தாயாக‌ நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாகம் - 1

"டேய்! என்னோட மொபைல பாத்தியா? " என்றான் சக்தி ஆனந்திடம்।

"டேய் பாவம்டா அந்த பொபைலு உங்கிட்ட சிக்கீட்டு ரொம்மத்தான் கஷ்டப்படுது। எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட, இது எல்லாம் ஒரு பொழப்பானு கேட்ட நீ இப்ப அதையே பொழப்பா பண்ணீட்டு இருக்க" என்று கூறியவாறு அவனுடைய மொபைலைக் கொடுத்தான் ஆனந்த்.

"டேய் அட‌ங்குடா எங்க‌ளுக்கு எல்லாந் தெரியும் நீ உன்னோட‌ வேலைய‌ ம‌ட்டும் பாரு" என்றான் சிவா।

ஆனந்த், சக்தி கற்பகம் பொறியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர்கள். அந்த பொபைல் இன்னைக்கு பொகைய காரணம் திவ்யா, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி.

இதோ இன்று சக்தி திவ்யா காதலுக்கு ஒரு வயது, அதிலும் இன்று காதலர் தினம். அதனால் தான் காலையிலேயே கல்லூரி போகும் முன்னரே இருவரும் கடலை.

சக்தி ஆனந்தை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி தனது வண்டியில் கிளம்பினான். "புரியாத உறவில் நின்றேன்... அறியாத சுகங்கள் கண்டேன்... மாற்றம் தந்தவள் நீதானே!!!". நந்தா பாடலில் சக்தியின் மனம் நனைந்து கொண்டுடிருந்தது. திவ்யா பெயரை உச்சரித்தான். உடல் முழுவதும் இதயமாகி துடித்தது. எனக்குள் எப்படி நுழைந்தாய். ஒரு வ‌ருட‌த்திற்க்கு முன் அவ‌ன‌து மன‌ம் சென்ற‌து.

மௌனம் பேசியதே சூரியாவை விட காதலையும், பெண்களையும் கிண்டல் செய்பவன் தான் இந்த சக்தி.

ஒரு முறை தனது நண்பன் காதலில் விழுந்த போது "டேய் மச்சா!!! இப்ப உனக்கு வயசு 20 அவளுக்கும் 20 எப்படியும் நீ அரியர் எல்லாம் முடுச்சு டிகிரி வாங்கறப்ப உனக்கு 23 வயசு ஆயிடும் அதுக்கப்பறமா நீ ஒரு உருப்ப‌டியான வேலையத் தேடி ஒரு நல்ல சம்பளம் வாங்குறப்ப 26 வயசு. அப்ப அவளுக்கு 4 வயசுல ஒரு குழந்தை இருக்கும் அதுக்கு நீ அப்பாவாக மாட்டா அங்கிள் ஆயிருப்ப !!! போடா போய் பொழப்ப பாரு... காதலுங்குற பேர்ல கேன்டின்ல அவளுங்க உட்காந்துட்டு இருப்பாளுக நீ பாதாம் பாலும் பக்கோடாவும் வாங்கீட்டு போய் கொடுத்து சர்வர் வேலைய பாரு" என்று கிண்டலடித்தான்.

ஒரு முறை தனது நண்பன் ஆனந்த் தனது தோழியை அறிமுகப்படுத்திய போது, தனது நண்பன் என்று கூட பாராமல் "முந்தனைய புடிச்சு ஓடுறதுக்கு ஏன்டா இப்பவே துப்பட்டாவை புடிக்கற? " என்றான்.

இப்ப‌டி நாட்க‌ள் சென்று கொண்டிருக்க‌ அவ‌ர்க‌ள‌து க‌ல்லூரியில் ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌ட‌த்தினர்। த‌லைப்பு "ஈவ்-டீசிங்கிற்க்கு கார‌ண‌ம் பெண்க‌ளா? ஆண்க‌ளா?". ஆண்க‌ள்தான் என‌ வாதாட‌ நான்கு பெண்க‌ளும், பெண்க‌ள்தான் என‌ வாதாட‌ நான்கு... இல்லை மூன்று ஆண்க‌ளும் ஒரு பெண்ணும் அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

தொடரும்...

