நீயும் என் மனமும்

நீ என்னை தவிர்த்துச்
செல்லும் போதெல்லாம்
தனிமையில் தவிக்கும்
அனாதை என் மனம்

தொலைதூர நிலவாய்
நீ இருந்தபோதிலும்
சிறுகுவளைத் தண்ணீரில்
பிடித்து விட்டதாய்
கூத்தாடுகிறதென் மனம்
மண்ணில் புதைத்து வைத்திருக்கும்
விதையாக‌ காதலை விதைத்து
காத்திருக்கிற‌து என் ம‌னம்
வான் மழையாய் நீ வாராயோ
குட்டிச்சுவராய் இருந்த
என் மனதில்
நீ குடியேறியதும்
இன்று கோவிலானது
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
வானில் பறக்கும் விமானத்தை
பார்த்த குதூகலத்தில் குதிக்கும்
சிறுவனாய் என் மனம்

பட்டாம் பூச்சியைப்
பிடிக்கத் துரத்தும்
சிறுவனைப் போல்
உன் பின்னால் என் மனம்



2 விமர்சனங்கள்:

ஸ்ரீ said...

"தொலைதூர நிலவாய்
நீ இருந்தபோதிலும்
சிறுகுவளைத் தண்ணீரில்
பிடித்து விட்டதாய்
கூத்தாடுகிறதென் மனம்"

இந்த வரிகள் கொள்ளை அழ்கு :)

கோபால் said...

தமிழும், காதலும் எப்போதுமே கொள்ளை அழகுங்க ஸ்ரீ,

கருத்துக்கு நன்றிங்க