியாது அதுஉன‌க்கு ந‌ல்லாவே தெரியும்"

இதற்க்கு மேலும் அவ‌ளால் அவ‌னிட‌ம் என்ன சொல்வ‌து என்று தெரிய‌வில்லை.சில‌ நொடிக‌ள் மௌனம் நிலவியது.

" உன்கிட்ட‌ என‌க்கு அடிக்க‌டி வயித்து வ‌லி வ‌ரும்னு சொல்வேன்ல‌"

" ச‌ம‌ந்தம் இல்ல‌மா எதுக்கு இப்ப‌ பேசற"

" இல்ல‌ சிவா அது வ‌ந்து ... இர‌ண்டு மாச‌த்துக்கு முன்னாடி காலைல‌ரொம்ப வலி அதிக‌ம‌ இருந்த‌து அதுனால‌ தான் யாருகிட்ட‌வும் சொல்லாம அவசரமஊருக்கு போயிட்டேன். டாக்ட‌ர் கிட்ட‌ காட்டின‌ போது என்னோட‌க‌ர்ப‌ப்பையில் ஒரு க‌ட்டி மாதிரி வ‌ள‌ர்ந்து இருக்கு அதை ஆப்ரேச‌ன்ப‌ண்ணித்தான் எடுக்க‌ முடியும்னு சொல்லிட்டார். அதுனால‌ என்னால‌ ஒருகுழ‌ந்தை கொடுக்க மு.."க‌ண்ணிரில் வார்த்தைக‌ள் க‌ரைந்து கொண்டிருந்த‌து. அவ‌ள் பேச‌முடியாம‌ல்அழுது கொண்டிருந்தாள். உண‌ர்ச்சிக‌ள் கம்மிகலாக மாறி அவ‌ளை சுற்றிவ‌ளைத்து இருந்த‌து. அத‌ற்க்கு மேலும் பேச இய‌ல‌வில்லை. பேச‌னால் எங்கேவார்த்தைக‌ளைவிட‌ க‌ண்ணீர்த்துளிக‌ள் வ‌ழிந்துவிடுமோ என்கிற‌ அச்ச‌த்தில்இருந்தாள்.அவ‌னுக்கு என்ன‌ பேசுவ‌து என்று தெரிய‌வில்லை.

"இதுத கார‌ண‌ம் நீ ந‌ல்ல‌வ‌ன்டா வேற‌ ஒரு ந‌ல்ல‌ பொண்ணா பாத்துக்க... நீச‌ந்தோச‌ம இருந்தத்த நான் ச‌ந்தோச‌மாக‌ இருக்கு முடியும்.என்னால‌ உன‌க்குஎல்லா சுக‌த்தையும் கொடுக்க‌ முடியாது சிவா. உன்னோட வாழ்க்கை என்னால வீணாபோயிடக்கூடாது...ப்ளீஸ்டா..."

அதுவ‌ரை மௌன‌மாக‌ இருந்த‌வ‌ன் தீர்க‌மாக‌ ஒருமுடிவுட‌ன் பேச‌ ஆர‌ம்பித்தான்.

"காம‌ம் ம‌ட்டுமே காத‌ல் இல்ல‌.அதையும் தாண்டி ஒரு உண‌ர்வு தான்காத‌ல்.அழ‌கை ம‌ட்டும் பாத்துவ‌ர்ரது இல்ல‌ காத‌ல். உன்னோட‌ அழ‌க‌ம‌ட்டும் பாத்து நா காத‌லிக்க‌ல‌ அப்ப‌டி அழ‌குத காத‌ல்ன‌ டேயிலியும்ஒரு பொண்ணு க‌ண்ணுக்கு அழ‌க‌ தெரிவா அப்ப‌ அத்த‌ன‌ பேரையும் காத‌லிக்க‌முடியுமா? அந்த‌ அழ‌கையும் தான்டி இவ‌ ந‌ம‌க்ககாக‌ பொற‌ந்த‌ பொண்ணு. நாம‌தான் இவ‌ள‌ ந‌ல்ல‌ வ‌ச்சு இருக்க‌ முடியும். யாரு வ‌ந்தாலும் அவ‌ள‌ந‌ம்ம‌ கிட்ட‌ இருந்து பிரிக்க‌ முடியாது. அதே மாதிரி ந‌ம்ம‌ல‌ ந‌ல்ல‌பாத்துக்கு இவ‌ளால ம‌ட்டும் தான் முடியும்னு ஒரு உள்ளுண‌ர்வு சொல்லும்அது தான் காத‌ல் ஒரு அஞ்சு நிமிஷ‌ சுக‌ம் இல்ல‌ காத‌ல் ஆயுள் வரைக்கும்நீடிக்கும் சுகம் காத‌ல்"

