கடலை ஆராய்ச்சி

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்தது. ஏன்டா, இந்த கடலைய போடுற‌ போது இந்த வருக்கறவங்க தொண்டை வலிக்க கத்தினாலும் திரும்பி பாக்க மாட்டிங்கறாங்கனு. அத பத்தி தெரிஞ்சுக்கலனு பாத்த நமக்கு அந்த பாக்கியம் கிட்டவே இல்லை, சல்லித் தனம் பண்ணித்தான் பழக்கம்(அது தான் எந்த பொணும் ஒத்துவரல). சரி!!! அத எப்படியாவது கண்டு புடிக்கணும்கர‌ வெறில என்னொட மூளைய கசக்கி பாத்தேன், இதுக்கு எல்லாம் தான் நம்ம மூளை நல்ல வேலை செய்யும்னு தெரியுமே எப்படியாவது அத கண்டுபுடுச்சு டாக்டர் பட்டதா வாங்கிடணும்கர‌ ஒரு ஆவேசம். திடிர்னு ஒரு நாள் தியானத்த பத்தி யாரோ பேசி கொண்டு இருந்ததை கேட்டு அந்த தியானத்தையும் இந்த கடலையையும் ஒப்பிட்டு பார்க்க நம்ம மூளை கெளம்பிடுச்சு (அப்ப தான் என்னொட மூளையின் அருமை எனக்கே தெரிஞ்சுச்சுங்க, எப்பா எப்படி எல்லம் யோசிக்குது பாருங்க) இந்த தியானம் பண்ற போது யாரு வந்து கூப்பிட்டாலும் தெரியாதாமே!!! தனக்குனு ஒரு தனி உலகத்துக்கு போய்டுவாங்கலாமே அட இந்த வருக்கறவங்கலும் அப்படி தாங்க‌ எதிர்ல இருக்கறவங்க தவிர இந்த உலகத்தில் யாருமே கண்ணுக்கு தெரிய மட்டாங்க!!! தன்ன சுத்தி என்ன நடக்குதுனெ தெரியாது, அப்படியே வேற ஒரு உலகத்துல இருப்பாங்க. நம்ம காது கிழிய கத்தினாலும் கேட்காது. இதுல இருந்து புதிய முறையிலான‌ தியான பயிற்சி கடலைனு கண்பிடிச்சுது என்னொட மூளை

1 விமர்சனங்கள்:

surabi said...

Enna kodumai gopal idhu???????

Neenga ivlo periya arivaaliya????? great.. keep up ur researches...