முயற்சியாய் நீ, முன்னேற்றப் படிகளில் நான்.

"டேய் வெற்றி! மச்சா நீ மோசம் போயிட்ட டா!!! அந்த கயல்விழி உன்ன ஏமாத்திட்டடா. ரெண்டு மாப்பிள்ளைய‌ வேண்டானு சொன்னவ மூணாவது மாப்பிள்ளை நல்ல பணக்காரன கிடைச்சதும், சரினு ஒத்துகிட்ட டா மச்சா ஒத்துகிட்ட"

"என்னடா மகேஷ் சொல்ற, நிஜமாத்த சொல்றையா?"

"ஆமாடா. இப்பதான்டா நம்ம கார்த்தி சொன்னான், விடுடா வெற்றி இந்த பொண்ணுங்களே இப்படித்தான், பணக்கார மாப்பிள்ளை கிடைச்சா நம்மள எல்லாம் மறந்துடுவாங்க‌"

"டேய்!!! என்ன‌ங்க‌டா என்ன‌மோ அவ‌ இவ‌ன‌ ல‌வ் ப‌ண்ண‌ மாதிரி, இவ‌ரு அவ‌ள‌ உருகி உருகி காத‌லிச்ச‌ மாதிரியும் ஓவ‌ரா பேசிட்டு இருக்கிங்க‌, இந்த‌ குட்டிச்செவுரு மேல‌ உக்காந்துட்டு போற‌ வ‌ர‌ பொண்ணுங்க‌ள ரெண்டு வருசமா சைட் அடிச்சுட்டு இருக்கோம் அதுல‌ ஒருத்தி இந்த‌ க‌ய‌ல்விழி, இந்த‌ பீலிங் கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌"

"இல்ல‌டா ச‌ம்ப‌த், ந‌ம்ம‌ வெற்றித‌ அவ‌ளுக்காக‌வே காத்துட்டு இருப்பான் அதுத‌ ஒரு விள‌ம்ப‌ர‌ம், அப்புற‌ம் இந்த குட்டி சுவத்துல இருக்கற மக்களுக்கு நா தெரிவிச்சுக்கறது என்னன ஒரு சைட்டு கொற‌ஞ்சு போன‌ சோக‌த்துல‌ இருக்க‌ற‌ ந‌ம்ம‌ வெற்றி இன்னைக்கு ச‌ர‌க்கு வாங்கி கொடுத்து த‌ன்னோட‌ சோத்த‌ தீத்துக்குவான் அப்ப‌டினு பொதுக் குழு சார்பா தெரிவிச்சுக்க‌றனுங்கோ..."

"அட‌ப்பாவி ச‌ர‌க்க‌ ஓசில‌ குடிக்க‌ற‌துக்காக‌வாடா இந்த‌ அல‌ம்ப‌ல், ச‌ரிவிடு இன்னைக்கு எங்க‌ப்ப‌னுக்கு ச‌ப்ப‌ள‌ம் வ‌ந்திருக்கும் அத ஆட்டைய‌ போட்டு ஜ‌மாய்சுட‌லாம்"

வெற்றி, ம‌கேஷ், ச‌ம்ப‌த் மூவ‌ரும் ஊர் அறிந்த‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளுக்கு வேலையே அந்த குட்டிச் சுவரில் அமர்ந்து ஊர் பெண்களை கிண்ட‌ல் அடிப்ப‌தும், அதை யாராவ‌து கேட்டால் அவ‌ர்க‌ளை அடிப்ப‌துதான்.இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த‌து.

அப்போதுதான் க‌ண்ம‌ணி அந்த‌ ஊருக்கு குடிபெய‌ர்ந்தாள். அவ‌ள‌து அப்பா அந்த‌ ஊர் ப‌ள்ளிக் கூடத்திற்க்கு ஆசிரிய‌ராக‌ ப‌ணி மாற்ற‌ம் கிடைத்த‌து.