அவ‌ள் எதையோ சொல்ல‌ வ‌ர‌ த‌ன‌து கைக‌ளால் அவ‌ள‌து உத‌டுக‌ளில் இருந்துஉதிரும் வார்த்தைக‌ளைத் த‌டுத்தான்.பின் மீண்டும் "இப்ப‌ என்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணினா ந‌ம‌க்கு குழ‌ந்தைபிற‌க்காது...என‌க்கு நீத‌ முத‌ல் குழ‌ந்தை ச‌வி நீ ம‌ட்டும் போதுஎன‌க்கு உங்கிட்ட‌ இருந்து நா வேற‌ எதையும் எதிர்பாத்து காத‌லிக்க‌ல‌.எதிர்பாத்து காத‌லிக்க காதல் ஒண்ணும் வியாபார‌ம் இல்ல‌. நீ ம‌ட்டும்என‌க்கு போதும். என்னோட‌ வாழ்க்க‌ முழுசா உன்னோட‌ ம‌டியில‌ த‌ல வ‌ச்சு
அந்த‌ சுக‌ம் போது நா ச‌ந்தோச‌மா வாழ‌.இதுக்க‌ மேல‌ எதுவும்பேசாத‌. நீத என்னோட‌ வாழ்க்கைனு நா எப்ப‌வே முடிவு ப‌ண்ணியாச்சு. கண்ணதொட‌ச்சுக்க‌. எப்ப‌வுமே நீதான்டி என‌க்கு எல்லாம்"

கண்ணீரில் காத‌ல் க‌சியா அவ‌ன‌து க‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கொண்டு "இதுவ‌ரைக்கு எங்க‌ அப்பா அம்மாவுக்கு நா பொற‌ந்த‌துதான் என்னோட‌அதிஷ்ட‌ம்னு நின‌ச்சுட்டு இருந்தன்டா. ஆனா இப்ப‌ உன‌க்கு காத‌லிஆன‌துதாண்டா என்னோட பெரிய அதிஷ்ட‌ம்"

"ச‌ரி ச‌ரி என்ன‌ ச‌ந்தோச‌மா வெச்சுக்க‌ போற‌ பொண்ணு அழுக‌லாமா? க‌ண்ண‌தொட‌ச்சுக்க‌. காத‌ல‌ சொல்ற‌துக்கு முன்னாடி என்ன‌ பாத்து வெட்கத்துலசிரிப்பையே எங்க‌ அதுமாதிரி சிரி க‌விதை எழுதி ரொம்ப‌ நாளாச்சு"

அவ‌ள் வெட்க‌த்தில் சிரித்து கொண்டு செல்ல‌. இவ‌னும் ந‌ட‌க்க‌ஆரம்பித்தான் காமத்தை தாண்டி ஒரு காதலை சுமந்து கொண்டு. ஒரு அழ‌கிய‌காத‌லை சும‌ந்து இருந்த‌ சுவடைத் தாங்கி கொண்டிருந்த‌து அவ‌ர்க‌ள்அம‌ர்ந்து இருந்த‌ இருக்கைக‌ள்.

"உட‌ல்க‌ள் இணைவ‌து சிற்றின்ப‌ம் எனில் உள்ள‌ங்க‌ள் இணைவ‌து பேரின்ப‌ம்"


"ஆணின் பொருள் அளவையும், பெண்ணின் புற அழகையும் தாண்டி ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு ஏற்ப்படுமானால் அந்த ஈர்ப்புக்கு பெயர் காதல்..."

6 விமர்சனங்கள்:

ச.பிரேம்குமார் said...

"உட‌ல்க‌ள் இணைவ‌து சிற்றின்ப‌ம் எனில் உள்ள‌ங்க‌ள் இணைவ‌து பேரின்ப‌ம்"

சூப்பரப்பு :)

ஸ்ரீ said...

ரெண்டு கதையும் நச்.....

கோபால் said...

@பிரேம் குமார்...

என்ன எழுத ஊக்குவிச்சதுக்கும் முதலாவதாக வருகையைப் பதிவு செஞ்சதுக்கும் மிக்க நன்றி.

கோபால் said...

@ ஸ்ரீ
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. வரும் காலங்களிலும் உங்க வருகைய எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

eppatinka ibbati kathai remba alakaa eluthi irukkeenka

Anonymous said...

remba nallaa irunthathu