காதல் பள்ளிக்கூடம்

செயல்முறைக் கூடத்தில்
ரசாயண கலப்படத்தால்
நடந்த நிறங்களின் மாற்றத்தை
ரசித்துக் கொண்டிருந்தது உலகம்
விழிக‌ளின் க‌ல‌ப்ப‌ட‌த்தால்
ந‌ட‌ந்த‌ ம‌னங்களின் மாற்ற‌த்தை
ர‌சித்துக் கொண்டிருந்த‌து காத‌ல்

வீட்டுப்பாடத்தை எழுதாம‌ல்
நீ அடிவாங்குவ‌தை பார்த்து
ம‌ன‌ம்தாளாம‌ல் நானும் எழுந்து நின்றேன்
காத‌ல் வலிப்ப‌தில்லை

விடுமுறை நாட்க‌ளில்
வெறுமையை உண‌ரும்
வ‌குப்பறையாய் என் மனம்
நீ அருகில் இல்லாத‌ நாட்களில்

ப‌ள்ளி ஆண்டுவிழா நாட‌க‌த்தில்
நான் நாய‌க‌ன், நீ நாய‌கி
அப்போதே குறி சொல்லிவிட்ட‌து காத‌ல்

ம‌திய‌ உணவை
நான் ம‌றந்து வந்தவேளையில்
வீட்டில் வீசேஷமெனெ
இர‌ண்ட‌டுக்கில் ஒன்றை
என‌க்கு த‌ருவாய்
க‌டைசிவ‌ரை நீ என‌க்கு
உண‌வ‌ளிக்க‌ப் போகும் ஒத்திகையோ..?

வ‌குப்புத் த‌லைவ‌னும் த‌லைவியும்
யாரென‌ ஆசிரியார் வினாவ‌
உன்பெய‌ருக்குப் பின்னால்
என்பெய‌ரை சேர்த்தே உரைப்பாய்
ந‌ம் உள்ள‌ங்க‌ள் ஒன்றான‌தை
காத‌ல் ர‌சித்துகொண்டிருந்த‌து

நான் இல்லாத போது,
விளையாட்டு ஆசிரியர்
பந்தயங்களுக்காக‌
பெயர் எழுதியபோது
என் பெயரை நீ அளித்தாய்
என் முன்னேற்றத்திற்க்கு
தகுந்தவள் நீதான் என்பதை
காதல் உணர்ந்து கொண்டது


கூட்டலின் தவறால் குறைந்திருந்த
உனது மதிப்பெண்னை உயத்தினால்
என்னை தாண்டிவிடும் என்பதால்
மறுத்துவிட்டதாம் உன் மனம்
விட்டுக்கொடுப்ப‌தை க‌ற்றுக் கொண்ட‌து காத‌ல்

நான் ரசித்து உண்ணும்
தேன் மிட்டாயை
யாரும் அறியாதபோது
எனது மேசையின் கீழ்
வைத்து செல்வாய்
பகிர்ந்துண்ணூதலை
கண்டுகளித்தது காதல்

நித்தம் ஒரு முத்தம்

அகமகிழ்ந்து என்னை
நீ அணைத்து
முத்தமிடும் நேரம்
நெடுவானத்தையும்
நீண்டு செல்கிறது
ந‌ம் காதல்

நீ இட்ட முத்தத்தின் மீது
வழிந்தோடும் கண்ணீரும் தேனீராகிறது

உன் முத்தத்தின் ஈரத்தை
பூ சிந்தும் தேனென நினைத்து
மொய்க்க ஆரம்பித்து விடுகிறது
வண்ணத்துப் பூச்சிகள்

முத்தத்தின் சத்தம்
வெளியே கேட்டுவிடப் போகிறது
விலக்கிவிடாதே உதடுகளை

நான்கு உதடுகள்
இணைந்து நடத்தும்
காதல் திருவிழா

விழிகளில் பேசியது போதும்
கொஞ்சம் மொழிகளிலும் பேசேன் என்கிறேன்
இறுக்கி அணைத்து முத்தமிட்டு சொல்கிறாய்
காதலின் இனிமையான மொழி மௌனமென்று