"டேய் வெற்றி,சம்பத் புதுசா ஒரு சிட்டு ப‌ற‌ந்து வ‌ந்திருக்குடா, ப‌ள்ளிக் கூட‌த்து ஆசிரிய‌ர் பொண்ணுடா, பாத்தா தேவ‌தை மாதிரி இருக்காடா, இனிமே அவ‌தான்டா என்னோட‌ சைட்டு, இதுல‌ நீங்க‌ யாரும் குறுக்க‌ வ‌ர‌க்கூடாது சொல்லிட்டேன்"

"ச‌ரிடா, நீ சொல்ற‌ப்ப‌வே ஒரு அட்டு பிக‌ராத்தான் இருக்கும் நீயே வெச்சுக்க‌"

முத‌ன் முத‌லாக‌ அந்த‌ குட்டிச்சுவ‌த்தின் வ‌ழியாக் க‌ண்ம‌ணி ந‌ட‌ந்து சொல்ல‌ நேர்ந்த‌து. முன்ன‌மே ப‌ல‌ர் அவ‌ளை அவ்வ‌ழியாக் செல்ல‌ வேண்டாம் என‌ அறிவுறித்து இருந்த‌ன‌ர்.

"டேய், அங்க‌ பாருடா என்னோட‌ ஆளு வ‌ர்ரா, இவ்தான்டா நான் சொல்ல‌ல‌ க‌ண்ம‌ணி, ஆசிரிய‌ர் பொண்ணு, தேவ‌தை.." மேலும் ம‌கேஷை பேச‌ விடாம‌ல் வெற்றி த‌னது கைக‌ளால் அவ‌னது வாய்யை மூடினான்.

வ‌ருவ‌து பெண்ணா, பெண் உருவில் இருக்கும் தேவ‌தையா?

( திருக்குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து)

"அந்த நிலவில் கூட வளர்ந்து தேயும் களங்கம் இருக்கிறது ஆனால் அதுவும் கூட இல்லாத இவளது முகம்" வெற்றியின் மனதில் கல்லில் பொறித்த சிற்ப்பம் போல் பதிந்தது.

"டேய் க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்க‌ற‌ன் டா"

"டேய் வெற்றி நா முத‌லே சொல்லி இருக்க‌ அவ‌ என்னோட‌ ஆளுனு, இப்ப‌ நீ இப்ப‌டி பேச‌ற‌து த‌ப்பு"

"இல்ல‌டா, இது வேற‌ காத‌ல், ம‌த்த‌ பொண்ணுங்க‌ மாதிரி இல்ல‌ இது, இவ‌ள‌ பாத்த‌துல‌ இருந்து என்னோட‌ ம‌ன‌சு என‌க்கு என்ன‌மோ சொல்லுதுடா, இவ்வ‌ள‌வு நாள் ஏதோ ஒரு த‌ப்பு ப‌ண்ணிட்டு இருந்த‌ மாதிரி ஒரு நினைப்பு. என்ன‌மோ செய்ய‌றாடா"

"ஆகா என்ன‌டா ச‌ம்ப‌த் த‌லைவ‌ரு புதுசா வேதாந்த‌ம் சித்தாந்த‌ம் எல்லாம் பேச‌த் தொட‌ங்கிட்டாரு"

"டேய் விடுடா இப்ப‌டித்தான் இவ‌ன் எல்லா பொண்ணுங்க‌ளையும் புதுசா பாத்த‌ப்ப‌ பேசினான், அப்புற‌ம் என்ன‌ ஆச்சு"

அவ‌ர்க‌ள் கூறிய‌து போல‌ இருந்தாலும் க‌ண்ம‌ணியின் வ‌ர‌வு அவ‌னை என்ன‌வோ செய்த‌து. த‌ன‌க்கென்று தோன்றிய‌வ‌ளாக அவ‌ள் தென்ப‌ட்டாள். குடித்து உள‌றும் அவ‌ன் ம‌ன‌ம் இப்போது த‌னாக‌ உள‌ற‌ ஆர‌ம்பித்து. அவ‌ன‌து ம‌ன‌ உளற‌ல்க‌ள் க‌விதையாக‌ உருவான‌து.

வெற்றியும், மகேஷும் அந்த‌ குட்டிச் சுவ‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

"குட்டிச் சுவ‌ராய் இருந்த‌ என் ம‌னம்
நீ குடியேறிய‌தும் இன்று கோவிலான‌து... இது எப்ப‌டிடா இருக்கு"

"எதுடா"

"நா இப்ப‌ சொன்ன‌ க‌விதை"

"என்ன‌ க‌விதை சொன்னையா? ஆகா க‌ழுதைக்கு க‌ற்ப்பூர‌ வாச‌னை தெரிய‌ ஆர‌ம்பிச்சுடுச்சு போல‌"

"டேய் உண்மையாலுமே க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்கிற‌ன்டா, இது வேற‌டா"

