வாழ்க்கையாகவே அவள் வர வேண்டும்


பணத்தோடு வர வேண்டாம்
குணத்தோடு வர வேண்டும்



பொருளை அள்ளிக் கொண்டு வர வேண்டாம்
பொறுமையை அள்ளிக் கொண்டு வர வேண்டும்


பேரழகு கொண்டவளாய் வர வேண்டாம்
பேரன்பு கொண்டவளாய் வர வேண்டும்


பேச்சில் இசை பொழியபவளாய் வர வேண்டாம்
பேச்சில் இனிமை பொழியபவளாய் வர வேண்டும்


என் வீட்டிற்க்கு மஹாலட்க்ஷ்மியாய் வர வேண்டாம்
என் வீட்டின் மஹாலட்க்ஷ்மியாய் வர வேண்டும்


என் பெற்றோருக்கு மருமகளாய் வர வேண்டாம்
என் பெற்றோருக்கு மற்றும் ஒரு மகளாய் வர வேண்டும்


அகராதியில் அனைத்தும் கற்றவளாய் வர வேண்டாம்
அன்பில் அனைவரையும் கட்டிப்போடுபவளாய் வர வேண்டும்


குடும்பத்தின் தலைவியாய் வர வேண்டாம்
குடும்பத்தில் ஒருத்தியாய் வர வேண்டும்


மஞ்சத்தில் காமத்தை கரைப்பவளாய் வர வேண்டாம்
நெஞ்சத்தில் காதலை வளர்ப்பவளாய் வர வேண்டும்


காலையில் காபி கொடுக்கும் மனைவியாய் வர வேண்டாம்
கவலையில் தோள் கொடுக்கும் தோழியாய் வர வேண்டும்


அடங்கிப் போகும் அபலைப் பெண்ணாய் வர வேண்டாம்
அடக்கத்தை அறிந்த புதுமைப் பெண்ணாய் வர வேண்டும்


"கல் என்றாலும் கணவன்" என கண்ணீர் சிந்துபவளாய் வர வேண்டாம்
கண்டிக்கத் தெரிந்த காதலியாய் வர வேண்டும்
மொத்தத்தில்...


என் வாழ்க்கைத் துணையாக அவள் வர வேண்டாம்
என் வாழ்க்கையாகவே அவள் வர வேண்டும்

6 விமர்சனங்கள்:

pudugaithendral said...

ஆசை நல்லா இருக்கு.

ஆனா வந்த பின்னாடி நீங்க எப்படி கவனிச்சுப்பீங்க?

உங்களுக்கு எதிர் பார்ப்பு இருக்கற மாதிரி அவங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கலாம்.

ஆனாலும் வாழ்த்துக்கள்.

கோபால் said...

என்னில் சரிபாதி என அவள் இருக்கும்போது, தனியா "கவனிப்பு" அப்படிங்கர‌ கேள்வியே எதுக்குங்க!!!

வந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகைத் தென்றல்

pudugaithendral said...

தன்னில் சரிபாதியாக நினைத்து
பார்க்கும் கணவன் இருந்தால், மனைவிக்கு மட்டுமல்ல, அந்த ஜோடியின் வாழ்க்கையே இனியதாய் இருக்கும்.

அனுபவம் தான்.. :)

வாழ்த்துக்கள். தங்களின் கோரிக்கைகள்
நிறைவேற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

கோபால் said...

@புதுகைத் தென்றல்

தங்களின் பிராத்தனைக்கு மிக்க நன்றி :)

Unknown said...

ariya
said


உன் ஆசை படி உன் கனவுவகள்
நிறை வேற என் வாழ்த்துக்கள்

Surabi said...

U r so great in case this is true.. :-)

All the very best to get such a wonderful life..