பாட்டுப் பாட வா!!!

பள்ளி காலத்தில் நான் பாடிய பாடல்களை இங்கு வெளியிடுமாறு அன்புத் தோழன் ஸ்ரீ கேட்டு இருக்கிறார். "மொளச்சு மூணு எல விடுல" என எங்கய்யன் திட்டிய போது நான் பாடிய பாடல்கள்(சென்சார்) தான் நினைவுக்கு வந்தது. அதையும் தாண்டி கபடமில்லாத இதயத்துடன் சுற்றிச் திரிந்த காலத்திற்க்கு எனது மனம் என்னை அழைத்துச் சென்றது.

முதல் முதலாக நான் பாடிய பாடல்.இதுவரை இதில் இருந்த இனிமை நான் எந்தப் பாடலிலும் கேட்டதில்லை.

அ...ம்...மா...

க‌‌டைசி வ‌குப்புகளின் போது நான் பாடிய‌ பாடல். என‌க்கு மிக‌வும் பிடித்த‌ பாட‌ல்.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வ‌த‌ன‌மென‌த் திக‌ழ்ப‌ர‌த‌க் க‌ண்ட‌மிதில்
தெக்க‌ண‌மும் அதிற்சிறந்த‌ திராவிட‌ந‌ல் திருநாடும்
த‌க்க‌சிறு பிறைநுத‌லும் த‌ரித்த‌ந‌றுந் திலக‌முமே!
அத்தில‌க‌ வாச‌னைபோல் அனைத்துல‌கும் இன்ப‌முற‌
எத்திசையும் புக‌ழ்ம‌ண‌க்க‌ இருந்த‌பெருந் த‌மிழ‌ணங்கே!
த‌மிழ‌ணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

எப்போதோ நான் என‌து பாட‌ புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. இன்றுவ‌ரை ம‌ற‌வாம‌ல் என் ம‌ன‌தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாட‌ல்.வ‌ரிக‌ள் கூட‌ ச‌ரியாக‌ தெரிய‌வில்லை, ஆனால் இன்றுவ‌ரை என் ம‌ன‌தை விட்டு ம‌றைய‌வில்லை.

ஆராரோ ஆரிராரோ
ஆறு லட்சம் வண்ணக்கிளி
செம்பவளத் தொட்டிலிலே
சீரார கண்ணுறங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ கண்ணுறங்கு...

இந்த பாடல்களை யாரு வெளியிட்டு இருக்க மாட்டார்கள் அல்லவா ஸ்ரீ? :)

2 விமர்சனங்கள்:

ஸ்ரீ said...

அடடடடா என்னா டெக்னிக்கு கண்ணா உனக்கு? கண்டிப்பா யாரும் வெளியிட்டிருக்க மாட்டாங்க. என்ன தொடர்விளையாட்டுக்கு முற்றுபுள்ளி வெச்சுட்ட? :)

கோபால் said...

இந்த மாதிரி யோசிக்க எல்லாம் ஒரு தனித்திறமை வேண்டும் ஹி ஹி ஹி...தொடர் விளையாட்ட விடவில்லை... வேலை பலு கொஞ்சம் அதிகம்... அதனால் சரியா பதிவு செய்ய முடியல...