"ச‌ரி ச‌ரி விடு முத‌ல்ல‌ த‌ண்ணி போட்டுட்டு உள‌றுவ‌ இப்ப‌ தானாவே உள‌ற்ற‌"

"இல்லடா, எங்கப்ப மேல‌ ச‌த்துய‌மா சொல்ற‌ன்டா, உண்மையாலுமே அவ‌ள‌ நா காத‌லிக்க‌ற‌ன்டா"

"டேய், என்ன‌டா சொல்ற‌ அவ‌ ரேஞ்சு என்ன‌னு தெரியாம‌ பேச‌த, நீ சோத்துக்கே லாட்ட‌ரி அடிக்கிற‌ நிலைல‌ இருக்க,அவ‌ தேவ‌தை மாதிரி இருக்கா, நீ பிச்ச‌க்கார‌ மாதிரி இருக்க‌, வேண்டான்டா, அவ‌ ந‌ல்ல‌ பொண்ணுடா விட்டுட‌லாம்"

அப்போது அவ்வ‌ழியாக க‌ண்ம‌ணி கட‌க்க‌ நேர்ந்து. ம‌கேஷ் ஏதோ சொல்ல‌ முய‌ல‌, க‌ண்ம‌ணியின் பின்னால் செல்ல‌ ஆர‌ம்பித்தான் வெற்றி. சிறிது தூர‌ம் சென்றது அவ‌ளை அழைக்க‌. அவ‌ள் திரும்பினாள்.

"க‌ண்ம‌ணி"

"..."

"எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌ல‌, ஆனா... உன்ன‌ என‌க்கு புடிச்சு இருக்கு, நா உன்ன‌ காத‌லிக்கிற‌ன், உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆச‌ப்ப‌டுற‌, என்ன‌ ப‌த்தி ஊர்ல‌ போச‌மா நீ கேள்விப் ப‌ட்டு இருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து என‌க்கு என்ன‌மோ இதுவ‌ரைக்கும் நா த‌ப்பு ப‌ண்ணின‌து மாதிரி தோனுது. எங்க‌ப்ப‌ன் சொன்ன‌ கூட‌ நா கேக்க‌ மாட்ட‌ ஆனா நீ என்ன‌ சொன்னாலும் நா கேப்ப‌ க‌ண்ம‌ணி, உன்ன‌ க‌ண்டிப்பா ந‌ல்ல‌ வெச்சுப்பேன். இது நா கிண்ட‌ல் அடிக்க‌ற‌னு நெனைக்காத‌, இதுக்கு முன்னாடி நா ந‌ல்ல‌வ‌ன் இல்ல‌ ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து நா ந‌ல்ல‌வ‌னாக‌ நெனைக்க‌ற‌ க‌ண்ம‌ணி, முடிவ‌ நீ இப்ப‌வே சொல்ல‌ணும்னு இல்ல‌,யோசிட்டு சொல்லு"

"உன‌க்கு என்ன‌ த‌குதி இருக்குனு என‌க்கு பிர‌ப்போஸ் ப‌ண்ற‌?, இதுல‌ யோசிக்க‌ ஒன்னுமே இல்லை"

"இல்ல‌ க‌ண்ம‌ணி, இதுவ‌ரைக்கு நா எப்ப‌டி வேணாலும் இருந்திருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துக்க‌ப்புற‌ம் நான் திருந்திட்டேன், என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு நா திருந்திட்ட‌னு நிருபிக்க‌றேன்."

"இல்ல‌, என்ன‌ விட்டுடு, இது எல்லாம் என‌க்கு ஒத்துவ‌ராது"

"பிளிஸ் க‌ண்ம‌ணி, ஒரே ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு, வாழ்க்கைல‌ நா முன்னேறிக்காமிக்க‌ற‌ன் அப்புறமா நீ ச‌ரினு சொன்னா போது"

"ச‌ரி உன‌க்கு இன்னும் ஒரு வ‌ருச‌ம் டைம் த‌ர்ரேன், அதுக்குள்ள‌ மாச‌ம் ஒரு ப‌த்தாயிர‌ம் ரூபாய் ச‌ம்பாதிக்க‌ முடிஞ்சா என்ன‌ தேடி வா, என்ன‌டா இவ‌ ச‌ம்ப‌ள‌த்த‌ ப‌த்தி பேச‌றாளேனு நெனைக்காத‌, ஆம்ப‌ளைக்கு அழ‌கு ச‌ம்பாதிக்க‌ற‌துத, ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ தான் உன‌க்கு காசோட‌ அருமை தெரியும், அப்ப‌ நீயே தான‌ திருந்திருப்ப‌, அப்ப‌ வா, அதுக‌ப்புற‌ம் நா யோசிச்சு சொல்ற‌" என‌ கூறி விட்டு அவ‌ன‌து ப‌திலை கூட‌ எதிர்பார்க்காம‌ல் சென்று விட்டாள்.