கையோடு ஒட்டிக் கொள்ளும்
பட்டாம்பூச்சியின் வண்ணத்தைப் போல
என் கன்னமும் உன் முத்தமும்

நாம் அயர்ந்த வேளையில்
என் கன்னத்தை
கொத்திச் செல்லும்
உன் உதடுகள்
வண்டினை கொள்ளை
கொள்ளும் பூவாசம்

உலகிலேயே மிக
அழகான ஓவியம்
நீ முத்தமிட்டபின்
என் கன்னங்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் உதட்டுச்சாயம்

வாழ்க்கையாகவே அவள் வர வேண்டும்


பணத்தோடு வர வேண்டாம்
குணத்தோடு வர வேண்டும்



பொருளை அள்ளிக் கொண்டு வர வேண்டாம்
பொறுமையை அள்ளிக் கொண்டு வர வேண்டும்


பேரழகு கொண்டவளாய் வர வேண்டாம்
பேரன்பு கொண்டவளாய் வர வேண்டும்


பேச்சில் இசை பொழியபவளாய் வர வேண்டாம்
பேச்சில் இனிமை பொழியபவளாய் வர வேண்டும்


என் வீட்டிற்க்கு மஹாலட்க்ஷ்மியாய் வர வேண்டாம்
என் வீட்டின் மஹாலட்க்ஷ்மியாய் வர வேண்டும்


என் பெற்றோருக்கு மருமகளாய் வர வேண்டாம்
என் பெற்றோருக்கு மற்றும் ஒரு மகளாய் வர வேண்டும்


அகராதியில் அனைத்தும் கற்றவளாய் வர வேண்டாம்
அன்பில் அனைவரையும் கட்டிப்போடுபவளாய் வர வேண்டும்


குடும்பத்தின் தலைவியாய் வர வேண்டாம்
குடும்பத்தில் ஒருத்தியாய் வர வேண்டும்


மஞ்சத்தில் காமத்தை கரைப்பவளாய் வர வேண்டாம்
நெஞ்சத்தில் காதலை வளர்ப்பவளாய் வர வேண்டும்


காலையில் காபி கொடுக்கும் மனைவியாய் வர வேண்டாம்
கவலையில் தோள் கொடுக்கும் தோழியாய் வர வேண்டும்


அடங்கிப் போகும் அபலைப் பெண்ணாய் வர வேண்டாம்
அடக்கத்தை அறிந்த புதுமைப் பெண்ணாய் வர வேண்டும்


"கல் என்றாலும் கணவன்" என கண்ணீர் சிந்துபவளாய் வர வேண்டாம்
கண்டிக்கத் தெரிந்த காதலியாய் வர வேண்டும்
மொத்தத்தில்...


என் வாழ்க்கைத் துணையாக அவள் வர வேண்டாம்
என் வாழ்க்கையாகவே அவள் வர வேண்டும்

நீயும் என் மனமும்

நீ என்னை தவிர்த்துச்
செல்லும் போதெல்லாம்
தனிமையில் தவிக்கும்
அனாதை என் மனம்

தொலைதூர நிலவாய்
நீ இருந்தபோதிலும்
சிறுகுவளைத் தண்ணீரில்
பிடித்து விட்டதாய்
கூத்தாடுகிறதென் மனம்
மண்ணில் புதைத்து வைத்திருக்கும்
விதையாக‌ காதலை விதைத்து
காத்திருக்கிற‌து என் ம‌னம்
வான் மழையாய் நீ வாராயோ
குட்டிச்சுவராய் இருந்த
என் மனதில்
நீ குடியேறியதும்
இன்று கோவிலானது
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
வானில் பறக்கும் விமானத்தை
பார்த்த குதூகலத்தில் குதிக்கும்
சிறுவனாய் என் மனம்

பட்டாம் பூச்சியைப்
பிடிக்கத் துரத்தும்
சிறுவனைப் போல்
உன் பின்னால் என் மனம்