காதல் பள்ளிக்கூடம்

செயல்முறைக் கூடத்தில்
ரசாயண கலப்படத்தால்
நடந்த நிறங்களின் மாற்றத்தை
ரசித்துக் கொண்டிருந்தது உலகம்
விழிக‌ளின் க‌ல‌ப்ப‌ட‌த்தால்
ந‌ட‌ந்த‌ ம‌னங்களின் மாற்ற‌த்தை
ர‌சித்துக் கொண்டிருந்த‌து காத‌ல்

வீட்டுப்பாடத்தை எழுதாம‌ல்
நீ அடிவாங்குவ‌தை பார்த்து
ம‌ன‌ம்தாளாம‌ல் நானும் எழுந்து நின்றேன்
காத‌ல் வலிப்ப‌தில்லை

விடுமுறை நாட்க‌ளில்
வெறுமையை உண‌ரும்
வ‌குப்பறையாய் என் மனம்
நீ அருகில் இல்லாத‌ நாட்களில்

ப‌ள்ளி ஆண்டுவிழா நாட‌க‌த்தில்
நான் நாய‌க‌ன், நீ நாய‌கி
அப்போதே குறி சொல்லிவிட்ட‌து காத‌ல்

ம‌திய‌ உணவை
நான் ம‌றந்து வந்தவேளையில்
வீட்டில் வீசேஷமெனெ
இர‌ண்ட‌டுக்கில் ஒன்றை
என‌க்கு த‌ருவாய்
க‌டைசிவ‌ரை நீ என‌க்கு
உண‌வ‌ளிக்க‌ப் போகும் ஒத்திகையோ..?

வ‌குப்புத் த‌லைவ‌னும் த‌லைவியும்
யாரென‌ ஆசிரியார் வினாவ‌
உன்பெய‌ருக்குப் பின்னால்
என்பெய‌ரை சேர்த்தே உரைப்பாய்
ந‌ம் உள்ள‌ங்க‌ள் ஒன்றான‌தை
காத‌ல் ர‌சித்துகொண்டிருந்த‌து

நான் இல்லாத போது,
விளையாட்டு ஆசிரியர்
பந்தயங்களுக்காக‌
பெயர் எழுதியபோது
என் பெயரை நீ அளித்தாய்
என் முன்னேற்றத்திற்க்கு
தகுந்தவள் நீதான் என்பதை
காதல் உணர்ந்து கொண்டது


கூட்டலின் தவறால் குறைந்திருந்த
உனது மதிப்பெண்னை உயத்தினால்
என்னை தாண்டிவிடும் என்பதால்
மறுத்துவிட்டதாம் உன் மனம்
விட்டுக்கொடுப்ப‌தை க‌ற்றுக் கொண்ட‌து காத‌ல்

நான் ரசித்து உண்ணும்
தேன் மிட்டாயை
யாரும் அறியாதபோது
எனது மேசையின் கீழ்
வைத்து செல்வாய்
பகிர்ந்துண்ணூதலை
கண்டுகளித்தது காதல்

2 விமர்சனங்கள்:

நாடோடி இலக்கியன் said...

//விடுமுறை நாட்க‌ளில்வெறுமையை உண‌ரும்வ‌குப்பறையாய் என் மனம்
நீ அருகில் இல்லாத‌ நாட்களில்
//

அருமை,
வாழ்த்துகள்!

Anonymous said...

kavidhayin varigal anaithum muthu muthaaga ullana!! vaazhthukal