அன்று முத‌ல் புதிய‌ ம‌னித‌னாக‌ மாறினான் வெற்றி, வேலை தேடி ப‌ல‌ரிட‌ம் அலைந்தான். அவ‌னை உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுத்த‌து. யாரும் அவ‌னை ம‌திக்க‌வில்லை. இருந்தும் ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் மீண்டும் மீண்டும் தேடினான். தேடிச் சோர்ந்த‌ அவ‌ன் தொழில் துவ‌ங்க‌ முடிவு செய்தான். முத‌லீடாய் த‌ன‌து வீட்டை அட‌மான‌ம் வைத்து மிக்க‌ க‌டுமையாக‌ உழைத்தான். உழைப்பு அவ‌னை ஏமாற்றிய‌து. தொட்ட‌ வேலை எல்லாம் அவ‌னுக்கு இழ‌ப்பையே கொடுத்த‌து. ச‌ரியாக‌ ஒரு வ‌ருட‌ம் முடிந்த‌து. இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் க‌ண்ம‌ணி அவ‌னை அந்த‌ குட்டிச் சுவ‌ரில் ஒரு சில‌ நாட்க‌ள் தான் க‌ண்டாள். அவ‌ளை பார்த்த‌து அவ‌ன் அங்கிருந்து சென்று விடுவான்.இருந்த‌ வீட்டையும் அட‌மான‌த்தில் வைத்து த‌ற்ப்போது எதுவுமே இல்லாம‌ல் இருந்தான். எந்த‌ முக‌த்தை வைத்து க‌ண்ம‌ணியை காண‌ச் செல்வ‌து என‌ த‌ய‌ங்கினான்.இருந்தும் ஒரு நாள் அவ‌ளை பூங்காவிற்க்கு வரச் சொல்லி அங்கு காண‌ச் சென்றான். அங்கு ஒரு ம‌ர‌த்த‌டியில் அவ‌ள் அம‌ர்ந்திருந்தாள்.

"க‌ண்ம‌ணி"

"எதுக்கு இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌, சொல்லு"

"க‌ண்ம‌ணி, ஒரு வ‌ருச‌ம் முடிஞ்சு போச்சு, இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நா நெறைய‌ அனுப‌விச்சுட்டேன், இது இந்த‌ ச‌முத‌ய‌த்த‌ ப‌த்தி, உழைப்போட‌ அருமைய‌ ப‌த்தி, காசு கிடைக்க‌ ஒருத்த‌ன் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ட‌னும் அப்ப‌டிங்க‌ற‌து. ஆனா இப்ப‌ நா வீட‌ கூட‌ அட‌மான‌த்துல‌ வெச்சுட்ட‌ன், திரும்ப‌வும் நீ என்ன‌ காத‌லிக்க‌ணும்னு சொல்ல‌ வ‌ர்ல‌, நா இப்ப உன்ன‌ காத‌லிக்க‌றனு சொல்ற‌ த‌குதி கூட‌ என‌க்கில்ல‌,அதுனால் இது நாள் வ‌ரை த‌ண்ட‌மா சுத்திட்டு இருந்த‌ என்ன‌ ஒரு ம‌னுச‌னாக்கின‌ அதுக்கு ரொம்ப‌ ந‌ன்றி, இப்ப‌ கூட‌ இத‌ சொல்ல‌த்த‌ உன்ன‌ கூப்பிட‌ வேற‌ எதுவுமில்ல‌, நீ என்கிருந்தாலும் ந‌ல்ல‌ இருக்க‌ணும் அதுத‌ என்னோட‌ ஆசை, நா வர்ர‌ க‌ண்ம‌ணி" என‌ கூறி ந‌க‌ர‌ முய‌ன்றான்.

