தாயாக‌ நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாகம் - 1

"டேய்! என்னோட மொபைல பாத்தியா? " என்றான் சக்தி ஆனந்திடம்।

"டேய் பாவம்டா அந்த பொபைலு உங்கிட்ட சிக்கீட்டு ரொம்மத்தான் கஷ்டப்படுது। எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்ட, இது எல்லாம் ஒரு பொழப்பானு கேட்ட நீ இப்ப அதையே பொழப்பா பண்ணீட்டு இருக்க" என்று கூறியவாறு அவனுடைய மொபைலைக் கொடுத்தான் ஆனந்த்.

"டேய் அட‌ங்குடா எங்க‌ளுக்கு எல்லாந் தெரியும் நீ உன்னோட‌ வேலைய‌ ம‌ட்டும் பாரு" என்றான் சிவா।

ஆனந்த், சக்தி கற்பகம் பொறியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர்கள். அந்த பொபைல் இன்னைக்கு பொகைய காரணம் திவ்யா, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி.

இதோ இன்று சக்தி திவ்யா காதலுக்கு ஒரு வயது, அதிலும் இன்று காதலர் தினம். அதனால் தான் காலையிலேயே கல்லூரி போகும் முன்னரே இருவரும் கடலை.

சக்தி ஆனந்தை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி தனது வண்டியில் கிளம்பினான். "புரியாத உறவில் நின்றேன்... அறியாத சுகங்கள் கண்டேன்... மாற்றம் தந்தவள் நீதானே!!!". நந்தா பாடலில் சக்தியின் மனம் நனைந்து கொண்டுடிருந்தது. திவ்யா பெயரை உச்சரித்தான். உடல் முழுவதும் இதயமாகி துடித்தது. எனக்குள் எப்படி நுழைந்தாய். ஒரு வ‌ருட‌த்திற்க்கு முன் அவ‌ன‌து மன‌ம் சென்ற‌து.

மௌனம் பேசியதே சூரியாவை விட காதலையும், பெண்களையும் கிண்டல் செய்பவன் தான் இந்த சக்தி.

ஒரு முறை தனது நண்பன் காதலில் விழுந்த போது "டேய் மச்சா!!! இப்ப உனக்கு வயசு 20 அவளுக்கும் 20 எப்படியும் நீ அரியர் எல்லாம் முடுச்சு டிகிரி வாங்கறப்ப உனக்கு 23 வயசு ஆயிடும் அதுக்கப்பறமா நீ ஒரு உருப்ப‌டியான வேலையத் தேடி ஒரு நல்ல சம்பளம் வாங்குறப்ப 26 வயசு. அப்ப அவளுக்கு 4 வயசுல ஒரு குழந்தை இருக்கும் அதுக்கு நீ அப்பாவாக மாட்டா அங்கிள் ஆயிருப்ப !!! போடா போய் பொழப்ப பாரு... காதலுங்குற பேர்ல கேன்டின்ல அவளுங்க உட்காந்துட்டு இருப்பாளுக நீ பாதாம் பாலும் பக்கோடாவும் வாங்கீட்டு போய் கொடுத்து சர்வர் வேலைய பாரு" என்று கிண்டலடித்தான்.

ஒரு முறை தனது நண்பன் ஆனந்த் தனது தோழியை அறிமுகப்படுத்திய போது, தனது நண்பன் என்று கூட பாராமல் "முந்தனைய புடிச்சு ஓடுறதுக்கு ஏன்டா இப்பவே துப்பட்டாவை புடிக்கற? " என்றான்.

இப்ப‌டி நாட்க‌ள் சென்று கொண்டிருக்க‌ அவ‌ர்க‌ள‌து க‌ல்லூரியில் ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌ட‌த்தினர்। த‌லைப்பு "ஈவ்-டீசிங்கிற்க்கு கார‌ண‌ம் பெண்க‌ளா? ஆண்க‌ளா?". ஆண்க‌ள்தான் என‌ வாதாட‌ நான்கு பெண்க‌ளும், பெண்க‌ள்தான் என‌ வாதாட‌ நான்கு... இல்லை மூன்று ஆண்க‌ளும் ஒரு பெண்ணும் அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

தொடரும்...

2 விமர்சனங்கள்:

ஸ்ரீ said...

"உடல் முழுவதும் இதயமாகி துடித்தது.'

இந்த இடம் ரொம்ப சூப்பர். உண்மையாக அப்படித்தான் உணர்வார்கள் போலும். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். இன்னும் எழுதி இருக்கலாமே கொஞ்சம் சிறிய பதிவு போல தோன்றுகிறது.

கோபால் said...

யாருக்குங்க தெரியும் எப்படி உணருவாங்கனு??? :))))

ஆமாங்க ஸ்ரீ முடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சிறிய பதிவு போல தான் தோணிச்சு

போக‌ப் போக‌ ச‌ரி ஆயிடும் :)