"ஒரு நிமிஷம் வெற்றி, நா உன்ன‌ காத‌லிக்க‌றேன்"

"என்ன‌ க‌ண்ம‌ணி பேச‌ற‌, இப்ப‌ நா ஒன்னுமே இல்லாத‌வ‌ன்"

"அதுக்கு என்ன‌, வெற்றி, நா உங்கிட்ட‌ முத‌ல் முத‌ல் சொன்ன‌ப்ப‌ கூட‌ நீ சும்மா ஒரு மாச‌த்துக்கு ஏதாவ‌து அல‌ஞ்சு அப்புற‌ம் ப‌ழைய‌ மாதிரி ஆயிடுவ‌னு நென‌ச்சுதான் அத‌ சொன்னேன். ஆனா நீ இந்த‌ ஒரு வ‌ருச‌ம் முழுசா க‌ஷ்ட‌ப்ப‌ட்டு இருக்க‌, எல்லா வ‌கையான‌ முய‌ற்ச்சியும் செஞ்சு இருக்க‌, அதையும் தாண்டி இப்ப‌ நா ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நினைச்சு நீயே வில‌கிப்போற‌து உன்னோட‌ அனுப‌வ‌ முதுர்ச்சிய‌ காட்டுது. நீ இப்ப‌வும் என்ன‌ உன்ன‌ காத‌லிக்க‌ சொல்லி இருந்த‌, அது உன்னோட‌ இய‌லாமைய‌ காட்டி இருக்கும். ஆனா இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நீ நிறைய‌ க‌த்துகிட்ட‌, உன‌க்கு எல்லாத்தையும் க‌த்து கொடுத்தது உன்னோட‌ காத‌ல், ஒருத‌லைய‌ காத‌லிச்ச‌துக்கே இவ்வ‌ள‌வு முய‌ற்ச்சி ப‌ண்ணி இருக்க‌, இதோ இப்ப‌ நானும் உன்ன‌ காத‌லிக்க‌ற‌, போ உன‌க்காக‌ எத்த‌ன‌ வ‌ருட‌ம் வேணாலும் காத்துட்டு இருக்க‌, ம‌றுப‌டியும் முழு முய‌ற்ச்சி செஞ்சு முன்னெற‌ப்பாரு, இந்த‌ என்னோட‌ வ‌ளைய‌ல்க‌ள் இது அடமான‌மா வெச்சு ம‌றுப‌டியும் ஏதாவ‌து ஒரு தொழில‌ தொட‌ங்கு, இந்த‌ த‌ட‌வ‌ நிச்ச‌ய‌ம் நீ வெற்றி பெறுவ‌"என‌ கூறி த‌ன‌து வ‌ளைய‌லை கொடுத்து அவ‌னது தோள்க‌ளைத் த‌ட்டிக் கொடுத்தாள்.

தன்னை மனிதனாக்கிய காதல் நிச்ச‌ய‌ம் இந்த‌ முறை தன்னை ஒரு ந‌ல்ல‌ காத‌ல‌னாக‌வும் மாற்றும் என‌ நினைத்து, அவளது காத‌லை முய‌ற்சியாக‌ வைத்து முன்னேற‌த் துவ‌ங்கினான்.

6 விமர்சனங்கள்:

Anonymous said...

//"முயற்"ச்"சியாய் //
ஏங்க!
தமிழையும் கொஞ்சம் கவனியுங்க.

ராமலக்ஷ்மி said...

கட்டைச் சுவர்களில் காலந்தள்ளுவோர் கவனிக்க வேண்டிய கதை.

இதே சாயலில் 20 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி 'நண்பர் வட்டம்' பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை நினைவுக்கு வருகிறது. வலை ஏற்றினால் வந்து சொல்கிறேன்.

கோபால் said...

அனானி அவர்களே தமிழ் என்கின்ற போது நான் இன்னும் சிறுவன் தான், போக போக பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொள்கிறேன், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் :)

தங்களது பெயர் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி

ஜி said...

Gud one... But expected climax :))

கோபால் said...

@ ராமலக்ஷ்மி

ஆகா!!!! இருபது வருஷத்திற்க்கு முன்னமே இந்த மாதிரி எழுதிட்டிங்களா??? நிச்சயமாக எனது வலை தங்களை எதிர்நோக்கும் :)))

கோபால் said...

@ஜி
expected climax??? வித்தியாசமா இருக்கும்னு நெனச்சேன், வந்தமைக்கு நன்றி.